புது நகரத்தில்..நகர்ந்த நாள்கள்!
ஜெர்மன் நகரத்தில்..!
நாள்கள் நகர்ந்தான் -
செய்கிறது..
நன்றாகவே!
மூன்று திங்கள் (மாதம்)
விசா இருப்பு காலம்!
வந்து-
மூன்றாவது திங்கள் (கிழமை) கடந்து விட்டது!
வெற்றிகரமாக இருபத்து
நாள்கள் கடந்தோடி..
புது வாழ்வு முறை
புது நடைமுறைகள்
புது தட்ப வெப்ப நிலை
மனித மனம் போல்
அடிக்கடி மாறுகின்றன!
வீடுகள் எல்லாம் அழகாக
இருப்பதாய் சொன்னேன்..
எதுவும் வாஸ்து படி இல்லை
ஆனா - வசதியாக
வசதிக்கேற்ப இருக்கிறது!
போக்குவரத்தில் - இங்கு
எல்லாமே - கீப் ரைட் தான்!
எல்லாம் வலது புறம் தான்
வலது பழக்கம் தான்..
நடப்பது சைக்கிள் போவது
எல்லாம் வலது புறமே!
இதை பார்த்து சொல்வது
சாலை யோர மரமே!
வாகனத்தின் ஒலிப்பான்
அதிகம் ஒலித்து கேட்கவில்லை..
நடை யெல்லாம்
துணை யோடு - அல்லது
துணைக்கு நாயோடு!
முதன் முதலில் - தனியாக
சிறப் பங்காடியில் - நான்
வாங்கிய அது
பாலும் (தக்காளி)பழமும்!
அப்புறம் - அது உங்களுக்கே
தெரியுந் தானே!
ஆடைகள் மேல் அக்கறை இல்லை
ஏய்! - இதை முதலிலே
சொல்லி விட்டாய்..
அது வேறு - நீட்டாக
இருப்பது பற்றி
இது - குறைவாக
இருப்பதைப் பற்றி..
ஆடை மேல் -அது போல்
மேல் ஆடையில்
அக்கறை குறை வாகவே..
உள்ளது!
அடக்கமாய் இருப்பது உம்
விதி மீறி -
அடங்காது தெறிக்க
விடுவது உம்
ஆவணப் படமாய் சில..
அதிக குளிரில் முழு
கவசமாய்!
வெயில் ஏற - வெப்பம் கூட
அதிக வெப்பத்தில்
ஆடையும் குறைகிறது!
ஒற்றை துணியில்
ஆண்கள்!
ஆயுத எழுத்து போல்
பெண்கள் உடை!
கலர் ஃபுல்லா
பார்பதற்கு -
கருப்பு வெள்ளையில்!
நடவாது கிடக்க
உடலில் வெயில் பட..
பூங்காவிலும் - புல்
வெளியிலும் காணலாம்!
கால்களா - கல் தூண்களா?!
ஆரோக்கியம் பேசும்
ஆடு தசை எல்லாம்
ஆடாதே..
சிக் கென்றும்
சில் லென்றும்..
சிலை யொன்றாய்
நிலைத்து - நிறுத்தி
பார்க்கும் கண்கள்!
நேற்றைய - சிறு மழையில்
நீள் முகத்தில்
எனது இரவும் - ஓய்வும்
அதிகமானது!
இங்கு -
வாரத்தில் ஐந்து நாட்கள்
மட்டுமே - அலுவல்
இரண்டு நாள்கள் விடுமுறை!
வியாபார கடைகளுக்கும்
ஒரு நாள் - ஞாயிறு
கட்டாய விடுமுறை.
ஞாயிறு சமையலை
சனி யே - முடிவு செய்யும்!
ஐந்து நாள்கள் ஓட்டம்
இரு நாள் கொண்டாட்டம்!
மலை ஏறவும்
மன நிறைவுக்கும்
வெளி பயணம்
விடுமுறையில் (வந்து)
கடந்து போகும் !
வீடு சுத்தம் செய்ய
ஒரு நாள்
சண்டையோ சத்தமோ
அவர் தம் மொழியில்!
ஆனா - வீடுகள் சுத்தமாகும்..
தேச நலன் போல்
தேக நலன் காப்பவர்கள்!
நல்லவை பல இருப்பினும்
நன்மைகள் பல இருப்பினும்..
மாப்பிள்ளை இவர் தான்
ஆனா - இவர் போட்டு இருப்பது
என்னது அல்ல
என்பது போல் தான்..
இங்கே நானும்!
இன்னும் வரும்..
அன்புடன்
தேவா.
Comments
Post a Comment