ஜெர்மன் நினைவில் இன்று..
ஒரு திங்களும்
முப்பது தங்களும்
கழிந்தன வே..
ஊர் சுற்றி பார்ப்பது
குறைந்தன!
மறந்தன
நினைத்தன..
மனம்!
நான் பெத்தது பிறக்கும் போதும்
எங்களுக்கு பிறந்தது
பெத்த போதும்..
கதறிய ஒலி
அழுகையின் மொழி
வலி மிகுதியாக வே
எனக்கு(ம்)!
அன்று - அவள்
சிரம்மப் பட்டாள்
இன்று - சிறைப்பட்டாள்
சிறைப்பட்ட ஆள்!
அன்பின் ஆழ் உள்நுழைந்தால்..
அதுவும் சிறை தானே!
இதை சொன்னாலும்
புரியாது
சொல்லியும் புரியாது!
பட்டு வரும் - அல்லது
பட்டதும் வரும்!
துணைக்கு வந்தவனுக்கு தான்
துயர் யெல்லாம்..
அத் துணையின் நிலை!?
மலரும் - பூவின் விரிவில்
விரிசலின் ஒலி
யார் அறிவார்?!
யாம் அறியோம்..
வாய் உறிஞ்சி
பால் அருந்தி
ஊன் வருத்தி - உயிர்
உயர்த்தி..
பயின்ற தோர்
பழகிய பாடம்
வழி வழியாக
பெரும் வலியாக..
வலிமையாக!
இங்கு -
என் பெயரோடு ம்
பெயரன் ஒடும்
நேரங்கள்..
சிலதை மறக்க செய்கின்றன..
பலதை நினைக்க
செய்கின்றன!
இங்கு - முதல் பெயரே
சொல்லி அழைப்பது இல்லை!
இரண்டாம் பெயராக
ஒட்டி வருவதை
உடன் வருவதை சொல்லி தான் - அழைக்கிறார்கள்!
மருத்துவ தினத்தில்
அதிகம் ஒலித்தது
என் பெயரே!
பெயர் சொன்ன..
சொல்லச் சொன்ன பிள்ளை!
ஈர் ஒன்பது
நாள்களுக்கு முன்
ஓர் இரவில்
ஒன்பது திங்கள்
காத்திருப்புக்கு பின்
கசிந்து ஒழுகி
ஆ....ண் உருவமாய்
புது உயிராய்
ஓர் உதயமாய்..
மகளின் மகவு
மகத்துவமாய்
மருத்துவ மனையில்!
அதற்கு முன்னிரவில்..
இன்னும் வரும்..
அன்புடன்
தேவா.
Comments
Post a Comment