எனதருமை தோழா!

யாரிடம் செல்வேன்..
தோழா!
இன்று - உனக்கான தினம்!
ஆனா- நீ இல்லை 
உன்னை காணாத தினம் 
அதனால் - எனக்கானதும்
அல்ல..
வேதனைகள் வேறு படும் 
இது- வேறுபட்ட வேதனை 
என்னுள்!
நினைக்காது இருக்க - இன்னும் 
மறக்க வில்லை..
மறந்து போக - நீ ஒன்றும் 
என் மறதி அல்ல!
பிரதி என்றெண்ணி 
உனை நினைத்தேன்!
பிய்த்து கொண்டு - 
என்னை விட்டு பிரிந்தாய்!
பிறந்த வருடம் காணும் முன்னே
நீ மரித்தாய்!
என்ன அவசரம் உனக்கு.
நீ!  தான் என்னை விட்டு 
மறைந்தாய் 
ஆனா - நான் என்னவோ 
உன்னை விட்டு மரித்த தாய் 
தவிக்கிறேன்..!
இன்று - உனக்கு ஒரு அகவை
கூட்டச் சொல்லும் தினம்!
உன் பிறவித் திருநாள்!
எப்படி கூட்டுவது?!
என்னை விட்டு பிரிந்தாய் 
பிரிந்த தால் 
ஒரு ஆண்டை கழிக்கலாம் 
என் ஆயுளில் இருந்து..
அது தான் சரியாக இருக்கும்!
மாறா நட்பு 
மறவா நட்பு - நம் நட்பு 
நீ! மட்டும் அதை மறந்தது 
ஏன் நண்பா!?
உனக்கு வாழ்த்துக்கள்.. கூட
என் மனதிற் குள்ளேயே..
மிச்சம் - கிறுக்கல் களாய் 
இத் தாளில் 
உன் நாளில்!
வாழ்த்துக்கள்..டா - நண்பா!
என் மோகா!

உன் தேவா.
21.07.24

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1