நெஞ்சு கணத்தது..!
அண்டை மாநிலத்தில்
அகால நிகழ்வு!
நிலச் சரிவில் - நீர்
ஆதிக்கம் சேர..
நீள் சரித்திர நிகழ்வு அது!
நேற்று இருந்த அது
நின்ற அது - குன்றாய்
கும்பலாய்..
இன்று அது இல்லை!
நாளை யது தட்டையா
அல்லது - குட்டையாய்
இயற்கையின் நீள் நாக்கு
அதுவும் பேச - சுட
தொடங்கி விட்டது போல்..
மரணங்கள் பலவிதம்
ஆனா - இது கொடுரம்!
இருக்கோமா - இல்லை யா
என்பதை - தெரிவிக்காது
அறிவிக்காத ஓர் நிகழ்வு!
இயற்கை யை - நீ
அழித்தால்..
அது நின்று - வெல்லும்!
அது உன்னை அழிக்க
நினைத்தால்..
நிதர்சனமாய் - நன்று
கொல்லும்!
அதன் எண்ணங்களில்
எண்ணிக்கை தெரியாது!
பாலர் - பாவிகள் தெரியாது!
பொறுமையின் உதாரணம்
இப்படி - பொறுக்காது
சீறுமா!?
சினங் கொண்ட சிங்கம்
மதங் கொண்ட யானை
குணங் கெட்ட பெண்
பொறுமை இழந்த மண்..
பலி அதிக மாக்கும்!
நாம் - இன்னும் அதில்
பலவீனம் தான்!
மீளா துயர் இது
யாருக்கு ஆறுதல் சொல்ல..
இது - யார் குற்றம்?!
யவர் தடுக்க இயலும்..
எது தடுத்திருக்க வேண்டும்
காப்பவர் மேய்ப்பவர் யாவரும் - அங்கு
அவர் தம் கண்ணுக்கு
தென்படவில்லை..
இந் நாளை கடைசி யாய்
நாளை யென ஒன்று
இல்லாத வாய்..
இறப்பில் தவறில்லை
ஏன் - எதற்கு - என்
தெரியாதே..
இது யாரை தண்டிக்க
யாரை கண்டிக்க..
இறந்த பின் மண்
மூடு வார்கள் !
இங்கு - மண் மூடி
இறந்தார்களே!
நீரின் கொடுரம்
நிலத்தை தாக்க..
நிதானம் இழந்த அது
மங்கையாய் மனிதனாய்
மண் சரிந்தது!
பலர் வாழ்வை சரித்தது..
அதன் வாழ்விலும்
நாளிலும் - இது ஒரு
சறுக்கல் போல்.. இன்று
என்று எழும்!
ஆயிரம் கோடி ஆண்டுகள்
ஆனாலும் - நிலை மாறுமா
உயிர் மீளுமா?!
ஆழித் தாண்டவம்
ஆடி தீர்த்தது..
ஆடியில் தீர்த்த அது!
மனித ஆணவம் அடங்க
அடக்க..
மீண்டும் ஓர் நினைவூட்டல்!
இயற்கையின் சீற்றம்
எதற்கான மாற்றம்!
மலை- மண் - இடமாற்ற
நிகழ்வு
பேர் அழிவாய்..
மாறிப் போயின - எல்லாம்!
இந்த -
ஓலங்களும்
புலம்பல் களும் எத்தனை
நாள்களுக்கு..
இது யாருக்கு புரிய!
ஈடு இணையற்ற
மனித உயிர்களின் - நிலை
இயற்கை
சீற்றங்களுக்கான - விலை!
அழகிய வயநாடு
உழுது போட்ட வயக்காடாய்..
உரமாய் போன உயிர்கள்!
மரமாய் மர்ம மாய் - போன
மனிதர்கள்!
யாருக்கு சொல்வது ஆறுதல்!
மடிந்தவர்கள் மன்னிக்க
வேண்டுகிறேன்!
அவர்களது ஆவி ஆன்மா
சாந்தி அடைய..
இறை வேண்டுகிறேன்
குரு வணங்கி!
ஆழ்ந்த வருத்தங்களுடன்..
தேவா.
Comments
Post a Comment