என்ன செய்யும் ..!

அடித்து 
நொறுக்கி 
எரித்து -
இ- தென்ன..
வன்மம்!
அழிய - ஒழிய
கண்ணீர் வழிய 
இது என்ன..
எண்ணம்!
மதம் வளர
வளர்க்க - காக்க
எத்தனையோ 
வழி வுண்டு!
அழித்து - ஒழித்து 
பிறர் - விலக்கி 
நீ! - எப்படி உயர்வாய் 
உன் மதம் - உன்னதம் 
எப்படி வளரும்!
உயிர்களை உரமாக்கி
உடமைகளை கரியாக்கி 
உரைத் திடுமோ..
உன் மதம் -
பெரி(ய ) தென்று..
நிலை உயர் வென்று!
தாய் போல் 
தாய் நாடும்..
தாய் மனம் ஒன்று!
கருவுற்று கர்வமுற்று
ஈன்ற தாய் 
உனை காண!
உதிரத்தில் 
பிரித் தெடுத்தா ளோ!?
இல்லை - 
தொன்னையில் 
வடித் தெடுத்தா ளோ..?!
நீ! 
செய்த - செய்யும் 
செயலை கண்டாலோ
காண நேர்ந்தா லோ..
மீண்டும் உனை
சேர்ப்பாளோ!
உன் அன்னை 
இல்லை -
சோற்றில் - ரொட்டியில்
விசம் வைத்துப் 
பார்ப்பாளோ..!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1