ஜெர்மன் - கடை ஞாயிறு!
ஒரு ஞாயிறும் - இன்னும்
ஒரு திங்களும்..
ஒரு டசன் தினங்களும்
பாக்கி உள்ளன!
உனை ப்ரிய ..
மனமில்லாது என்று
சொல்வதற்கு இல்லை!
இனி மறக்காது என்று சொல்ல..
இனிய ஜெர்மனியின் -
ஜென்டில்
கண்டதும்
அலோ! சொன்ன வயோதிக
பெருமக்களும்!
பாராது போன புது
ஜென்றிக் மறுமக்களும்
கால் சராய் கன்னிகளும்..
என்றும் நெஞ்சில்!
மறக்காது - மறவாது..
பலதரப்பட்ட நாய்களும்
வகை வகையான..
பக்குவமா பிடித்த
அந்த பாங்கு - கரங்களும்
கடக்க - நடக்க
கண் கொண்டு - கூட
பார்த்தே ரசித் திருந்தேன்!
பார்வையில் - வெளிப்
பாதையில்!
சொல்வதற்கு நிறைய உண்டு
அதில் -
சொன்னது கொஞ்சமுண்டு!
நிறைய கற்றுத் தந்தது..
கற்க சொன்னது!
விரை நடையும் - சிறு
ஒட்டமும்..
நீங்கா இடம் பெறச் செய்தன!
விட்டு சென்ற என் வீட்டின்
நினைவுகளை - எழு பத்து
நாள்களாக - எனை
மறக்கச் செய்தன - இங்கு
என்னையும் நகரச் செய்தன!
அந்த பறியாத செம்பருத்தி
ஒடியாத முருங்கை
சிரிக்கும் கொய்யா இலை
பசும் வேப்பந்தலை
எப்போதும் உன்னாத
சப்போட்டா பழம்!
அருகில் அருகம் புல்
அதனருகே சிறியா நங்கை
நந்தியா வெட்டை மலரும்
அரளி பூ வும்..
புத்தக வாசிப்பும்
புது சினேக நேசிப்பும்
என்ஃபீல்டு - பிடித்த
இரு சக்கர வாகனமும்
இன்னும் பல..
விட்டு வந்த விடயங்கள்
திடிரென நினைவுக்கு வர..
சற்றே கலைத்தது -
நூற்றுக் கணக்கான
பாட்டில்களின் ஒளி
செவிக் கேட்கும் -
நித்த மது - ஆர்வத்தின்
ஒளி சேர்க்கும்..!
அதுபோல் -
காட்சி களுக்கு பஞ்சமில்லை..
காண்பதற்கு தான்
நேர - வசதி இல்லை!
நினைவு தப்ப - மீண்டும்
அந்த உளுந்த வடை
வெங்காய போன்டா
பருப்பு - உப்புட்டு
கொத்து - பரோட்டா
வியழா சந்தை!
சிந்தை கவரும் - என்
சிவனும் - பெருமாளும்!
எனை காணா து
அவரும் இருப்பார்..
என் போன்றே தவிப்பார்!
என் கண்ணாடி டம்ளர்
காத்திருக்கும்
என் இதழ் - உரசலுக்கு
பிடி விரலுக்கு!
என் படுக்கையும் - தலை
அனையும்
நானின்றி தவித்திருக்குமோ
தனித் திருக்கும்..ஓ!
என் முற்றது முழு நிலவு
மூனு - மது பார்க்காமலே..
அலகு மலை
அடி வாரமும் - என் யடி
மறக்குமா!
வேறு பல விடயங்கள்
வேர்த்து இருந்தாலும்..
ஏய்! - நீ
விரும்பி தானே வந்த..
பின் ஏன் நொந்த!
புத்தி கேட்டாலும்
மனம் சிரித்து மழுப்பும்..
அங்கு இருக்க -
இங்கு பிடிக்கும்!
இங்கு இருக்க..
அங்கு பிடிக்கும்!
இது - எங்கும் உள்ளது தானே!
சல்லி கரண்டி வழியே
வான் பார்த்தது போல்
சிறு துவார அலைகள்!
அலையும் நினைப்பில்..
தேவா.
Comments
Post a Comment