புது வரவு.. புது கொடி!

அய்யா!
இன்று -
ஆக சிறந்த செய்தி..
நம் - இளைஞர்களுக்கு !
அண்(ண)ணாரது வெற்றி கழகம் 
கொடி கண்டது!
களிப்பில் வெற்றி உண்டது!
இனி உலக மெல்லாம் 
இளைஞர் உள்ள மெல்லாம் 
மஞ்சள் சிவப்பு 
வண்ணம் தான்..
ஆட்சி பிடிப்பது 
எண்ணம் தான்!
ஆகாயம் முட்டும் 
உயரும் சமூகம் தான்!
இனி-
யானைகளாய் பிளிறி 
மனம் பிடித்து ஆடுவர்..
மதம் பிடிக்காது!

இதுநாள் வரை உள்ள 
பிரச்சினைகள் - யாவும் 
இனி இருக்க போவதில்லை 
யாவும் - யாதும்!
நல்லதை நினைத்தே
நடுவோம் - நாற்று!
அது-
நேற்றைய கனவாகாது 
போகட்டும்!
உயர்வாக ட்டும் 
அரசியலில் - புது 
உயரமாகட்டும் நாளை!
நம்புவோம் - நாமும் 
பிற புது கட்சிகள் போல் 
இல்லாது போக..

உழுவாது விளையாது  எதுவும் -
உழைக்காது உயராது!
அரசு இயல் சிறக்க..
புது - அரசியல் வேண்டும் 
பிறக்க!
இது-
புது வகையா - அல்லது 
பொது வகையா!
இது பார்க்க தெரியாது 
பார்க்க பார்க்க.. 
தெரியுமா!?
பொறுத் திருந்து 
பார்ப்போம்..
நல்லதை வரவேற்போம் 
கை தட்டி! - அது
நல்லதா யென
 தெரியும் வரை..
பார்த்திருப்போம் கொஞ்சம் 
காத்திருப்போம்..
கை கட்டி!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1