படித்துறை!

கருங்கல் படியே..
கருங்கல் படியே!
கலங்காதே இப் படியே
நீ! 
கலங்காதே இப் படியே!
மிகு கால் பதிந்த - படியே 
பெரும் நீர் சுமந்த - படியே!
அடர் பாசம் யெல்லாம்
நெஞ்சோடு..
உனை - பாராது போவர் 
நஞ்சோடு!
இதை பார்த்து போவர் 
பலருண்டு!
ஆற்று படுகையில் 
ஆள் இறங்க..
நீர்! - ஏற
காத்திருக்கும் 
சிறு படிகளாய்!
ஆற்றின் இரு கரை யோரம் 
இரு கரம் போல..
காட்சி யளிக்கும் 
ஆனந்தமாய் பல் காட்டி!
நீர் மிகு புரண்டால்..
பாதிக்கும் படி 
மூழ்கினாலும் - வெளியேற 
வழி சொல்லும்!
நீர்! வற்றிப் போனாலும் 
உள் இறங்க 
உட்கார்ந்து பேச இடம் 
காட்டும்!
ஏனோ - என்னை
மதியாது போவார் 
அனா- மிதித்தும் மறந்து 
போவார்!
யாவருக்கும் உதவ
உறங்காதே இருப்பேன்!
இருந்தும் உயர் - எண்ணியது இல்லை!
என்னை ஏற -  இறங்க 
பயன் படுத்துவார்..
அதன் பின்னர் 
ஏற இறங்க கூட
பார்க்காது போவார்!
துணி தோய்த்து துவைப்பர் 
அலசி அடித்தும் வைப்பர்!
காது உரசி - கால் உரசி 
பேச அமருவர்..
பேச்சு விளங்காது போனால் 
என் மீது குமுறுவர்!
போகட்டும் போ..
என்னை பத்திர படுத்த வேண்டாம்!
பாழ் படுத்தாது இருந்தால் 
போதும்!
புதிதாக என்னை நீ-
உருவாக்க முடியாது!
அதை புரியாது 
உபயோகிக்கும்  - உன்னை
தவிர்க்க முடியாத என்னால்!
என் சாதி அக் கடவுள் 
அவன் உருவமாய் - மதிப்பீர்கள்!
அவன் சாதி நான் 
இங்கு உருக்கமாய்..
மிதிப்பீர்கள்!
கரையோடு என்னையும் 
கண் கொண்டு பாரீர்..
அக்கறை ரோடு!
ஆண்டுக்கு ஒரு முறை யேனும் 
எனை கழுவி 
கறை போக்குங்கள் 
அக் கறை காட்டுங்கள்!
அமர - தவம் - வேண்டி
அன்புடன் 
மேற் படியான்..
படித்துறை!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1