அவனே - அதிகம்!

சூது வில் தோற்றவன் 
சூழ்ச்சியால் தோற்றவனை விட..
சூழ் நிலையால் 
தோற்ற அவனே - அதிகம்!

காதலை இழந்தவன் 
காசை இழந்தவனை விட..
காலத்தை இழந்த அவனே -
அதிகம்!

அன்பால் வீழ்ந்தவன் 
ஆசையால் வீழ்ந்தவனை விட..
ஆணவத்தில் வீழ்ந்த அவனே - அதிகம்!

சினத்தால் அழிந்தவன் 
சிநேகத்தால் அழிந்தவனை விட..
சிந்திக்காது அழிந்த அவனே - அதிகம்!

உறவால் ஏமாந்தவன்
ஊரால் ஏமாந்தவனை விட..
உணராது ஏமாந்த அவனே - அதிகம்!

ஊர் அறிந்து - உலகறிந்து..
ஒன்றும் அறியாதே
 போன அவனே - அதிகம்!

அதிகம் பேர் ஆன போதும் 
இது போல் - 
ஆகி போன அவர்களே
அதிகம்.. 
என்பேன்!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1