தீ பெட்டி!
உசரம் கம்மிதான்
இருந்தும் -
உச்சியில் உசிரை வைத்து
மண்டை அதை கொண்டை
போல்..
உரசி - உயிர் பெற
காத்திருக்கும் தன்மை!
அதன் தனிமை
பலதுவாய் சேர்ந்தே - சிறு
பெட்டியில் அடக்க மாக!
அத்யாவசியம் அல்ல
அதன் தேவை!
ஆனா - வாழ்வியல்
அவசிய தேவை..
கால மாறுதல்
அதன் தேவையில்(ன்)
காரணங்களும் மாறுகின்றன!
அதற்கு -
நீர் ஆகாது - நமந்து
மரணிக்கும்!
நெருப்பு ஆகா - எரிந்து
உயிர் விடும்!
காற்றும் ஆகாது - உதவாது
பட படத்து மடியும்!
வெளி பார்க்க - ஊமையாக
மௌனித்து விடும்!
மண் பார்க்க..
பலரது கை பட்டு - மடிந்து
பரவலாக பதிந்து
மண்ணோடு தன்னைப்
புதைத்து கொள்ளும்!
மடியவே காத்திருக்கும்
துடிப்புடன்!
சூரியனுக்கு நிகர் இல்லை
சில நேரம்
சிறு சூரியனாய் உதவும்!
எனது காலை நேரத்-
தேவைக்கும் - தேநீருக்கும்
மாலை நேர பூசைக்கும்
பகையில்லா புகைக்க
உரசுவா னோடு - உரசாது
என்னோடு - இட தொடை உரசி..
எப்போதும் உடன் இருக்கும்!
அது இருக்கும் போது
மகிழ் வில்லை!
இல்லாத போது
வருத்த மளிக்கும்..
யாரை கேட்க
ஒரு வித படபடப்பு
ஒரு சில வினாடியில்!
சில பல - தேநீர் கடையில்
சிறு வியாபார கூடத்தில்
உடை உடமை யின்றி
அந்தரத்தில் தொங்கும்..
பாவமாக தெரிந்தாலும்
அதை உரச மனமின்றி
வேறொன்றை வாங்கி
பத்திர படுத்தும்!
சிறு நேர உயர் வாழ்வதற்கு
வெகு காலம் சவப்பெட்டியில்!
பிறப்பிடம் சிவகாசி என்றாலும்
பிறரிடம் நீ! - சுகவாசி!
நனையாது நசுங்காது..
பிற நாட்டில் உன்
மதிப்பு அறியார்..
நம் நாட்டில் நின்
மதிப்புக் குறையா!
தானாக பற்றாது
இருப்பினும் - அதற்கு
தீ பெட்டி!
என்றே பெயர்.
வாழ்வின் தத்துவத்தை
அதை விட யார் கூற இயலும்!
வாழும் நாள் அதிகமில்லை
சில மணித் துளி
உயிர் பெற்று
ஒளிர் வூட்டி - தன்னை
அழித்து
மற்றவர் தேவை
பூர்த்தி ஆக்க
மடிந்து மண்ணா கும்
மண்ணில் வீழும்!
தீ அளிக்கும்
தீங்கு தெரியாது!
உரசி பார்த்தால்
சுடராய் உயரப் பார்க்கும்!
உருவாகும் நேரத்தை விட
அது உயிர் வாழும்
நேரக் குறைவு!
ஆனா - அதன் வாழ்வு நிறைவு!
ஒரு காட்டை அழிக்கும்
வல்லமை கொண்டது..
ஆனா - தன் பெருமை
அறியா சிறு பெட்டியில்!
அதன் பெருமைக்கு
வணங்குகிறேன்
வாழ்த்துகிறேன்!
வாழ்க உரசுவான்
வாழ்க உரசுபவன்
வாழ்க வாழ்க தீ பெட்டி!
பலர் மனையில் - மனதில்
வைத்திருக்கும்..
வத்திப் பெட்டி!
தேவா.
Comments
Post a Comment