பழைய நினைப்பு தான்..

பாவா கடை 
தாளிச்ச சோறு!
பாய் கடை
பருத்திப் பால்!
டெண்ட் கொட்டாயின் 
முன் -
மூனு சீட்டு 
உருட்டல் கட்டை
உள் -
மணல் குவித்து 
தரை விரிப்பு
இடை வேளையில் 
கை முறுக்கும் 
கமர் கட்டும் 
சுட்டச் சோளம் 
சுருட்டலா அவித்த கடலை
குச்சி ஐஸ் 
குருவி ரொட்டி 
சீனி மிட்டாய் 
இப்படி -
பல.. பல..
நயா பைசா வில் 
நொறுக்கு தீனி!
சிலஷ ரூபாய் க்கு 
அரக்கத் தீனி..
அதெல்லாம் 
அந்த -
ஐம்பது காசுகளின் 
அராசகம்!
அழிந்தே போயின 
அழியாத நினைவுகளாய்..

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1