ஜெர்மன்- மருத்துவ மனை..!

அனேக நாள்களுக்கு பின்..
அரை சதம் 
ஐ - தச மது - அதுவும் 
நாள்களாய் கழிய..
ஓரளவு பழகி போனது!
ஜெர்மன் முழுவதும் 
சுற்றா விட்டாலும்..
இருக்குமிடம் சுற்றியே
பொழுது சுருக்கமாக 
போன அது! - அன்று 
கடையில் சொன்ன 
விடையம் தொடர்ச்சியாக 
இது-
முந் இரவு 
முன் இரவில் 
சிற்றுந்து பயணம்!
மழை வேறு 
வழி யெல்லாம் 
வலியோடு..
மகளின் முனங்கல் 
செவிக்குள் சேதாரம் 
விளைவிக்க..
இருந்தும் - கண்கள் 
பரவசமாய் வெளி நோக்கி 
இருள் விலக்கி..
வேடிக்கை!
வேண்டுவன 
வேண்டாத வை - என
எதையும் தள்ளாது
பருகி கொண்டை
இருள் நனைத்த 
மழையோடு..
அதை விலக்கிய 
சாலை வெளிச்சத் தோடு!
வேகமாக கடக்க 
திட்டு திட்டாக 
கட்டிடங்கள்..
திகட்டாத காட்சிகளாக!
மருத்துவ மனை செல்லும் 
வழியெல்லாம் - மனம் 
ஒரு நிலையில் இல்லை!
பரிசோதனை முடிந்து
திரும்பி வர
நள்ளிரவு ஆனது.
பிரசவ வலிதான்!
நேர மெடுக்கும் 
என்பத ஆல்.

தேவை இல்லாது - உள் 
நோயாளி ஆக - எளிதில் 
அனுமதிப் பது இல்லை.
நள்ளிரவு தாண்டியும் 
நங்கு இருட்டியும்
அன்று தான் பார்க்க 
நேர்ந்தது எனக்கு!
சாலை களில் 
போக்குவரத்து குறைவாவே 
இருந்தன..
இருந்தும்  - சில கார்கள் 
பயணிக்க 
ஆள் நடமாட்டம் கூட
அங்கு ஒன்றும் 
இங்கொன்றுமாய்
தைரியமாக நடக்க..
ஆங்காங்கே சிக்கனல் 
நிறுத்தங்கள்!
நால் முனை - 
மும்முனை சந்திப்புபில்
ஆளோ காரோ
இல்லாத இடத்தில் கூட 
ஒரு காரும் - சிக்னல் 
நிறுத்தம் தாண்டி 
செல்ல வில்லை!
யாரும் இல்லை -என
யாரும் - எளிதில் 
கடக்க வில்லை 
பார்க்க பெருமையாக இல்லை!
பொறாமையாக இருந்தது..

மருத்துவ மனை 
அதை விட 
எளிமையாகவும் 
எழிலாகவும்
நம்ம ஊர் நட்சத்திர 
விடுதிக்கு நிகராக..
சுகாதார தரத்தில் பவராக
காட்சி அளித்தது!
இங்கு மருத்துவ முறை 
மகத்தான முறையில்!
நூற்றுக் கணக்கான -
மருத்துவ மனைகள் 
ஆயிரக் கணக்கான 
மருந்தகங்கள் இல்லை!
அது - தேவை 
படுவதாகவும் இல்லை!
ஆனா - அவசரம் என்றாலும் 
அவர்களிடத்தில் 
சிகிச்சை பெறுவது 
கொஞ்சம் கடினம் தான்!

அவ்வளவு - விதிமுறைகள் 
நடைமுறை யாக
சிறு வியாதிகளுக்கு
மருந்தில்லை..!
உடற் பயிற்சியும் - சில 
ஆல் - யோசனைகள் 
மட்டுமே!
பேர் கால மருத்துவ மனை 
இன்னும் ஒரு படி மேல் 
பிரசவ அறை - அதன் 
அறிகுறிகள் சற்றும் இல்லாது 
பேணப் படுகிறது!
எதிரும் புதிருமாக 
நடை!
சிறு முனங்கல் 
சிறு அலறல்..
கூட்டம் இல்லை 
கூச்சல் இல்லை 
சுற்றத்தார் - கூட 
இருக்க அனுமதி இல்லை!
உடன் இருக்க ஒருவருக்கு 
அனு மதி!
பெரும் பாக்கியம் 
கணவருக்கே கிடைக்க..
உல்லாச பயணம் போல் 
வந்து போகிறார்கள்!
செவிலியர்கள் சேவை 
மிரள வைக்கும் 
அவை ஏய்..
பெரும் பங்கு வகிக்கின்றது!
கடைசி நேர ஃபைனல் 
டச்சு க்கு..
மருத்துவர் ஆஜர்!
செவிலியர்கள் மருத்துவர்கள் 
உதவியாளர்கள்..
அனைவரும் - 
குதி நடை தான் 
விரை - பரி நடை தான்!
நமக்கு - அது பெரும் 
ஆச்சரியமாக..
வாய் மூடி பார்ப்பதை 
வெகு சிரமமாக இருந்தது!
இதுவே மேற் சொன்ன 
அதுவே -
அடுத்த குழந்தைக்கு
ஆர்வமாய் -
 அவசியமாகிறது..!


இன்னும் வரும்..


தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1