Posts

Showing posts from July, 2018

காலம் சொல்லும் கலாம்!

அய்யா! உன்னை நித்தம் நினையா விட்டாலும்... உன்னத மானவர்களை நினைக்கும் போது-உன் முகம் நினைவுக்கு வரும்! உயர்வானவர்களை என்னும் போது-உன்னை நினைக்க வரும்! யாரேனும்- இந்தியா வல்லரசு ஆகு மென பேசும் போதெல்லாம்-உன் முகம் கட்டாயம் காட்சியாக மாறும்! தூய்மையான வர்களை நினைக்கும் போதும் உன் முகம் எ(ம்)ன் எதிரில்... எளிமையாக  வாழ்ந்தவர்களை எண்ணும் போது-நின் முகம் நிதர்சனமாய்... தெரியும்! என் கனவு மெய்ப்படும் போதெல்லாம் கவர்சியான உன் முகம் சிரிப்பில் வெளிப்படும்! ஊக்கமும் ஆக்கமும் பெற்றவர்களை கானும் போதெல்லாம்... சிறப்பாய் உன் முகம்! பேசா(து)த வெற்றியிலும் உன் வெற்றிப் பேச்சிலும் மனம் நிறைந்திருக்கும் அதில்- உன் முகம் மறைந்திருக்கும்! அக்டோபர் 15ந்தும் ஜுலை இருபத்தேழும் உன் நினைவு நிறைய இருக்கும் இதயம் நெருங்கி நிறைந்திருக்கும்! அறிவுக் கோவிலின் அனையா விளக்கே அன்பின் வடிவமே! அறிவுச் சுடரே மறையா உருவே மாறாத் திருவே... எங்கள் கலாம் அய்யாவிற்கு- தானாய் சலாம் செய்யும் கரங்கள்! அது- நன்றி கரங்கள்... அன்புடன்

நெல்சன் மண்டேலா!

கருப்பு இன காந்தி கருப்பர்களின் சாந்தி! கொள்கை ஏந்தி அவரின விடுதலை வேண்டி... பல வருடம் சிறையில் வாடி அக்கறை யில் ஒடி அறை இருட்டில் பாடி பெற்று தந்தார் கோடி- இன்பம் கூடிய சுதந்திரம்! அமைதி அகிம்சை அவரது சுக மந்திரம்! தென்ஆப்பிரிக்க தலைவர்... பின் ஆர்பரிக்க வளந்த வர் பிறரை அரவணைத்து உயர்ந்த வர்! நெல்சன்! பெற்றோருக்கு  நல்ல(சன்) மகன் மண்டேலா! தலைமை ஏற்றுக்  கொண்ட தாலே மறைந்த துயரம் மலர்ந்த சுதந்திரம் பெற்றதாலே... வெற்றி மகனாய் தென் ஆப்பிரிக்க தலைமகனாய் தன்நிக ரில்லா தலைவனாய் தலைவன் ஆனாய்! நாடு போற்றும் நாயகனாய் ஏகனாய்!  ஏற்றம் பெற்ற அந்த இனத் தலைவனுக்கு உவமை யேது எடுத்துச் சொல்ல-இன்று அகவை நூறு! ஆயிரம் பௌர்ணமி கண்டவர் ஆயினும் பௌத்திரம் கொண்டவர் ரௌத்திரம் கொன்றவர் சகோ தத்துவம் சொன்னவர் சரித்திரம் வென்றவர்! அவரை நினைந்துக் கொள்ள... நிரந்தரமற்ற உயர் சொல்லும் நிரந்தரமாய் அந்த உறவைக் கொள்ளும்... அன்பால் நட்பால் அவர் நடப்பால் உயர்வாய் உறவாய் அவரை உயர்ந்த வராய் தலைவனாய் தகப்பானாய் ஊர் போற்றும் பெருமை ஏற்றும் இன்னும் மறை...

ஆண்டவரே! காமராசரே!!

உங்களை ஆண்டவனாய் பார்க்கிறேன்... எங்களை ஆண்டவரே! இறையாய் பார்க்கிறேன்... நிறை கண்டவரே! கடவுளாய் காண்கிறேன் கடமை உள் கொண்டவரே... எங்கள் காமராசரே! ஆண்டவன் -அற்புதம் நீங்கள் அரசியலில் எதிர்பதம்...  கடவுளுக்கு எத்தனையோ பெயர்கள் உனக்கும் அது போல... இறை- உருவமில்லாது பல யிடத்தில்... நீங்கள்! நிறை உருவத்தோடு  தமிழகத்தில்! கடவுளை கண்டவர்கள் இல்லை உன்னை கண்டவர்களுக் கெல்லாம்- நீ கடவுள். இறை-மறைந்து இருந்தும் இருக்கிறார் நீ! இறந்தும் நிறைந்து இருக்கிறாய்! கடவுள் மறுப்பதற்க்கு கூட- ஆள் உண்டு! இங்கு உன்னை மறப்பதற்கு மறுப்பதற்க்கு ஏது வுண்டு! கடவுள் இருந்தும் கண்ணுக்கு இல்லாதவர் நீயும்-இருக்கும் போது உனக்கென்று ஏதும் இல்லாதவர்! அரசாள உருவாக்கியதில் நீ! ஆண்டவனுக்கு நிகர்... உன் கருணை அருள் எளிமை ஆட்சி ஆளுமை நிதானம் நிதர்சனம் அத்தனையும்-அந்த ஆண்டவனுக்கும் பொருந்தும்! உன் மரணம் மறுப்பதற்கில்லை ஆனால்- உன் மறைவு மறப்பதற்கில்லை! நினைக்க(வே) இத்தருணத்தில் நீ இருந்தால்... நான் அதிகம் பேசவில்லை... உன்னை அழைத்துக் கொண்டவனே கேள்-த...

மனதை தொட்ட...!

மழைத் துளி மண்னணத் தொடும்... மனித நேயம் விண்ணைத் தொடும்! நமக்கு- எத்தனையோ அநீதிகள் ஆணவங்கள் அகங்காரம் அராஜகம் அருவருப்பான அநாகரிகங்கள் அரங்கேறிய போதும்... நம்- கண்ணீல் பட்டும் காதில் கேட்டும் மௌனமாய் மென்று தின்றோம்... மனதில் தின்று கொன்றோம்! அவ்வப்போது-நம் அறியாமையை தட்டி எழுப்பும் சம்பவங்கள்... அறிந்ததும் தட்டி எழுப்பும் சந்தோஷங்கள்! அந்த தருணங்கள் இன்னும் தரணியிலே தேசம் தாண்டி நேசம் காட்டிய நேசங்கள் பறைசாற்றா பாசங்கள்... அவை- திமிர் இல்லா பக்குவங்கள் கோழைத் தனமில்லா தோழமை யோட(டு) பங்களிப்பு கள்... நினைக்கவே நெஞ்சம் நெகிழ்கிறது நெஞ்சு க்குழி நெருடுகிறது இனிதாய் வருடுகிறது இதயம் தொடுகிறது... இன்னும்-அந்த மழைக்கான காரணம் மழைத்துளி மண்ணை தொடவும் மனித நேயம்- விண்ணைத் தொடவும் தொடரட்டும் இதுப் போல்... உலக கால்பந்தாட்ட போட்டியில்-ஜப்பான் நேர்மையாய் தோற்றாலும்... தன் மேன்மை யால் வென்றார் கள்! தாங்கள் தங்கியிருந்த இடம் பார்வையாளர்களை தாங்கிய இடம் அத்தனை யும் சுத்தம் செய்த போக்கு தங்கள்- தோல்வி க்கு ஏதும் சொல்லாத சாக்கு! அழுகையுடன் ...

பெருமைகளில் மிச்சம்!

என் மண்ணின் பெருமைகளில் மிச்சம் உன் ஓட்ட வேகத்தின் உச்சம்- உலக தடதள போட்டி அதில்-உன் திறமை யை காட்டி... நானூறு மீட்டர் ஒட்டம் உனகிருந்த நாட்டம் அந்த தங்கம் உனதாகட்டும் உன் உயர்வு உருவாகட்டும்... த(வ)ந்த பெருமை இந் நாட்டிற்கே! சரித்திரத்தை சாத்தியமாக்கிய சகியே! ஹேமா தாஸ்! உன்- பெயரும் புகழும் ஓங்கட்டும் ஒளிரட்டும் ஒலிக்கட்டும் எங்கும்... ஒலிம்பிக்-ல் வெல்ல இது-உயர்த்தட்டும் உன்னை மெல்ல... இன்னும் வெற்றிகள்  பல- வெல்ல! அன்புடன் வாழ்த்துகிறோம்!