Posts

Showing posts from June, 2019

இனி சொல்லாதே...

நண்பா - நீ! என் கல்லறைக்கு வா... வாராது போ! தயவு செய்து காரணம் சொல்லாதே... அன்பரே - நீ! எனக்கு கடன் கொடு... கொடுக்காது போ! தயவு செய்து புத்திமதி சொல்லாதே... பெண்ணே - நீ! என்னை காதல் செய்... செய்யாது போ! தயவு செய்து - உன் கல்யாண சே தி (தே தி) சொல்லாதே... ஆ சானே - நீ! எனக்கு சொல்லித் தா... தாராது போ! தயவு செய்து உருப்பட மாட்டாய் என சொல்லாதே... அய்யா - எனக்கு வேலை கொடு... கொடுக்காது போ! தயவு செய்து லாயக்கு அற்றவன் என சொல்லாதே... அம்மா - நீ! எனக்கு பால் கொடு... கொடுக்காது போ! தயவு செய்து சொல்லி இறக்கம் கொள்ளாதே... துணையே - நீ! எனக்கு இணக்க மாய் இரு... இல்லாது போ! தயவு செய்து பொய்யாய் இராதே... மகனே - நீ! எனக்கு மரியாதை கொடு... கொடுக்காது போ! தயவு செய்து கொடுப்பது போல் நடிக்காதே... இறைவா - நீ! எனக்கு நிறைவை(வா) தா... தாறாது போ! தயவு செய்து இழி (இனி) பறவி தாராதே...

என்ன தவறு செய்தோம்...!

என்ன தவறு செய்தோம்! என்ன தவறு செய்தோம்... எண்ணத் தவறுதலாக எங்கு தவறு செய்தோம்! ஆலயங்கள் போல்  இங்கு - அநேக ஆஸ்பத்திரிகளில் கூட்டம்! நோய்கள் பெருகி நோய் இன்மை குறைய எது காரணம்! ஐம்பது ஆண்டுகளுக்கு  முன்பு கூட இப்படி இல்லையே இத்தனை நோய் பயம் இல்லையே... எல்லை இல்லா துன்பம் - எம் மக்கள் சந்திக்க எது காரணம்! கண்ணாடி அணியாத சிறுவர்கள் காண்பது அரிது! சர்க்கரை நோய் இரத்த அழுத்தம் இல்லாத வீடுகள் இல்லையே! இளம் வயது மாரடைப்பு இள வயது மரணம் நெஞ்சை பிளக்கும் செய்திகளாய்... கல்யாண சுகங்கள் கூட சுருங்கி விட்டது! குழந்தை இன்மை கூ டி வாழும் பழக்கமின்மை! திருமண திருப்பங்களாய்... பேரு கால பிரசவங்கள் - கூட சுகமாய் நடப்பதில்லை... வலிகள் - சுயமாய் அறிவதில்லை... பிரசவ இழப்புகள் இறப்புகள்  இன்னும்  இருக்கத்தானே செய்கிறது! வளரும் நாடு வளர்ந்த நாடு பெருமிதம் வேறு! தாயா சேயா - என கேள்வி வரும் போ தெல்லாம் மனித நிலை என்ன? மருத்துவத்தின் மகத்துவம் எங் கே! சமீப காலமாய் கர்ப்பிணிகளுக்கு சர்க்கரை நோய் இரத்த அழுத்தம் தை ரோய்டு என ...

உணர்வுடன் யோசிப்போம்!

வனம் அழித்து வளம் சேர்த்தோம்! வளம் சேர்க்க ஊர் வளர்த்தோம் ஊர் பெருக சாலை கேட்டோம்... வாகனம் போக வசதிகள் ஓங்க! வசதிகள் பெருக பெருக... வரப்பு அழிந்து வயல்லும் அழிந்தது! விவசாயம் இங்கு வீரசாவில்... களஞ்சியம் மெல்லம்  கடுகாய் சிறுத்தது! வளமில்லாத  வனமாய் வயல் இல்லாத நிலமாய் வழி சாலை யானது - அதுவே அரசின் சாதனையானது! அடுத்த வாரிசுகள் என்ன செய்யும்! வரகு அரிசி வேண்டாம் - ஆனால் வாய்க்கு அரிசி... உழவு வேண்டாமா  இல்லை - இனி அரிசி உணவே வேண்டாமா! யாசிக்காதீர்கள் உணவிற்கு! யோசியுங்கள் உணர்வுடன்... நண்பர் களே!

வருந்துகிறோம்!

வருந்துகிறோம்! அன்பர்! மோகனின் -  கிரேஸி நாடகத்திற்கு பின் கிரேஸி மோகனாய் வளம்  வந்தாய்! நகை சுவை தென்றலாய்... வீசும் போது நீ! புயலாய் உட்புகுந்து  அதில் உயரம் தொட்டாய்! உன் - நாடகமாக ட்டும் சினிமா வாகட்டும் தொடர் நகைக்கு பஞ்சமில்லை... உன் கை தொடர்ந்து  எழுத வஞ்சித்தது இல்லை! மாது வும் மைதிலியும் நீ! படைத்தவை தான் நாங்க பாடமாய் படித்தவை தான்! வயிறு வலிக்க  சிரித்ததும் பசி மறந்து பார்த்ததும் மன வலி போ க்க மாத்திரை யாய்  உன் நாடகங்கள் ஒளி தகட்டில்... நான் நிலை மறந்த நிலமை பல சமையம் உண்டு! உன் வார்த்தைகளின் வேகம் புரிய மீண்டும் மீண்டும் பார்த்தோம்! ஒவோரு முறையும் ஒன்று புதிதாய் புரியும்! சிரிக்க மட்டுமல்ல நீ சிந்திக்கவும் வைத்து உள்ளாய்! உன் சிரிப்பு வைத்தியத்தில் எங்கள் சோர்வை (சாவை) ஒத்தி வைத்து.. நீ முந்தி கொண்டாய் சாகா வரம் என்று இல்லாவிட்டாலும் உன் படைப்புகள்  சாதாரண மானது அல்ல... இனி மேல் உலகமும் சிரிக்கட்டும் சிறக்கட்டும்! உன் ஆவி ஆன்மா சாந்தி கொள்ள இறை வேண்டுகிறேன்! உன் பி...

இளமையுடன்... நீ!

நினைவிருகட்டும் மறவாதீர்கள்... இளமை உங்களிடத்தில் இருக்கு என்பதை வெளிகாட்டுங்கள்! கண் வீச்சிலும் காம பேச்சிலும் புத்தி கூர்மை யிலும் புது முயற்சியிலும் அனுபவ படிப்பிலும் தொடர் போராட்டங்கள் இடர் விழாத தேர் ஓட்டமாய் எது முடியுமோ அதை நன் செய் தினம் புன் செய் குரோதம் தவிர் கூட (டி) பழகு பேசி சிரி சிரித்து பேசு! இன்னும் இளமை உங்களிடத்தில் இருக்கு என்பதை வெளிக் காட்டுங்கள்! நினைவு இருக்கட்டும் மறவாதீர்கள் - அதில் நிறைவு இருக்கட்டும் தவறாதீர்கள்... வாழும் நாட்கள் கொஞ்சம் - அதில் எண்ணுங்கள்... அழகாய் இருப்பதாக அறிவாய் இருப்பதாக அறிதாய் எளிதாய் வெற்றியின் அருகில் வாழ்வியல் சுற்றி பருகி  - பழக அனுபவ தூண்கள் தாங்க... விழுந்து எழுந்த அறியாமை நீங்க சிறப்பின்  நீ! சிறப்பு என எண்ணுங்கள். நிஜத் திமிர் நிழல் தரும் நிச்சிய திமிர் உயர்வு தரும்! வல கை கொடுப்பது இடக்கை மறக் கட்டும் வாழ்க்கை என்பது கொடுத்து பெறுவது... விட்டு தருவது பெறுவது! இயந்த்ரமாய் இல்லாது  இயல்பாய் இயங்கி பழகு! அகம் சுகமாக சுத்தம் காக்க முக அழகு பெறும் நகம் ஒள...

ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்!

பிறை யது கண்டு நிறை வது கொண்டு இறை வழி நின்று... மறை திரு காத்து ஓர் திங்கள் முப்பது தினங்கள் நோன்பு எடுத்த அந்த - மான்புக்கும் இடர் யது பாராமல் தொடர் வது உம் கொள்கை! பெருந் தொழுகைக்கும் மனம் மாறாது சோர்வாகாது கடமை ஆற்றிய நண்பர்களே! அன்பர்களே - உம் அனைவருக்கும் எமது ஈகை பெரு நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் நலமுடன்... எங்கும் நிறைந்த இறை உடன்! என்றும் அன்புடன்.