Posts

Showing posts from April, 2022

பரவசம் ஆக்கும்... பார்க்க!

அன்பருக்கு நண்பரே! எதை விரும்புகிறது - மனம் ஏன் விரும்புகிறது...? மீளாத ஆசை முடியாத, அடையாத அடங்காத, நிகழாத பல... ஆசையாய் ஆர்வமாய் விரும்புகிறது விரும்ப படுகிறது! வேடிக்கை அல்ல விதையாகவே விளைகிறது! உதாரணமாக- திரையில் சண்டை காட்சி விரும்பிப் பார்ப்போம்! காரணம்- அது போல் நம்மால் முடியாது இயலாது! உயரே பறந்தோ உக்ரமாக வோ பல பேரை தாக்கி ஆவ தில்லை நம்மால் ( நம்ம ஆள்) ஆக!  அதைக் காண விரும்புகிறது மனம்! பார்க்கையில் பரவசம் மகிழ்வைத் தருகிறது! அது போல்- ஆபாச படங்கள்! ஆ! - பாச படங்கள்... சலியாது பார்க்கிறோம் பார்க்கும் போதெல்லாம் பகிர்கிறோம் - மகிழ்வை! ஏன் வித விதமான  செயல்கள் நீண்ட நேர செய்கை கள்... நம்மா(ளு)ல் ஆவ தில்லை நடவாது ஒன்று நடப்பதாய் காணும் போது... நம் மனம் விரும்புகிறது விரும்பி பார்க்கிறது! மூளை செயல் இழக்கும்போது சிந்தனைச் செல்கள் உறங்கும் போதும்... உணர்வுகள் மேலோங்கி உண்மைகள் மறக்க(மறந்து) உற்சாக மடைகிறோம்! அதைப் பெறவே ஊக்க மளிக்கிறோம்! இது போல் நிறைய சொல்ல லாம்... கப்பல் பயணம் கடல் அலை சந்திர பிம்பம் சர்கஸ் பார் தடைகள போட்டி கால்பந்தாட்டம் கிரிக்கெட் போட்டி பனி சரக்கு... ...

இது விபரீதம்... ஜாக்கிரதை!

இது விவாதத்திற்கு அல்ல என் வருத்தமதை சொல்ல! கடந்த நூற்றாண்டின் கடைசி சித்தராய் நாம் நினைத்த மூத்தோர் ஒருத்தர் இங்கே- அவரை முறைப்போர் இல்லை! பெரியவர் என பெயர் கொண்டு பெரிதாய் வல மந்தார் வயதை வாய்ப்பாக்கி வாய்த்த  போதெல்லாம் வார்த்தைகளை வசையாக்கி நாவினில் இசையாக்கி இன்னல்களுக்கு வழி சொல்லாது இன்னும் பல பேசி இருட்டை வெளிச்சமாக்க வெளிவந்தார் பழமாய்-  வலம் வந்தார் பலமாய்! நல்லதே என்றுதான் நா(மு)ம் நினைத்தோம் பின் சென்றோம் அவரது எண்ணம் வீணாவது போல் கடைசியில் உரித்தால் ஒன்றுமில்லா சில வெங்காயங்களை திராவிடம் தேசியம் நாத்திகம்... என வெள்ளித் தட்டில் தமிழ்திரு நாட்டிற்கு (மட்டும்) தந்துவிட்டே சென்றார் தரணி ஆள  தகுதியில்லாதோர் கைகளில்... பாவம் அவருக் கெப்படித் தெரியும் - இது உழைக்காது பிழைக்க வழி யென்று! முக்கு முனையிலும் எதுகை மோனையிலும் கவிதையாய் கதையாய்  தவளையாய்  தவழ விட்டு வாயால் வயிறு  வளர்த்தவர்கள் அனேகம் என்பேன்! கடந்தோடிய அக் கஷ்டகாலம் அதை  கையில் எடுத்தவரும் கத்தி கத்தி- கத்திக் கொண்டு அறுத்தவரும் மக்கள் மத்தியில் ஜனச் சட்டியில் போட... கண்டவர் கண்ணுக்கு...

சித்திரை முதல் நாள்!

இனிய சித்திரை திங்கள்! முதல் நாள் திருநாள் - நன்நாள் வாழ்த்துகள்! பிலவ- பலவை சொல்லியும் செய்தும் கடந்து போனது! கற்ற தென்ன...? காரிய மாற்றும்  முறையில் கவனி யாதே  போனோம்! உலக அரசியலில் உக்ரைன்- ரசியா யுத்தம்! உள்ளூர் அரசியலில் வீழ்ச்சி யும், தாழ்ச்சி யும் வளர்ச்சி யும் ஏது மரியா - மந்தம் இறுக்கமாக... வேறு வழியின்றி இணக்கமாக  தொடர் கிறோம்! அண்டை நாட்டு பொருளாதார வீழ்ச்சி ஆட்சி மாற்றம்... அறியவும் ஆவலுற்றே அண்டை வீட்டார் நலங் கூட அறியாதே போனோம்! மானுடம் மரித்து மனித நேயம் - கொஞ்சம் மிஞ்சியதை தொலைக்காட்சி யில் கண்டோம்! எங்கோ தொலைவில் சாட்சியாய் கொண்டோம்! நாளும் குறைச் சொல்லி தேசப் பற்றும் தேகப் பற்றும் மில்லாது போனோம்! பிறர் அறிய நில்லாது போனோம்! பெருந் தொற்று நோய் குறைந்த போதும் அதன் பாதிப்புகள் பலவும் நம்முடன்... நம்பிக்கை மட்டும் நாளை வளர்க்க நாமும் சேர்வோம் அதில்! போனது போக இனிதாய் பிறக்கும் சுபகிருத ஆண்டையும் ஆள... வாழ்த்தி வரவேற்ப்போம்! தேச நலமும் தேக நலமும் - கூட சுபமும், சுயமும் ஓங்க... உழைப்பும் ஒழுக்கமும் உயர்வைத் தரும்! பொய்காது மழை வற்றாத காவிரி - வைகை உள்ளூர் உற்...

இன்னொரு குடியிருப்பு!

பகுதி நேரக் குடியிருப்பு வாசியாய் நான்! - குடைக் கூலி இல்லாது அந்த பகிரி-புலனத்திலும் முக நூலிலும் சரித்திர நாவலிலும் கரைந்து போக காலங்கள் கடந்து போயின! பின்- காத்து நிக்குமா?! கொரானா காலக் கொடுரத்தில்... ஓய்வுக்கு ஒதுங்கிய நாட்களில் முனைந் திருந்தேன் என்பதை விட அகலாது நனைந்திருந்தேன்! பொழுது போக ஆரம்பித்த இவ்விடயம் இப்போது பொழுதே அதில்  தான்  கழிகிறது! கைப் பேசி  கையை விட்டு அகல்வ தில்லை! திட்டுக்கள் பல வாங்கி வசவுகள் வலுச் சேரும் போதும்... திடப்படுத்திக் கொண்டு சில வேலைகள் செய்த போதும் திகட்டாதே செலவாகிறது மிகுதி நேரம்! அவ்வப்போது  தொலைக்காட்சி யிலும் கொஞ்சம்! கொலைக் குற்றமா - இது குரல் உயர்த்தி ஒரு வேகத்தில் கேட்டாலும் ஒரு வகையில் - இது நேரக் கொலைதான்! எனக்கும் இது நேர என்ன செய்வது எப்படி தவிர்ப்பது தவிக்கிறது... பாரா முகமாய்  பல நேரம் இருந்த பொழுதும் பாவ மாய்தான் இருக்கிறது என்னைப் பார்க்கும் போது! பின், ஒரு சமயம் தொடாது தூக்கி  எறிந்தேன்! - அதை பதினைந்து தினங்கள் ஆ! கா - அது வத்து... என் கண்கள் பாதிப்பில் படிக்க முடியாமல் போன போது! என்ன செய்வது? சிரமந்...

தேநீர் சொல்லும்... காலை!

உம்! இந்தா பிடி  குடி... அன்பாய் ஆசையாய் நல்லதாய் துவக்கும்  நன்நீர்! அல்லது -  பாலும், தேயிலை சேர்ந்த வெறும் தேநீர்! டீ தான்- கைமாறும் போது சிரத்தையாய் ஒரு நாள் சிரிப்பாய் மறுநாள் சினமாய் வேறொரு நாள் சிரந் திருப்பி  ஒருமுறை குத்தலாய்,  குணட்டலாய் குணமாய்... இப்படி- வித விதமாய் செவி கேள ஒளிரத் துவங்கும் காலை! அன்றைய பொழுதை உணரத் துவங்கும்! ஆமாம்- இது ஒன்னு தான் குறைச்சல் அன்று, மனதில் ஏதோ புகைச்சல்! இது ஒரு கேடு மனம் பாடும் பாட்டு! எப்படி இருந்தது எப்படி இருக்கு... இப்படியும் ஒரு நாள்! நாளை தூள் வாங்கனும் ம்ம்ம்- சரி என்றால் தோள் குலுக்கி முகவாய் யிடித்து பதிலாய் போகும்! சலிப்பாய், சல்லட கண்ணில் பார்த்து முறைத்தே ஒரு நேரம்! காலை நேரக் குதுகுலமும் சில வேளையில் குளித்து வர ஈரச் சேலையில் துவங்கும்! சேவைக்கும்,  தேவைக்கும் காலை நேர தேநீரே தெரிவிக்கும்! அதுவே முதலாய் தீர்மானிக்கும்! நிறைய தீர்மானங்கள் தீர்க்கச் சொல்லும் வார்த்தைகளாய் மாதச் செலவு வெளியூர் பயணம் பிள்ளைகள் படிப்பு உறவுகளின் பிடிப்பு உரைக்கவும் உரசலாகவும் உம் மென்று வார்த்தை கள் குறைத்தும் விவாதமாய்...