Posts

Showing posts from September, 2023

மிலாது நபி திருநாள்- வாழ்த்துகள்!

இந்து வழி வந்தவர்  தன்(னி) வழி நின்றவர்!  இசுலாமு- புது மார்க்கம்  தந்தவர்  தன் மொழி யில்  சொன்னவர்!  ஈசன் வழியில்  ஈசாவிற்கு பின் வந்த தேவ தூதர்!  தன் பிறவியில்  நிறை கண்டவர்!  வான் பிறை வணங்க வழிபாடு சொன்னவர்  நிறையானவர் -  எங்கள்  இறையானவர்! மனிதனும் கடவுள்  ஆகலாம் ... மறை சொன்னச் சித்தர்!  முறை வகுத்த  இசுலாத்தின் நாயகர்!  முகமது நபிகள் நாயகம்!  அவர்களது  பிறவித் திருநாள்  இம் மிலாது நபி திருநாள்!  எல்லா(ம்) சொன்ன அல்லா  அவர்களை வணங்குவோம்  வாழ்த்துவோம்!  தன் வழி  நின்றவர் களுக்கு  நல் வழி சொன்னவர்!  போற்றி புகழ்வோம்!  அம் மார்க்கம்  சார்ந்தவர்களுக்கு  வாழ்த்துகளை பகிர்வோம்!  வாழ்க!  வாழ்க! 

இந்து- மதம் அல்ல...!

இந்து மதமே - அல்ல!  இந்து- மத மல்ல!  இந்து- கலாச்சாரம்!  வாழ்வியல் முறை  வாழ்வு இயல் தத்துவம்!  அதற்கு தோற்ற மில்லை  தலைவ ரில்லை  நிறுவனரு மில்லை! அண்டம் பேரண்டம்- முழுக்க  அருளாட்சி செய்யும்  ஈசனால்  ஈசர்களால்... உருவானது!  பின் தோன்றிய  மண் ஈசர்களால்  உருவக மாக்கப்பட்டது!  இதை இழிவாக பேசி  ஒழிக்கவும் முடியாது  அழிக்கவும் முடியாது! இந்து- சார் பற்றது  எதையும்- சாரா -அது ஊற்று!  அல்ல அல்ல  குறையாது  சொல்லி மாளாது  முழுமையாக  சொல்லவும் முடியாது பருக பருக- பெருகும்!  நீயும் நானும்  ஒன்று  சிவமும்(கடவுளும்)- நாமும்  ஒன்று தான்!  நிலை தான் வேறு!  பிறக்கும் எல்லா  உயிர்களும்... பிறப்பால் அனைவரும்  இந்து தான்!  இதற்கு- என்றும்  முடிவு இல்லை  ஒன்றான வடிவும்- இல்லை  போற்றி  காப்போம்  போற்றா அது- போனாலும்  தூற்றா யது இருங்கள்!  நன்மை ஆகும்  நம்மை ஆக்கும்!  மூப்பு தான்  கணக்கிட்ட வயதில்லை  ...

எம் மண்!

எம் மண் எம் மக்கள்  எம் நாடு  எம் மொழி  எம்  கோயில்  எம் கடவுள்... ஆனா - பூசை முறையும்  மொழியும்  வேறு மொழி யிலா!  வேதனை அடைகிறேன்!  வே( way) தனை... தேடுகிறேன்!

உதவி செய்... அரசே!

திருக் கோயிலில்  குடமுழுக்கு  - எம்  தாய் மொழி  தமிழில்  நடக்கட்டும்!  அல்லது  -  திரு நீதிமன்றத்திலும்  திரு காவல் நிலையத்திலும் வழக்குகள் - உம்  சேய் மொழி யில்  தொடரட்டும்... உதவி செய் தமிழக  அரசே!

எம் மதம்

துவக்க மறிந்த  பிற மதம்  தலைவரை தேடும்  அது நாடும்!  துவக்கமே அறியாத  எம் மதம்  தன்னைத் தேடும்  தன் நிலை நாடும்!