Posts

மகளுக்காக...

என் முதல் முத்தத்தில் பிறந்தவள் நீ! நான் மறுமுத்தம் பெற... என் உயிர் சுத்தம் செய்தவள் நீ! நான் சத்தமாய் சொல்ல... என் விருத்தமாய் போனாய் நீ! நான் வருத்தம் மறக்க... என் சுகந்தமாய் ஆனாய் நீ! நான் சுகம் தன்னில் திளைக்க... என் சுடர் ஒளியாய் சுற்றினாய் நீ! நான் ஜோதியாய் ஒளிர்க்க... என் தேடலில் கிடைத்த தேவதை நீ! நான் வாடாது சிறக்க... என் எண்ணங்களின் வண்ணமாய் நீ! நான் உண்மையை(யாய்) உரைக்க(இருக்க)... என் சௌகரிய(க) சௌந்தரியம் நீ! நான் சங்கடங்கள் மறக்க... என் உயிரின் ஒலியாய் நீ! நான் என்றும் ஒலிக்க... என் அரும் பசியின் உணவாய் நீ! நான் இறவாது இருக்க... என் நெஞ்சுக்குள் என்றும் நீ! நான் என்றென்றும் சுவாசிக்க... என் செல்ல மக(ளே)ளாய் நீ! நான் தினந்தோறும் பிறக்க...

பாரதி நினைவு தினம்!

வாழ்க பாரதி! வந்தனம் எங்க சாரதி! சுதந்திர தாக்கத்திற்கு உங்கள்  பாட்டும் ஒன்று... அந்த தாக்கத்தில் எங்கள் நினைவில் இன்று! பதினொன்று ஒன்பது-ல் பதியும் உன் முகம் நன்று என்பது அறிந்த ஒன்று! என்றும் நிலையாய் ஒங்குக உங்கள் புகழ் ஒலியாய் ஒலிக்கட்டும் எங்கள்- அகல் விளக்காய்  விளங்கட்டும்... அகலாத ஒளியாய்! நிலைக்கட்டும்...

இனி காதல்-எதிர்ப்பு... இல்லை!

இனி- காதல் எதிர்ப்பு கலப்பினத்திற்கு இல்லை! ஓர் இனத்திற்கு தான்! நல்லது- நாளை நம்பிக்கை யை சீர்குலைக்க... பிறப்பு விகிதாசாரம் குறைய துவங்க... வம்ச விர்த்தி வத்திப் போக... புத்தி கெட்டு வழி மாற... திருமணத்தை புறந்தள்ளி தடம் மாற... அலங்காரமற்ற அங்கிகாரம் அவமானமாய் அரங்கேற... போக்கயற்ற சில பேருக்காக போர்வை போர்த்திய நீதி! பயம் எழுப்பும் பீதி!! அப்படி யே கொஞ்சந் தூரந்தான் - இதையும் செய்தால்... செய்ய நீதிமன்றம் அனுமதித்தால்!? பலகாரம் உண்ணுவதுப் போல் பலதாரம் மணக்க... வயதுக்கு வராது போனாலும் வாலிபம் இருந்தால்... பாலியத் திருமணம்! இஷ்ட்டப்பட்டு சேர-இனி கஷ்டப்பட தேவையில்லை கள்ளக்காதலுக்கும் அங்கிகாரம்! இனி- இந்திய கலாச்சாரம் காண்பதற்கு அல்ல! முந்தைய செய்திகளாய் வாசிக்க மட்டும்! வினோதமான தீர்ப்பு விபரீதமாக வர.. இது- விபரீதமான தீர்ப்பு வினோதமாக போகும்! விவாத மேடையில் இதற்கு விடைகாண்போம்! விவாதத்திற்காக சிலர் வாதிக்க கூடும்... கஸ்தூரி யின் கருத்து என்ன கொடுமை! அதற்கு தொலைக்காட்சி யை தொடர்ந்து காண்போம்! நாசமாகி(ய்) போவதென முடிவெடுத்தா...

இ-ஒரே எழுத்து தொடக்கம்...

இயலாமை இன்றி இயங்க முயன்றால் இல்லாது போகாது இன்பம்! இதுவரை தோற்று இனிமே(ல்)  முயன்று இயல்பாய் பெற இதர பல வெற்றிகள் இவ்வாழ்வில் இயற்றிடுவோம்... இன்னல் பல போக்க இறையோடு சேர்க்க இல்வாழ்விலும் இன்பம்- இனிதாய் பெற இளமையாய் வாழ்! இயற்கையோடு சேர் இரண்டில் ஒன்றாய் இருப்பது நலம்! இகழ்ச்சி மற இதழ்கள் பிரி-நல் இதயங்களை பெற இனியவை போற்று இருப-தாய் இரு இருப்பதைக் காத்து இரெட்டிப்பாய் பெறு இலட்சினை பதி இலட்சியமே கதி இருள் அகல இடையூறு குறைய இன்னது நல்லதென இயம்பி பழக இவ்வாறு எல்லாம் இனிதுவக்கும் இனிய நாளில் இனிதாய் துவக்கி இனிப்பாய் முடிய! இலக்குமன பாசம் இராமரை காக்கும் இராமர் யல்ல-நீ இராணுவம் காக்க இரணியன் யல்ல இறைவனை கொல்ல இதைச் சொல்ல இராவணன் யல்ல இலங்கை யை இள நங்கையை இழக்க இருந்தும் இறையான்மை காக்க  இந்தியனாய் இரு... இல்லம் காக்க இனியவனாய் இரு! இங்கீதம் கொள் இஷ்டத்தை வெல்! இறைப்பை நிறப்ப இழிவாய் நடவாதே இழிவை நாடாதே! இயந்திரமல்ல -நீ இயங்கிச் சாக இலவமல்ல இயங்காது போக... இலுப்பை போல் இளநீர் போல் இனிப்பாய் இன்சுவையாய் இ...

விழி! தானம்

விழி வழி-வலிந்தோடும் நீர் மண்ணை நனைப்பதில்லை அது- மரணத்தை நினைப்பதில்லை! மனம் அழுதாலும் தேகம் வலித்தாலும் விழி! விறைந்து மூடும் நிறைந் தோடும்... சுகமானாலும் சோகமானாலும் சொர்க்கமோ சோதனேயோ அது- விழித்து தேடாது விளிக்க கேளாது மூடிக்கொள்ளும்! தேக சூட்டிலும் மனச் சோர்விலும் அதற்கு பங்குண்டு... அது- தாங்காது தங்காது தன்னார்வோமோ தன்நலமோ தெரியாது! அழுக்கு பிழையாய் வெளித்தள்ளும் வடியும் நீரில் சினந்து கொள்ளும் சிறிது சிவந்து கொள்ளும்! இன்றியமையாதது இரண்டு இமையானது தாளாத போது மனம் நொருங்கச் செய்யும்-விழி சுருங்கச் செய்யும்! அது- தவமோ பலமோ முகத்த்திற்கு ஆனால்-பிரதியாய் பதில்யளிக்கும் அகத்திற்கு! எலும்பு முறிவு ஆராப் புண் தீரா நோய் கடும் வார்த்தை சுடு சொல் மாறா வடு மறப்பதில்லை எதுவும் வசந்த காலம் மட்டுமல்ல வருத்தக் காலமும் அது காணும்! வார்த்தை வேறுப்பாட்டில் விழி யாற்றும் மொழி அலாதியானது! புரிதலாய் அது புரியும் அசைவு(ம்) சத்தமில்லாது அதன் இசைவு(ம்)... உச்சத்தில் இருபதால் மட்டும்-அது உசத்தி அல்ல உயிர் பிரியும் வரை உறவாடுதே உரையாட...

பலம்...!

கை இழந்தோனுக்கு கால் பலம்! கால் இழந்தோனுக்கு கை பலம்! உடற் நலிந்தோனுக்கு புத்தி பலம்! வாய்மைக்கு செய்கை பலம்! வாழ்க்கை க்கு நேர்மை பலம்! வெற்றி-அனைத்திற்கும் மன(மே) பலம்! சித்தம் கலைந்தால் சிரிப்பு பலம்! சிரிப்பு தொலைந்தால் யேது நலம்!

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

ஆச்சரிய குணம் ஆசிரியர் இனம்! ஆசான் நிலை அறிந்து பெற்றாரோ அதிர்ஷ்ட்டத்தில் பெற்றாரோ... கற்ப்பவர்களுக்கு உற்ற துணை கடவுளர்களுக்கு இணை! கற்போர்கள் அதை நினை... எத்தனை துயர் தனக்குள்ளே இருந்தாலும்-இடர் பல தெரிந்தாலும் தள்ளாது நிற்பர் தன் நலன் மறப்பர்! வலி பல இருந்தும் வழி சில காட்டியவர் கடமையில் கண்ணாய் கரும்பலகை முன்னால் விரல் ஆட மொழி பேசும் கிளி அன்றோ-அவர் பொருட்டு கேலி உண்டோ! எத்தனை ஆண்டுகள் தடை யில்லாது மடை கொள்ளாது படை  வெல்லாது பகை சொல்லாது பாடம் சொல்லும் பாத்திரம் பொறுமையில் அவர் சமுத்திரம்! எத்தகைய உயர்விலும் உயர்வின் மத்தியில் சிறு துளியாய் சிந்திக்கும் - அவர் நினைவு... எவருக்கும் உண்டு! அவர்தம் பெருமைக்கேற்ப வாழ்ந்தவரும் தாழ்ந்தவரும்- வழி தவறி போனவருக்கும் பொதுவாய் தான் கற்பித்தார் அதுவாகத்தான் சிறப்பித்தார்! சிதறிய கல்லாய் அற்பமாய் போகாது செதுக்கிய கல்லாய் சிற்பமாய்... சிகரம் தொடாது போனாலும் - நாம் சிரமம் தொடாது போனதற்கு... மேலோங்கிய மேலோர் அவர்- மேன்மை போற்றுவோம்! மேகங்கள் கூட்டமாக போனாலும் மழைத்துளி  தனியேத்தா...