கட்டளையா நினையாதை!
கட்டாய யேது மில்லை கட்டளை யேற்க காரணமின்றி காரியமில்லை கட்டுப்படு நோய் கட்டுப்படுத்த! கர்வத் தெளிவோ கவுரவத் தோரணை யோ ஏற்பதற் கில்லை! பிறர் பாதிக்காது ஏதும் செய்யலாம்... நோய் தொற்றுக் கொண்டாள் உன் பாதிப்பு பிறருக்கு மன்றோ! யோசியாது எதையும் செய்யாதீர்... தெளிவு கொள் நிலையறிந்து உணர்வுகொள்! தேவையன்றி வெளித் தேடல் வேண்டாம் அரசு சொல் கேளாது பின் குறை கூறுவது நியாய மாகாது... இது- சோசம்பாய் இல்லாது... வேம்பாய் கசக்குந்தான் மருந்தென நீ அறிந்தால் விருந்துண்ண தோனாது! முடியாது தோற்று வெளி சென்று நோய் தொற்றி... உள்ளிருந்து உயிர் காப்பது உன் உறவை காப்பது நல்லது! நட்பாய் பல செய்தி நானும் சொல்ல நண்பா நீயும்... திட்டமிடாது திரிய வேண்டாம் தீங்கு தேடி அலைய வேண்டாம் அரசுக்கு ஆதரவு கரம் இவை அனைத்தும் உனக்கு உதவும் புறம்! நாட்டிற்கு நன்றியா செய்... உன் வீட்டிற்கு கடமையாய் செய்... கட்டளையாய் யேற்பது கஷ்டந்தான் கடமையென கொள் காரணமின்றி எவ்வித காரியங்களு மில்லை! எல்லாம் நன்மைக்கே இதுவும் கடந்து போகும்! இன்னலன்றி இன்னுயிர் காக்க இல்லமே திருக்கோயில் இறை வணங்கு நிறை உனக்கு குரு போற்றி மனங் கூடி பிராத்த...