Posts

வைராக்கியம்!

என்ன அற்புதம் என்ன ஒரு அழுத்தம், அர்த்தம் என்ன ஒரு ஆணவ எழுத்து அருமை! எண்ணத்தை எழுத்தாக்கி வார்த்தைகளில் வாழ்க்கையைச் சொன்ன எனதருமை பாலகுமாரா! பெரும்பாலும் நினையாது கடவாது என் எண்ணம்! - உன்னை சமீபத்தில் படித்தது படித்து பிடித்தது வைராக்கியம்- தெளிவான பிடிவாதம் கோபமற்ற உறுதி...! ஆகா! என்ன ஒரு விளக்கம் எல்லோரிடத்திலு முண்டு எல்லோருக்கு முண்டு! எப்படி- பிடிவாதமாய் பிடி-என் வாதமாய் சொன்னீரோ... குழப்பமற்று  யோசிப்பில் சோர்ந்து சுருங்கி விடாது சுயம் கெடாது மாற்று யோசிப்பின்றி தெளிவாக, தெளிவான பிடிவாத(மாய்)மாகவும் சார்பற்ற நிலையில் எங்கும், எதிலும்-சாராது சார்ந்து நோகாது சீர்தூக்கி சிந்தை கலங்காது, (மாறாது) நினைத்து மாறாதும் நினைவிழந்து மாறாமலும் நிலையாய் நம்மை நிலை நிறுத்தி உறுதியுடன்... அட, அடா என்ன தெளிவு எப்படி ஒரு வார்த்தை உன்னதமான விளக்கம் உண்மையுங் கூட...! சத்தியமது உன் வார்த்தை - உச்சத்தில்! சாத்தியமா யது என் வார்த்தை - அச்சத்தில்! எண்ணப் போராட்டம் என்னுள்... ஆலோசிக்கிறேன்- மனதோடு ஆராய்கிறேன்... ஆராதிக்கிறேன் - உம்மை ஆமோதிக்கிறேன்- உம்மோடு விடை தெரியா விடையங்கள் பல... என்னுள்! அதி...

ஆவணி சதுர்த்தி யில்!

பார்வதி மைந்தா சிவகுமரா! மூத்தோனே முதற் கடவுளே! ஆற்றங் கரையிலும் அரச மரத்தடியிலும் குளக்கரையிலும் அரசு வேம்பு யடிலும் முச்சந்தியிலும் முக்கிய யிடம் பெற்றவனே! எல்லா இடங்களிலும் முன்நிறுத்தி மூக்கு வுடை படுபவரும் நீயே! என் போல - நீயும் அடியேன் போல் ஆண்டவனும் நீ! அவ்வப்போது அவதி படுவதுண்டு! அன்றைய பெரியார் முதல் இன்றைய சிரியோர் வரை உன்னிடத்து மோதல் தொடர்கிறதே - தொடர் கதையாய்... தெய்வங்கள் பலவுண்டு அதில்- உனக்கென்று தனி குணமுண்டு! அடைத்(ந்)த ஆற்றை திறந்து விடுவாய் ஆழ்கடல் நீரில் கரைந்தும் விடுவாய்! வீண் யென நீ! விலகிப் போனாலும் விடுவதாய் இல்லை உன்னை! ஆவணி சதுர்த்தி யில் ஆடம்பர பண்டிகை  உனக்கு என்றும் - கேள் விநாயக ரே! இன்று- கேள்வின் நாயகரே உமக்கு விழா இல்லை! எதிர்த்து பேச எவர்க்கும் விலா இல்லை! கொரானா தான் காரணமா அல்லது கொடுர மனந்தான் காரணமா?! நான் அறியேன் இதை- உன்னை யன்றி யார் அறிவார் பிள்ளையாரே! இதில் மகிழ்ச்சி மங்காது மாறாய் பலரது  இல்லத்தில் பொங்கும்! உரிமையை விட உயரியது எது! கடமையை விட கஷ்டம் ஒன்றும் பெரிதில்லைவே... இல்லத்தில் கொண்டாடலாம் என்றவுடன்- ஒரு சிறு சந்தேகம் ஒரு நின...

சுதந்திரம் தினம்- போற்றுவோம்!

சுதந்திர தினம் போற்றுவோம்! சுதந்திர தின மெங்கும் போற்றுவோம்! எப்படி கிடைத்ததென  தெரிந்து - சுதந்திர ம் போற்றுவோம்! எதற்காக கிடைக்கப் போராடினோம்... அறிந்து போற்றுவோம்! வீரமாய் வித்திட்டு போராடிய வீரர் கள் நினைத்து சுதந்திர தினம்  போற்றுவோம்! போராட்டத்தில் உயிர் நீத்த உத்தம தியாக  செம்மல்களை நினைந்து சுதந்திர தினம்  போற்றுவோம்! அன்று நாடு பிரிய அந்த நல்லவர்களும் நம்முடனே என நினைந்து நினைத்து  சுதந்திர தினம்  போற்றுவோம்! வீனர்களிடம் சிக்கி வியாபாரமாகி போன(து) சுதந்திரம் - தினம் எண்ணிப் போற்றுவோம்! கொள்ளை, கொலை கொள்கை மாற்று(ம்) வியாபாரங்கள்... கயவர்கள், கள்வர்கள் தாய்நாடு மறந்த இனத் துரோகிகளுக்கும் இடங் கொடுத்த சுதந்திர ம் செஞ்சு வலிக்கப்  போற்றுவோம்! பத்திரிகை தர்மமென ஆட்சிக்கு தகுந்து கட்சி சார்ந்து மாயை மங்காது பருகும் சுதந்திர ம் பலம் நினைத்துப் போற்றுவோம்! கல்வியை காசாக்கி காதலை சாதி மோதலாக்கி முயங்கும் ஓர் தனிக்கூட்டம் இவர்களுக்கான சுதந்திரம் வருந்திப் போற்றுவோம்! இன்னும் பிற இன்னல்கள் பல எழுத்தில் சொல்லா  வண்ணம் - எண்ணம் தாங்கா எத்தனையோ கொடுமை...

நம்பி பற்று...!

என்று உனக்கு நிறைவு தரும் நிம்மதி வரும் நிலைமாறா நினைவுகளிலும் நிஜங்களிலும் நிராசை கடந்து நித்திய யோசனையின் நிழல் அமர்ந்து கரவமற்ற காரியமாற்ற கண்ணியத்தின் கனம் பொருந்தி கட்டுபாடாற்ற எதிர் வினைகள்- நீக்கி ஏளனம் கானாது ஏங்கி நோகாது ஏற்றம் நம்முள் மாற்றம் - மாறவே! புரிந்துணர்ந்து உணர்ந்து புரிந்து வாசல் தோறும் வாடிக்கை தான்... பிறர் வாசல்  நமக்கு- வேடிக்கை தான்! இங்கு வேதனை கள் விற்பனைக்கு அல்ல! வேண்டாதாய் தூக்கி சுமந்தோம் நல்லவைகள் பல இருக்க அதை தடுத்து பிரி தெடுக்க... எங்கு பயின்றாய் எங்கும், எதிலும் குறை காண... குடில்ஒண்டி குடிக் கொண்டு குறை கூறி குமுறிக் கொண்டு நாட்கள் கடந்தன ஆண்டுகளாய் ஆண்டவனைக் காணா அடிமைகளாய் தானே இன்னும் சில மணித்துளிகள் கூட நாட்களாய் உருண்டோட உத்தேசமாய் உன்னில் உயர்வாய் தோன்றிய எண்ண மெல்லாம் உணராதே போகுமோ காலம்! நாளை விடியலில் நம்பிக்கை உண்டு விடியும் பொழுது நல்லதாய் புலர புலம்பல் கேளாது அது- செவிக்கு வாராது கண் கெஞ்ச காலமஞ்ச காலங்களும் பாதை மாறும் இங்கு- நிரந்தரம் எது?! தங்கத்தின் தயவில்தான் தண்ணிறைவா! அதன் மோகத்தில் அலையாது கால்நடையில் போட்டால் கூட நிலை மாற...

அன்பு ரசிகனாய்...!

கர கர குரலும் குறு நகை குறும்பும் சொல்லாடும்- உம் சொல்லி லாடும் தமிழும் இனிதன கேட்க பெருங் கலைஞ(ன்)ர் நீ! அழுகு தமிழே நீ! உரைநடை எழுத்திலும் கவி, கட்டுரை யிலும் உம் தமிழ் கண்டோம் பிழை யில்லா - அழகு நடை உண்டோம் அமுதென! தங்கு தடையின்றி ததும்பும் குறையின்றி கருத்தொன்றி திரை வசனமும் மேடைப் பேச்சும் அருவி யென தருவீர்ரே தந்தீரே தமிழை பிரிவீர்ரோ நினையவில்லை! ஒலிப் பேழையில்- உம் தமிழ் (குரல்) கேட்கும் போது உம்மை நினையாது நா(ள்)ன் இல்லை ஓய்வெடுக்கும் சூரிய னாய் உறங்கு - நீர்! இல்லாத இப்பொழுதும் உன்னைப் பற்றியே ஏச்சுகளும் பேச்சுக்களுமாய் தமிழகம்! உம்மை நினைத்திருக்கும் அதுவரை உம் புகழ் நிலைத்திருக்கும்! உம் அருந்தமிழுக்கு அன்பு ரசிகனாய் நான்!

ராச மலை-ராட்சிச மலை ஆனது ஏன்?!

முன் ஜென்ம விரோதமா மூதாதையர் சாபமோ இயற்கையின் கோபமோ இறையின் பாரா முகமா... யார் யறிவர்! இனி அறிந்து  விடை எதற்கு விதி செயல் வினா எமற்கு?! விட்டுவிட மனமில்லை விஞ்ஞானம் இவ்வளவு வளர்ந்தும் இதுப் போல் நிகழ்வுக்கு முன்னெச்சரிக்கை இல்லை முன் தடுப் பில்லை மண் தடுப்பு விழகி மழையும் ஒழுகி வான் பிளந்து மழையும் மண் பிளந்து குழியும் ஒன்று சேர நிகழ்ந்த்தோ... மூணாறு நிலச்சரிவு! வேதனையின் உச்சம் கூடி குலாவி குடியிருந்து காதலாய் ஓடியாடி கூட்டமாய் வாழ்ந்த  ஓர் இனம் மண்ணில் மறைந்து கானாதே போனதே மரணம் ஒரு போதும் மகிழ்வில்லை தான் சாவு அனைவருக்கு முண்டு ஆனா- ஏன், எதற்கு எப்படி யென தானும் அறியாது பிறரு மறியாது மாண்டுப் போவது மண்ணோடு மூழ்கிப் போவது மறக்காது! இக் கொடுமை இயற்கையின் கோரம் கோபம் இப்படியும் பழி கேட்குமா!? சிறார் பெரியோர் இளம் வயதினர் பிஞ்சு குழந்தைகள் இவர்களது மனம் பாராது மண் மூடிய(சரிய) மாய மென்னவோ?! இப்படி நடக்குமென தெரிந்தா அங்கு குடியிருந்தனர் பல ஆண்டு களாய்... பலரும் பல வருடம் பார்த்தும் யாவரும் யாதுமறியாது போனது எப்படியோ! விஞ்ஞானம் விடைச் சொல்லாது முன்பிருந்த மலைக் காடுகள் தான் காரண...

இது விபரீதம்...

இது விவாதத்திற்கு அல்ல என் வருத்தமதை சொல்ல! கடந்த நூற்றாண்டின் கடைசி சித்தராய் நாம் நினைத்த மூத்தோர் ஒருத்தர் இங்கே- அவரை முறைப்போர் இல்லை! பெரியவர் என பெயர் கொண்டு பெரிதாய் வல மந்தார் வயதை வாய்ப்பாக்கி வாய்த்த  போதெல்லாம் வார்த்தைகளை வசையாக்கி நாவினில் இசையாக்கி இன்னல்களுக்கு வழி சொல்லாது இன்னும் பல பேசி இருட்டை வெளிச்சமாக்க வெளிவந்தார் பழமாய்-  வலம் வந்தார் பலமாய்! நல்லதே என்றுதான் நா(மு)ம் நினைத்தோம் பின் சென்றோம் அவரது எண்ணம் வீணாவது போல் கடைசியில் உரித்தால் ஒன்றுமில்லா சில வெங்காயங்களை திராவிடம் தேசியம் நாத்திகம்... என வெள்ளித் தட்டில் தமிழ்திரு நாட்டிற்கு (மட்டும்) தந்துவிட்டே சென்றார் தரணி ஆள  தகுதியில்லாதோர் கைகளில்... பாவம் அவருக் கெப்படித் தெரியும் - இது உழைக்காது பிழைக்க வழி யென்று! முக்கு முனையிலும் எதுகை மோனையிலும் கவிதையாய் கதையாய்  தவளையாய்  தவழ விட்டு வாயால் வயிறு  வளர்த்தவர்கள் அனேகம் என்பேன்! கடந்தோடிய அக் கஷ்டகாலம் அதை  கையில் எடுத்தவரும் கத்தி கத்தி- கத்திக் கொண்டு அறுத்தவரும் மக்கள் மத்தியில் ஜனச் சட்டியில் போட... கண்டவர் கண்ணுக்கு...