Posts

Showing posts from March, 2020

கட்டளையா நினையாதை!

கட்டாய யேது மில்லை கட்டளை யேற்க காரணமின்றி காரியமில்லை கட்டுப்படு நோய் கட்டுப்படுத்த! கர்வத் தெளிவோ கவுரவத் தோரணை யோ ஏற்பதற் கில்லை! பிறர் பாதிக்காது ஏதும் செய்யலாம்... நோய் தொற்றுக் கொண்டாள் உன் பாதிப்பு  பிறருக்கு மன்றோ! யோசியாது எதையும் செய்யாதீர்... தெளிவு கொள் நிலையறிந்து உணர்வுகொள்! தேவையன்றி வெளித் தேடல் வேண்டாம் அரசு சொல் கேளாது பின் குறை கூறுவது நியாய மாகாது... இது- சோசம்பாய் இல்லாது... வேம்பாய் கசக்குந்தான் மருந்தென நீ  அறிந்தால் விருந்துண்ண தோனாது! முடியாது தோற்று வெளி சென்று நோய் தொற்றி... உள்ளிருந்து உயிர் காப்பது உன் உறவை காப்பது நல்லது! நட்பாய் பல செய்தி நானும் சொல்ல நண்பா நீயும்... திட்டமிடாது திரிய வேண்டாம் தீங்கு தேடி அலைய வேண்டாம் அரசுக்கு ஆதரவு கரம் இவை அனைத்தும் உனக்கு உதவும் புறம்! நாட்டிற்கு நன்றியா செய்... உன் வீட்டிற்கு கடமையாய் செய்... கட்டளையாய் யேற்பது கஷ்டந்தான் கடமையென கொள் காரணமின்றி எவ்வித காரியங்களு மில்லை! எல்லாம் நன்மைக்கே இதுவும் கடந்து போகும்! இன்னலன்றி இன்னுயிர் காக்க இல்லமே திருக்கோயில் இறை வணங்கு நிறை உனக்கு குரு போற்றி மனங் கூடி பிராத்த...

எண்ணத் தோன்றுகிறது...!

ஒர் எண்ணத் தோன்றல் ஒரு எண்ணம் தோன்ற... சரியா தவறா? அறியாது இருக்குது என் மனம்! ஐயம் கொண்டோம் அதை- அறியக் கண்டோம் அறிவியலா ஆன்மீக மா அனேகப் பார்வையில்... இன்னும் அறியாமலே! ஆழ்ந்து யோசித்த போதும் சூழ்ந்திட்ட இச் சூழ்நிலையில் நானும் கைதியாய் கண் கலங்கி கை கழுவி... யாரிடம் சொல்ல இந்த எண்ணத் தோன்றலை எண்ணம் தோன்றுயதை! வதந்தியா பரப்ப எண்ணமில்லை வருந்(தி) தீயாய் எண்ணத்தின் பதிவு- என் இந்த பதிவு! வருந்தாமலும் வருத்தாமலும் இருக்க... குரு வேண்டுகிறேன் அவர் அருள் வேண்டுகிறேன்! கடந்த மாதம் வேறு மனநிலையில் வேறு ஒரு எண்ண ஓட்டத்தில்... தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தமிழில் வேண்டுமென எத்தனை யோ செயல்கள் முன்னறிவிப்பு போராட்டம் உண்ணா நோன்பு மாநாடு சிறப்பு யாகம் சிறப்பு வேண்டுதல் தமிழ் நெஞ்சத்தில் வளர வஞ்சத்தில் முடிந்த தருவாயில்... தமிழ் பற்றாளர்கள் தமிழ் ஆர்வலர்கள் தமிழ் நெறியாளர் கள் சித்தர்கள் சித்த நெறியாளர் கள் சித்த நெறி ஆதரவாளர்கள் அனைவரது செயல்களும் ஏற்காது ஒரு நாள் செய்தியாய் உலா வந்த போதும் அதில் விலகா மனங்கொண்ட பலர்... வேதனையிலோ அல்லது நன்கு வேர் அறிந்து அறிவித்தார்களோ நமக்கு  தெரிவித்தார...

கட்டுபடுவோம்! கட்டுப்படுத்த...

ஆபத்துக் கால ஆலோசனை கள்... அனைவருக்கு முண்டு! தனக்கென ஒன்று பிறருக்கு அது - இன்னொன்றாய் நியதி! நியாயப் படுத்த(தி) நினைத்திருக்கும் மனதை தளரவிட்டு பிறருக்கென சொல்வதை நா(மு)ம் கடைப்பிடித்தால் கரம் தொடாது... கால மாறுதலுக்கு வழிவுண்டு! அதற்கு வலிவு முண்டு! இந்நோய் தொற்றலுக்கு விலகலே விதியாய்... இது விளங்கிய பின் வீண் விவாதம் எதற்கு? இதில் வியாபார மும் எதற்கு?! எல்லா விகிதாசார மும் விதி வசமே!! இந்நோய் பற்றி பற்றாது(தொற்றாது) அறிந்து கொள்வோம் புரிந்து - பின் தெரிந்துக் கொல்வோம்! அதீத பயம் வேண்டாம் ஆசையால் ஆணவத்தால் அலட்சியம் வேண்டாம் அமைதி கொள்வோம்! வேர் யறிந்து கொள்வோம் வேரறுத்துக் கொல்வோம்! அரசின் ஆலோசனை அது-நம் ஆரோக்கிய முன்னோசனை! தொலை நோக்கு பார்வையில் தொலைந்து போகாது... இப்போதைய செயலில் இயல்பாய் இருக்க இறை நம்பிக்கை யும் வேண்டும் இடைவெளி நமக்குள் வேண்டும்! வேண்டா வேறுப்பாய் இருந்த போதும் இருக்கத்தான் வேண்டும் இப்படி மற்ற எதையும் விட உயிர் பெரிதன்றோ! நாட்டின் உயர்வு பெரிதும் அன்றோ... கட்டுப்படுவோம் கட்டுப்படுத்துவோம்! அன்புடன். .

எண்ணதத்தைச் சொல்வேன்...!

என்னத்த சொல் வேன் என் எண்ணத்தைச் சொல்வேன்... உலகமே அலறிடும் ஓர் உண்மை நிலை என்ன யெதுவென அறியுமுன் தெரியுமுன் பல்கி பெருகி - உயிர் பலி வாங்கிவிட்ட தருணம்! எத்தனையோ வளர்ச்சி அறிவியல் முதிர்ச்சி இருந்தும் என்ன பயன்?! ஆணவ பேச்சும் ஆவணப் பேச்சும் இன்று- அடங்கி விட்டது! உலகை ஆள நினைத்த நாடும் ஆள்வதாய் நினைத்த நாடும் நா வறண்டு போனது! போர் என்றால் கூட எதிரி புலப்படுவான் புரியாத புதிராய்  கண்ணுக்கு தெரியா இருந்தும் - எதிராய் கொரானா வைரஸ் என்கிற கிருமியால் கோரசாய் ஒன்று சேர்ந்து கொத்துக் கொத்தாய் நாடு நாடாய் நகர்ந்து தன் பசிக்கு  இறையாக்கி கொண்டு... தன் வேட்டையை தொடர்கிறது! இது உலக பிரச்சினை என - நாம் உருகி பேச... நம்மையும் உருட்டிப் போட மிரட்டி பார்க்க நம் தேசம் புகுந்த்தோ!? போரென தெரிந்தால் கூட புறம் காட்டாது புண்ணிய பூமிக்கு புனிதமாய் கொடுத்திருப்போம் எம் மொத்த உயிரையும்! சூழ்ச்சி யாக இருந்தால் சூழ்நிலை புரிந்திருப்பொம் சொல்லாது புகுந்த அக்கிருமிக்கு முன் செல்லா காசாய் போனது அத்துனையும்! அறிவியல் வளர்ச்சி பொருளாதார எழுச்சி வல்லரசுக்கான முயற்ச்சி அத்துனையும் முடக்கிப் போட்டது... ஏற்று...

வணக்கத்துடன்...,,!

உண்மை நிலை உணர்ந்து கொண்டோம் உணர்வு கண்டோம்! உன்னதாமாய்... இன்றைய பாரத(ம்) நிலை இதுவரை நாம் பாராத நிலை! நமது ஒற்றுமை ஓங்கட்டும் அரசுக்கு ஒத்துழைப்பு தொடரட்டும்! பொறுப்போடு வீட்டோடு இருந்து விளையாட்டாய் வீதிக்கு வாராது பொறுமை காத்த எம் மக்களுக்கு இது- இன்னலன்று இன்றியமையா ஒன்று மனந்திறந்து பாராட்டுகிறோம் நெஞ்சு ஒன்றி வாழ்த்துகிறோம்! போர்க்கால அமைதியாய் காணு மிடமெல்லாம் கருஞ்சாலை வெறிச்சோடி... மனித தலைகள் காணாத நிலைகள்! விதிவிலக்கு எப்பவுமுண்டு எப்படியு முண்டு அதை பொருட்டாய் கருத தேவையில்லை... நன்னெறி நல்லறம் நல்லொழுக்கம் பேணுவோம் காப்போம் ஒற்றுமை ஒத்துழைப்புடன்! கைக் கொட்டி மனம் ஒட்டி பாராட்டுவோம்! சுகாதார நல்வாழ்வு துறை காவல்துறை ஊடகத்துறை தன்னார்வ பொதுநல தொண்டு நிறுவனங்கள் மருத்துவர் செவ்லியர்கள் துப்பரவு தூய்மை பணியாளர் கள் காவலர்கள் தன்நலம் சுயநலமின்றி பணி செய்யும் அனைத்து பணியாளர்கள் அனைவருக்கும் எமது நன்றியை காணிக்கையாக்கி... நாடு நலம்பெற நாளை வளம்பெற நானும் கரம் கூப்பி வணங்குகிறேன் இறை நாடி குரு போற்றி வேண்டுகிறேன்! நன்றி! வணக்கம்! வாழ்க பாரதம் வளர்க பாரதம். என்றும் அன்புடன்.

ஒரு நிமிட கோரிக்கை!

எம் ஓரு நிமிட கோரிக்கை இம் மானுடனின் ஓர் அறிக்கை! வணக்கம் பல சொல்லி இக் கூட்டத்தின் நோக்கம் நிறைவேற அதை தினம் சொல்லி தமிழக அரசு - இதை நிறைவேற்ற... வெறும்  சாட்சி மொழியாக இல்லாது ஆட்சி மொழி யாக திகழ- அது நிகழ... எல்லாம் வல்ல என் குருவை வணங்கி தென்னாடுடைய சிவனே போற்றி எ(ந)ம் தமிழ் கடவுள் முருகனின் திருக்கோயில் குடமுழுக்கு தமிழில் நிகழ வேண்டி நிகழ்த்த வேண்டி தினமும் மாலை  ஆறு மணிக்கு இரண்டு நிமிட மணியோசை எழுப்பி என் வேண்டுதலை அறிவித்துக் கொண்டு இருக்கிறேன்! இதை தங்களுக்கு(ம்) தெரிவித்து கொள்கிறேன் நம் இனம் காக்க நம் மொழி காக்க இணைந்திடுவோம் உணர்வு பூர்வமாக வெறும் உணர்ச்சி போராட்டமாக இல்லாது உள பூர்வமாக ஒன்றுபடுவோம் வென்றெடுப்போம்! வாழ்க தமிழ் வளர்க தமிழகம் என்றும் அன்புடன்.

வழிமாறா...தலைமுறைக்கு!

நம் வழிமுறை தவறினால் நம் தலைமுறை தவறாகும்! நாம் முன் செய்த பாவம் பின் தொடரும் சாபமா - இது! தலைநகர் தில்லியில் நடந்தேறிய வன்முறை மதவெறி போக்கினால் கவணிக்காது போன வழிமுறை தண்டிக்கப்பட்ட இளந் தலைமுறைகள் வருத்தமே மேலோங்கி வாய்திறக்காது போனதங்கை... மதம் என்னச் செய்யும் மறந்து போன மனிதாபிமான உன் நிதானாம்! எத்தனைச் சாவு எத்தனை ஓலங்கள் எத்தனை தவிப்பு... தவறி போனவன் கற்றதென்ன தப்பி போனவன் இனி - கற்பதென்ன இத்துனை நாள் உடன் இருந்த சகோதர ஒற்றுமை எங்கு போனது!? ஒற்றுமை இல்லாது போனாதால் நிம்மதி நில்லாது போனது! நிதர்சனம் நீர்வடியும் கண்களாய் காட்சி பொருளாய்! மரணீத்த  முகம் பார்த்துச் சொல்லுங்கள் சிந்தி ஓடிய குருதி யை கண்டு... சொல்லுங்கள் - இது எந்த மத த்தினர் குருதி உறுதியாக சொல்லமுடியுமா சவந்தானே அதன் பொது பெயர் வேற்று மத்த்தில் வேறு பெயர் என்ன சொல்லுங்கள்! மத அரசியலும் மத ஆன்மீக மத வெறியர் ஆதரவாளர்கள் இதன் மூலம் கற்றதென்ன பெற்றதென்ன?! காவியோ பச்சையோ காரியம் சாதித்தென்ன கலகம் கூடாது என தானே தேசிய கொடியில் இரு வண்ணமும்! பின் ஏன் இந்த வன்ம்ம் மனிதம் கொன்று மனிதன் வாழமுடியுமா?! மதம் காக்க போர் யென...

இல்லறமாகா...து!

ஆதங்கம்  ஆறுதல் ஆகா...(து) அதீத பாசம்  அன்பாகா வெற்று எண்ணம் வெற்றி ஆகா வெறும் ஆசை காதல் ஆகா பெறும் காதல் ஆசை ஆகா வெற்று வேர்வை உழைப்பு ஆகா வீண் பேச்சு விவாதமாகா தவற விடுதல் தியாகமாகா தைரியம் மறைத்தல் வீரன் ஆகா உண்மை மறைத்தல் பொய்யாகா வெறும் படிப்பு பயன் ஆகா உழைக்கா காசு சுகம் ஆகா ஒற்றை மரம் தோப்பாகா கற்றதை விற்றல் கௌரவம் ஆகா தவறவிட்ட நீதி தண்டனை ஆகா தாமதமான நீதி நியாயமாகா பிறர் தாங்குதல் பொறுமை ஆகா புறம் பேசுதல் பெருமை ஆகா துணிவு வீரமாகா பணிவு கோழை யாக விரக்த்தி(பேச்சு) விரோதமாமா மகப்பேறு மலடாகா திருந்தாப் பிள்ளை தாய்க்கு ஆகா கேள் பேச்சு அறிவுக்கு ஆகா சொல் பேச்சு இளசுக்கு ஆகா இயாலமை இயல்புக்கு ஆகா இயல்பு  மனிதனுக்கு ஆகா இயந்திரம் இயற்க்கை க்கு ஆகா மறதி வியாதிக்கு ஆகா தட்டிகேளா உறவு ஆகா சுட்டிக்காட்டா நட்பு ஆகா உணராது போதல்(பேசுதல்) உத்தம்ம் ஆகா உணர்த்திச் சொல்லுதல் உயர்வாகா இறை வேடம் இன்பம் ஆகா சரளி மட்டும் ராகம் ஆகா... சேர்ந்த(தே)து இருப்பது மட்டும் இல்லற மாகா...து!