Posts

Showing posts from January, 2024

தாசி - நான்!

வேர்க்காத காசு  வேண்டா.. உழைக்கா காசு  உன்னதமாக... ஏ(ஓ)சி வெறுக்கும்  தாசி!  நான்..

போகி - ஐ! கொண்டு ஆடுவோம்..

பழைய வை கழித்(ந்)தும் .. புதிய வை புகுந்(த்)தும்... ஆண்டு கழிவை கடை தினத்தில்  போகி  கொண்டாட்டம்  நல்லது தான்!  இருந்து ம்  -  எத்தனை போகிகள்  வந்து போனாலும்.. அந்த- முதல் முத்தம்  முதற் காதல்  முதல் ஸ்பரிசம் முதல் மேடை  முதல் சம்பளம்  முதல் அவ மானம்... மறப்ப தில்லை  மறப்பதற் கில்லை!  ஆயினும்  மண்ணின் மரபு கருதி  மனம் போகம் கடந்து.. போகி-ஐ !  போற்றி  கொண்டு  ஆடுவோம்!  வாழ்க வளத்துடன்.. வாழ்த்துகள்! 

கடவு சீட்டு!

கடல் தாண்ட  தகுதி!  இனி - அயல் நாடுகளில்  அந்நியனாக  அந்(த) நீயாக  அங்(கு) நீ ஆக - வலம்  வரலாம்  வரலாம்... ரைட் ரைட்.  அவ்வளவு ஆர்வமா?! ஆச்சரியக்குறி! இனி போய் வெளி நாட்டில்  வேலை பார்க்கவா!  இல்லை  - இல்லை  அப்புறம்  வேடிக்கை பார்க்க வா! அம்புட்டு வசதியா.. இல்ல -  வாய்ப்பு கிட்டினால்  பார்க்கலாம்...  கலாம்.. லாம்..ம். அதுதான்!  அனுகூல நட்பாய்  அழைத்தால்.. அழைப்பார்களா உன்ன!  ஆள் இருக்கா? அது - கேள்வி குறிதான்.  பின்- வாய்க்கு மானால்  வாய் பிளக்காது  அல்ல - திறக்காது செல்ல லாம்.. ம்! நினைப்பா! இல்ல- ஆனிப் போய்  ஆவணி வந்தா... கஷ்டம் ஒன்றுமில்லை காத்திருப்போம்!  வாய்க்கு மானால்.. எதற்கும்  இருக்கட்டு மென தேவை தானே  - இந்த  கடவு சீட்டு ! கைக்கு வந்தது வாராது இருப்பது  அந்த நுழைவு இசைவு! அது வேற.. யார் தருவார் இந்த  அறி யா சனம்!  வா-ச-அகம்  கவிதை யின் இடையில்  வரும் மூன்று புள்ளிகளாய்  மற்றும், இன்னும், பிற.. வழி உண்டா  யோச...

ஆண்-டால் (doll) அடிமை!

ஆண்- டால்( doll ) அடிமையாய்... ஆண்டாள்!  காதல் பித்தாய்  பற்றாய், அன்பால் நோ யுற்றாள்... கர மறந்து மா தொடுக்க  மன மறந்து பா தொடுக்க  காதல் சேர - தமிழ்  சேர்த்தாள்!  தன் காதலனை  கண்ணன் அவனை கருப்பு மன்னவனை  கரம்பிடிக்க -  அடம் பிடித்த  பெரி ஆழ்வார் மக பின்  - ஆள்வாரின் மனை யானாள்!  அவ் வாண்டாள்  திரு வள்ளி புத்தூர்  ஆண்டாள்!  அப் - பா   திருப்பாவை! அதில் ரெங்கி யவன் திரு ரெங்கன்!  பா-மா தொடுத்து  பாமா இடத்தில்  நின்று  காதல் வென்று  சாமர்த்திய  மொன்று  அது- அவளுக்கு  சாத்திய மானது அதுவே  - பின்  சத்திய மானது!  மார்கழி திங்கள்  மனங் குளிர  அவள் பாடிய  திருப்பாவை    தினப்பார்வையாய்  தினந் தோறும்  திரு  ரெங்கத்தில்! அரங்கன் இருக்கு ம்  இடமெல்லாம்- இருப்பாள் ஆண்டாள்  ஒளியாய்  திருப்பாவை ஒலியாய்!  அவளது பூசை அரங்கனின் ஆசை நமக்கு இனிய  தமிழ் ஓசை!  அன்று  -  அவளது  ஆர்...

அகவை கூட...

குதித் தோடும்  கால்கள்!  குன்று தாண்டும்  குவிந்த மலைச் சுற்றும்! குளம் குட்டை விடாது  படைச் சிறக்க  நடை சேர்க்கும்... வலு விழந்து போனால் குழவி தாண்டா தடை இருக்கும்  நடை குறைக்கும்!  விட்டுச் சென்ற  தென்றலே  - இனி இட்டுச் செல்வா யோ! ஏங்கும்... எதிலும் ஒன்றி போகாது  மனம்  - குன்றிப்  போனது!  அகவை அறுபதை நெருங்க ஆகி போகுமோ  இது வெல்லாம்... வில் ஏந்த வில்லை  வேல் ஏந்த வில்லை  வே தனை ஏந்த வேண்டுமா!? - இனி  வளையாதா  வலை விலகாதா  அகலாதா  - இனி  விலை போகாதா?!

ஆண்டவரிடத்தில்... காதல்!

காதலின் பால் கனவு ஊன்றி கண்ணனின் பால் கற்பு ஊன்றி... காதல் அன்பால் கரத்தால் மா(லை)தொடுத்து  அறத்தால் பா தொடுத்து  சிரித்தாள்  - சிறந்தாள்  கண்ணனிடம் நிறைந்தாள்!  நிறத்தால்- கருத்தவனை  சிவக்கச் செய்தாள்  - தன்  தறத்தால் அவனை  சிந்திக்கச் செய்தாள்! சிவப்பானவள்  - வேறு  நினைப்பின்றி  கருப்பானாள்!  - பின்  அவனிடம் சேர்ந்தே  சிறப்பானாள்!  கண்ணீர் ஒழுக  காண்பவை விலக காத்திருந்தாள்  பூத்திருந்தாள் நாளெல்லாம்!  பாவை அவள் கனவோடு  பார்வை  அக் கண்ணன்  நினைவோடு!  அவள் மனம் வேர்க்க  அவன் மகிழ்ந்து பார்க்க  கரம் பற்றினாள்  சிரம் ஒற்றினாள்  ஓர் நிலை எட்டினாள்!  காதல் வென்று  நிலையானவள்!  சாதல் கொன்று  - அவனருகில்  சிலையானவள்! ஆண்டாளாய் ஆண்டவரிடத்தில்! அவள் அருளியவை அடியாரிடத்தில்! மார்கழி திங்கள்  மறவாது எங்கள்  தினங்களில்... திருப் பாவை! தமிழ் சொல்லாய்  சொந்தமாய்... இன்றும்! 

2024 - வாழ்த்துகள்!

நடப்பதும் கடப்பதும்  நன்மை காண... ஆண்டின்  முதன்மை நாள்  ஆங்கில மாதத்தில்  ஆரவாரம் குறையாது  எண்ணங்கள்  எண்ணிக்கையில்  தொடக்கம்... செய்யாதது  செய்ய வேண்டியது  ஒரே நாளில் வந்து போகும்  அந்த எண்ணக்  குஷி இந் நாளில் தந்து போகும்!  மறு மறு தினங்கள்  மறந்து(ம்) போகும்  காலம் காட்டும் காட்சியில்  கரைந்து போவோம்!  சில விடயத்தில்  உறைந்து போவோம்!  பின்- வேறு நினைப்பின்றி இயல்பாய் இயங்கி போவோம்!  முதல் நாள் கொண்டாட்டம்  மறந்து போகும்  மீண்டும் ஆண்டின்   கடைசி  தினத்தின்  இரவு நேரத்தில்  அடுத்த ஆண்டின்  முதன்மை நாளுக்கான ஆரவாரம்...  கடந்த ஆண்டின் குறைகள்  மறந்து போகும்  அரசியல் தேர்தல் போல இதுவும் தொடரும்... வாழ்த்துகள் சொல்வது  நல்லது தானே! எல்லோரும் நல்லாயிருக்க நலமா இருக்க எல்லோருக்கும்  வாழ்த்துகள் சொல்வோம்!  மறப்பதும்  நடப்பதும்- கடப்பதும் நன்மை காண... நல்லதே! வாழ்க வளர்க!  நானும் வாழ்த்துகள்  சொல்வேன்... சொன்னேன் ...

முதல் நாள் - 2024!

கடந்த ஆண்டின்  இறுதி  - நாட் கள்  அருமையா  அற்புதமா  போச்சு!  நீண்ட பயணம்  நெடு நேர ஓய்வு!  பொன்னு சொன்ன சேதி  பையனின் பொறுப்பு  வேலைக்கான தேதி  வீட்டம்மா கர்சினை கர்ஜனை- அதற்கான நியதி! பிடித்த எழுத்தாளர் வாசிப்பு - வாசிக்க கிடைக்கப் பெற்றது!  நட்பு டன்  விருந்து  நண்பன் கையில் சோறு!  குல தெய்வ வழிபாடு  குறை யேது மில்லை!  அப்புறம் என்ன?  - தேவா!  இர்ரு  - வர்ரேன்... ஆங்கில புத்தாண்டின்  ஆரம்ப நாளே அமர்க்களமாய்... காரைக்குடி விடியல்  குழிப்பனியாரம்  குருவின் ஆசி  அத்துடன் பிறவித் திருநாள்  வாழ்த்துகள் பரிமாறி ஆனந்தமாய்  ஆயிரம் வாலா பட்டாசு  ஆத்ம நாத சுவாமி  தரிசனம்! ஆக சிறந்த- மாணிக்கவாசகர் பெருமை  சிற்ப கலை அருமை!  வருந்தா  அருந்தினோம்  விருந்தா...! அட அடே!  அப்புறம் ஆகா! இத்தனை சந்தோசமா!? ஆகுமா! வெகு நாள் தாங்குமா?! ஏதோ- ஒன்று  இன்று  - நன்று! சரி  -  அதையும் பார்ப்போம்  மனம் சொன்னது!  எதற்கும்...