Posts

பிரக்ஞானந்தா! வாழ்க தம்பி!

தம்பி வா! தலைநிமிர்ந்து வா! நேற்று (ம்)  எங்கும் உன் பேச்சு... செய்தி யில் தலைப்பாச்சு!  சதுரங்க ஆட்டத்தில்  புலி - நீ! தமிழின பெருமை யே தனி! - இனி தமிழக பெருமை  தரணி எங்கும்!  நம்  பாரம்பரிய ஆட்டத்தில்  சாதிக்க பிறந்தவன்! வெற்றி தோல்வி பேச  இது - வியாபாரம் யல்ல  விளையாட்டு!  இறுதி சுற்று பங்களிப்பே  பெரும் வெற்றி தான்!  தமிழகத்தின் தவப் புதல்வா  சதுரங்க ஆட்டத்தில்  முதல் வா(கை)! பதின் வயதில்  உச்சம் சென்ற  பிரக்ஞானந்தா!  வாழ்க நீ! வாழ்த்துகள் தம்பி!  இன்று தவற விட்ட வெற்றி  நாளை வரும் உனைச் சுற்றி!  கவலை வேண்டாம்  இன்னும் கவனமாகட்டும்!  இது-  வெறும் காய் நகர்த்தல் அல்ல  -  அதி புத்தி  பொறுமை  நிதானம்  இவ்விளையாட்டின்  நிதர்சனம்!  முன்னேறி  பின் வந்து  இடை புகுந்து  குறுக்கே வராது  இடை மறித்து ... சுற்றி வளைத்து  தலை கவிழாது  விழாமல் வீழ்த்த வேண்டும்!  காய் நகர்த்த  அனேக பேருக்கு தெரியும்  ஆனா- ...

வரலெட்சுமி விரதம்!

வீணாகாது இருக்க... வதக்கி  காய வைத்து  வத்தாலாக்கி... வருத்தெடுத்து  பின்  - அதை காப்பாற்ற  நெய் வூற்றி  வைக்கப் போறேன்  வத்தக் குழம்பு!  அந்த கதை தான்  வர வர வர- லட்சுமி விரதம்!  இன்று- கரம் பிடித்த அவனை காக்க... நோன்பிருந்து (விரதமிருந்து) கொண்டாடும்  அனைத்து அன்பிகளுக்கும்  நன்பிகளுக்கும்  எமது நெஞ்சார்ந்த... வாழ்த்துகள்!  வாழ்க வளமுடன்! 

சந்திரயான்-3

நெடு நாள் கனவு!  இருப்பத்து மூன்று எட்டில்!  திக்கெட்டும் பரவியது  பாரதத்தின் புகழ்! பார்த்து வியந்தோம்!  எட்டு - இருப்பத்து மூன்றில்  திட்டத் தலைவர்  திட்டப்படி கிட்டே  நெருங்கியது  - அந்தி சரிய- நிலவின்  முந்தி தொட்டது!  சந்திரயான் மூன்று  விண்கலம்  தென் துருவத்தில்  தரை தொட்டு இறக்கிய நிகழ்வு!  விஞ்ஞான உலகத்தில்  நம்- விஞ்ஞானிகள்  உருவத்தில்  உச்சம் தொட்ட மகிழ்வு!  இந்த வெற்றி யை  நாளை சரித்திரம் சொல்லும்... இனி உலகை வெல்லும்!  முழு முயற்சி  முத(லி)ல் வெற்றி  பெற்றோம் பெருமிதம் கொண்டோம்!  உலகம் போற்றும்  உன்னதம் கண்டோம்! வியந்தது உலகம்  உண்மையில் -   பார் போற்றும் வெற்றி!  மார் தட்டிச் சொல்வோம்!  விக்ரம் லேண்டர்!  விண் வெளியில்  ஓர் வியப்பு ! - இது  இந்திய விஞ்ஞானிகளின்  உழைப்பு!  இது - சாதாரண மல்ல  வெறும்  சாதனை எனச் சொல்ல... பெரும் போராட்டக் கனவு!  இந்தியப் பெருமை  இந்தியர்களின் பெருமை!  இஸ...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!

அன்புடையீர்!  நம் வாரிசுகள்  துணிவு மிக்க  ஆற்றலும், அன்பும்  அனேக சுகமும்  மூத்தோர் முன்னோர்கள்  நினைந்து மதித்து  புது பாதையில் பயணிக்க... பண்டிகை கொண்டாட்டம்  பண்பாடு கொண்ட  ஆட்டம் வேண்டும்!  நேசமும் பாசமும்  மட்டுமன்றி  பொறுப்பாய் பொருமையாய்  நிதானமும்- நிதர்சனமறிந்து  உண்மை யுடன்  உழைப்பும் கூட  ஆணவமும் அலட்சியமும்  ஆள் கொல்லும்!  - அதை தவிர்த்து  ஆசையும் ஆர்வமும்  வளர்த்து  - அது சாதிக்கச் சொல்லும்  சாதனை வெல்லும்!  சொல்லிக் கொடுப்போம்  அன்புச் சொல்லில்  கொடுப்போம்!  வேறென்ன... நோய் யற்ற வாழ்வே  குறை வற்ற செல்வம்!  நோய் யில்லா வாழ்விற்கு  குரு வேண்டுகிறேன்  இறை நாடி - மனம்  நிறை வேண்டுகிறேன்!  அறம் சார்ந்து  நெறி மாறாது- எம் தமிழ் போல் என்றும்  இளமையாக... இன்று போல் என்றும்  மகிழ்வுடன் வாழ... வாழ்த்துகிறேன்!  எமது இனிய  தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள்  பொங்கல் பெருநாள்  வாழ்த்துகள்!...

ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

வரும் நாட்களில்... சில பழக்க-வழக்கம்  வாழும் முறையில்  புழுக்கம்  ஏற்பாடா திருக்க  பயன்ப் பட்டு - பயணப் படுவோம்!  நல்ல உறவும்- நட்பும்  நம்மை விட்டு அகலாது  நன்றி பாராட்டு வோம்!  நகர்வதும், நகர்த்தலும்  நன்றாக நகரவே  நாம் நாமாக இருப்போம்  நமக்கு நல்லவர்களாக  இருப்போம்!  நேற்றைய  அனுபவம்  சுயமாய் இல்லாது  சுகமாய் வாழ  பயமாய் இல்லாது  பயனாய் பண்பட்டு வாழ  நாளை வரவேற்போம் புத்தாண்டை! பலங் கொண்டு  சாதிக்காமல்  பக்குவங் கண்டு  சாதிப் போம்! நம்மில்- விலகலையும் விரக்தியும் விட்டு  வீரமாய் விவேகமாய்  வாழப் பழகுவோம் ! படித்ததை பகிர்வோம்  பிடித்ததை செய்வோம்!  பிடிக்காத தை மறப்போம்  பிடிவாதத்தை குறைப்போம்!  அழகு என்பது  தனி யில்லை  அளவோடும்  அன்போடும் காணுவதும் அனுகுவதும்  பிரிவு இல்லாது  உறவில்- பரிவு  சொல்லுவது அழகு!  எதிலும் காதல்  காலமாற்றம்- எளிதில்  கடக்கச் செய்யும்!  ஆவேசம் இல்லாத  ஆச்சரியம்  ஆ...

பரவசம் ஆக்கும்... பார்க்க!

அன்பருக்கு நண்பரே! எதை விரும்புகிறது - மனம் ஏன் விரும்புகிறது...? மீளாத ஆசை முடியாத, அடையாத அடங்காத, நிகழாத பல... ஆசையாய் ஆர்வமாய் விரும்புகிறது விரும்ப படுகிறது! வேடிக்கை அல்ல விதையாகவே விளைகிறது! உதாரணமாக- திரையில் சண்டை காட்சி விரும்பிப் பார்ப்போம்! காரணம்- அது போல் நம்மால் முடியாது இயலாது! உயரே பறந்தோ உக்ரமாக வோ பல பேரை தாக்கி ஆவ தில்லை நம்மால் ( நம்ம ஆள்) ஆக!  அதைக் காண விரும்புகிறது மனம்! பார்க்கையில் பரவசம் மகிழ்வைத் தருகிறது! அது போல்- ஆபாச படங்கள்! ஆ! - பாச படங்கள்... சலியாது பார்க்கிறோம் பார்க்கும் போதெல்லாம் பகிர்கிறோம் - மகிழ்வை! ஏன் வித விதமான  செயல்கள் நீண்ட நேர செய்கை கள்... நம்மா(ளு)ல் ஆவ தில்லை நடவாது ஒன்று நடப்பதாய் காணும் போது... நம் மனம் விரும்புகிறது விரும்பி பார்க்கிறது! மூளை செயல் இழக்கும்போது சிந்தனைச் செல்கள் உறங்கும் போதும்... உணர்வுகள் மேலோங்கி உண்மைகள் மறக்க(மறந்து) உற்சாக மடைகிறோம்! அதைப் பெறவே ஊக்க மளிக்கிறோம்! இது போல் நிறைய சொல்ல லாம்... கப்பல் பயணம் கடல் அலை சந்திர பிம்பம் சர்கஸ் பார் தடைகள போட்டி கால்பந்தாட்டம் கிரிக்கெட் போட்டி பனி சரக்கு... ...

இது விபரீதம்... ஜாக்கிரதை!

இது விவாதத்திற்கு அல்ல என் வருத்தமதை சொல்ல! கடந்த நூற்றாண்டின் கடைசி சித்தராய் நாம் நினைத்த மூத்தோர் ஒருத்தர் இங்கே- அவரை முறைப்போர் இல்லை! பெரியவர் என பெயர் கொண்டு பெரிதாய் வல மந்தார் வயதை வாய்ப்பாக்கி வாய்த்த  போதெல்லாம் வார்த்தைகளை வசையாக்கி நாவினில் இசையாக்கி இன்னல்களுக்கு வழி சொல்லாது இன்னும் பல பேசி இருட்டை வெளிச்சமாக்க வெளிவந்தார் பழமாய்-  வலம் வந்தார் பலமாய்! நல்லதே என்றுதான் நா(மு)ம் நினைத்தோம் பின் சென்றோம் அவரது எண்ணம் வீணாவது போல் கடைசியில் உரித்தால் ஒன்றுமில்லா சில வெங்காயங்களை திராவிடம் தேசியம் நாத்திகம்... என வெள்ளித் தட்டில் தமிழ்திரு நாட்டிற்கு (மட்டும்) தந்துவிட்டே சென்றார் தரணி ஆள  தகுதியில்லாதோர் கைகளில்... பாவம் அவருக் கெப்படித் தெரியும் - இது உழைக்காது பிழைக்க வழி யென்று! முக்கு முனையிலும் எதுகை மோனையிலும் கவிதையாய் கதையாய்  தவளையாய்  தவழ விட்டு வாயால் வயிறு  வளர்த்தவர்கள் அனேகம் என்பேன்! கடந்தோடிய அக் கஷ்டகாலம் அதை  கையில் எடுத்தவரும் கத்தி கத்தி- கத்திக் கொண்டு அறுத்தவரும் மக்கள் மத்தியில் ஜனச் சட்டியில் போட... கண்டவர் கண்ணுக்கு...