Posts

சினிமா - சினிமா!

அன்றும் இன்றும்  அமைதிக்கும்  நிம் மதிக்கும்  மன மகிழ்வுடன்  அயர்ச்சி போக்க பொழுது போக்கவும்.. களமாக இருந்தது அன்றைய - திரையரங்குகள்  திரைப் படங்கள்! அரிதாரம் அதிகமாக  இருந்தாலும்  தெளிவான முகங்கள்! இனிமையான இசை வார்த்தைகள் புரியும்  பாடல்கள்! எதார்த்த வசனங்கள்  உணர்ச்சி பூர்வமாக  உணர்வு பூர்வமாக சினமாக்கவும் - சிரிக்கவும்! கண் கூசாத ஒளிப்பதிவு  இரைச்சல் குறைச்சலாக ஒலிப்பதிவு! ஐந்து அரை மணி நேரம்  போ(ன)வது தெரியாது! ஆனா - இன்று  இரைச்சலேடு இம்சையா இசை! கண் கூசும் ஒளிப்பதிவு  செவி மறுக்கும்  ஒலிப்பதிவு! அழகான முகங்கள் கூட அரிதார பூச்சில்  அன்மை குறைக்கிறது  வித்யாசம் என்கிற  பெயரில்! வரிகள் குறைத்து வார்த்தைகள்  புரியாது பாடல்கள்! தவறில்லை  தப்பில்லை - நமக்கு  அது - ஒப்பவில்லை! ஒரு நல்ல ஞாயிறு மாலை  வாடிப் போனது! தேடிப் போன விளைவு.. எத்தனை யோ படங்கள்  மறு முறையும்  அதிக முறையும்  பார்த்து இருப்பேன்! இப்ப - அப்படி யான  படங்கள் வருவதில்லை! வேறு சில படங்கள் ...

ஜெர்மன் - கடை ஞாயிறு!

ஒரு ஞாயிறும் - இன்னும்  ஒரு திங்களும்.. ஒரு டசன் தினங்களும்  பாக்கி உள்ளன! உனை ப்ரிய .. மனமில்லாது என்று  சொல்வதற்கு இல்லை! இனி மறக்காது என்று சொல்ல.. இனிய ஜெர்மனியின் - ஜென்டில்   கண்டதும் அலோ! சொன்ன வயோதிக பெருமக்களும்! பாராது போன புது  ஜென்றிக் மறுமக்களும்  கால் சராய் கன்னிகளும்.. என்றும் நெஞ்சில்! மறக்காது - மறவாது.. பலதரப்பட்ட நாய்களும்  வகை வகையான.. பக்குவமா பிடித்த  அந்த பாங்கு - கரங்களும் கடக்க - நடக்க  கண் கொண்டு - கூட பார்த்தே ரசித் திருந்தேன்! பார்வையில் - வெளிப்  பாதையில்! சொல்வதற்கு நிறைய உண்டு  அதில் - சொன்னது கொஞ்சமுண்டு! நிறைய கற்றுத் தந்தது.. கற்க சொன்னது! விரை நடையும் - சிறு  ஒட்டமும்.. நீங்கா இடம் பெறச் செய்தன! விட்டு சென்ற என் வீட்டின்  நினைவுகளை - எழு பத்து  நாள்களாக - எனை மறக்கச் செய்தன - இங்கு என்னையும் நகரச் செய்தன! அந்த பறியாத செம்பருத்தி  ஒடியாத முருங்கை  சிரிக்கும் கொய்யா இலை பசும் வேப்பந்தலை  எப்போதும் உன்னாத  சப்போட்டா பழம்! அருகில் அருகம் புல்  அதனருகே சிறியா...

அமில வார்த்தைகள்..

அமில மாய்  விழும் வார்த்தைகள்.. திருத்து வதற்கு அல்ல! அது- திருந்து வதற்கும் யல்ல.. மனம்  திரும்பா  நீடித் திருக்க..!

அவனே - அதிகம்!

சூது வில் தோற்றவன்  சூழ்ச்சியால் தோற்றவனை விட.. சூழ் நிலையால்  தோற்ற அவனே - அதிகம்! காதலை இழந்தவன்  காசை இழந்தவனை விட.. காலத்தை இழந்த அவனே - அதிகம்! அன்பால் வீழ்ந்தவன்  ஆசையால் வீழ்ந்தவனை விட.. ஆணவத்தில் வீழ்ந்த அவனே - அதிகம்! சினத்தால் அழிந்தவன்  சிநேகத்தால் அழிந்தவனை விட.. சிந்திக்காது அழிந்த அவனே - அதிகம்! உறவால் ஏமாந்தவன் ஊரால் ஏமாந்தவனை விட.. உணராது ஏமாந்த அவனே - அதிகம்! ஊர் அறிந்து - உலகறிந்து.. ஒன்றும் அறியாதே  போன அவனே - அதிகம்! அதிகம் பேர் ஆன போதும்  இது போல் -  ஆகி போன அவர்களே அதிகம்..  என்பேன்! தேவா.

படித்துறை!

கருங்கல் படியே.. கருங்கல் படியே! கலங்காதே இப் படியே நீ!  கலங்காதே இப் படியே! மிகு கால் பதிந்த - படியே  பெரும் நீர் சுமந்த - படியே! அடர் பாசம் யெல்லாம் நெஞ்சோடு.. உனை - பாராது போவர்  நஞ்சோடு! இதை பார்த்து போவர்  பலருண்டு! ஆற்று படுகையில்  ஆள் இறங்க.. நீர்! - ஏற காத்திருக்கும்  சிறு படிகளாய்! ஆற்றின் இரு கரை யோரம்  இரு கரம் போல.. காட்சி யளிக்கும்  ஆனந்தமாய் பல் காட்டி! நீர் மிகு புரண்டால்.. பாதிக்கும் படி  மூழ்கினாலும் - வெளியேற  வழி சொல்லும்! நீர்! வற்றிப் போனாலும்  உள் இறங்க  உட்கார்ந்து பேச இடம்  காட்டும்! ஏனோ - என்னை மதியாது போவார்  அனா- மிதித்தும் மறந்து  போவார்! யாவருக்கும் உதவ உறங்காதே இருப்பேன்! இருந்தும் உயர் - எண்ணியது இல்லை! என்னை ஏற -  இறங்க  பயன் படுத்துவார்.. அதன் பின்னர்  ஏற இறங்க கூட பார்க்காது போவார்! துணி தோய்த்து துவைப்பர்  அலசி அடித்தும் வைப்பர்! காது உரசி - கால் உரசி  பேச அமருவர்.. பேச்சு விளங்காது போனால்  என் மீது குமுறுவர்! போகட்டும் போ.. என்னை பத்திர படுத்த வேண்...

தீ பெட்டி!

உசரம் கம்மிதான்  இருந்தும் - உச்சியில் உசிரை வைத்து  மண்டை அதை கொண்டை  போல்.. உரசி - உயிர் பெற  காத்திருக்கும் தன்மை! அதன் தனிமை பலதுவாய் சேர்ந்தே - சிறு  பெட்டியில் அடக்க மாக! அத்யாவசியம் அல்ல  அதன் தேவை! ஆனா - வாழ்வியல்  அவசிய தேவை.. கால மாறுதல்  அதன் தேவையில்(ன்) காரணங்களும் மாறுகின்றன! அதற்கு - நீர் ஆகாது - நமந்து  மரணிக்கும்! நெருப்பு ஆகா - எரிந்து  உயிர் விடும்! காற்றும் ஆகாது - உதவாது  பட படத்து மடியும்! வெளி பார்க்க - ஊமையாக  மௌனித்து விடும்! மண் பார்க்க.. பலரது கை பட்டு - மடிந்து  பரவலாக பதிந்து  மண்ணோடு தன்னைப்  புதைத்து கொள்ளும்! மடியவே காத்திருக்கும்  துடிப்புடன்! சூரியனுக்கு நிகர் இல்லை  சில நேரம்  சிறு சூரியனாய் உதவும்! எனது காலை நேரத்- தேவைக்கும் - தேநீருக்கும்  மாலை நேர பூசைக்கும்  பகையில்லா புகைக்க  உரசுவா னோடு - உரசாது என்னோடு - இட தொடை உரசி.. எப்போதும் உடன் இருக்கும்! அது இருக்கும் போது  மகிழ் வில்லை! இல்லாத போது  வருத்த மளிக்கும்.. யாரை கேட்க ஒரு வித படப...

புது வரவு.. புது கொடி!

அய்யா! இன்று - ஆக சிறந்த செய்தி.. நம் - இளைஞர்களுக்கு ! அண்(ண)ணாரது வெற்றி கழகம்  கொடி கண்டது! களிப்பில் வெற்றி உண்டது! இனி உலக மெல்லாம்  இளைஞர் உள்ள மெல்லாம்  மஞ்சள் சிவப்பு  வண்ணம் தான்.. ஆட்சி பிடிப்பது  எண்ணம் தான்! ஆகாயம் முட்டும்  உயரும் சமூகம் தான்! இனி- யானைகளாய் பிளிறி  மனம் பிடித்து ஆடுவர்.. மதம் பிடிக்காது! இதுநாள் வரை உள்ள  பிரச்சினைகள் - யாவும்  இனி இருக்க போவதில்லை  யாவும் - யாதும்! நல்லதை நினைத்தே நடுவோம் - நாற்று! அது- நேற்றைய கனவாகாது  போகட்டும்! உயர்வாக ட்டும்  அரசியலில் - புது  உயரமாகட்டும் நாளை! நம்புவோம் - நாமும்  பிற புது கட்சிகள் போல்  இல்லாது போக.. உழுவாது விளையாது  எதுவும் - உழைக்காது உயராது! அரசு இயல் சிறக்க.. புது - அரசியல் வேண்டும்  பிறக்க! இது- புது வகையா - அல்லது  பொது வகையா! இது பார்க்க தெரியாது  பார்க்க பார்க்க..  தெரியுமா!? பொறுத் திருந்து  பார்ப்போம்.. நல்லதை வரவேற்போம்  கை தட்டி! - அது நல்லதா யென  தெரியும் வரை.. பார்த்திருப்போம் கொஞ்சம்...