Posts

ஒன்றாத - ஒற்றுமைகள்!

பல வேடிக்கை களும் வினோதங் களும் விவாதங் களும்.. ரசிக்கலாம் - காணலாம்  கேட்கலாம்..   எங்கே? மகப்பேறு இல்லத்தில்  வீடு பேறு துக்கத்தில்  மனம் சேரும் சுக அகத்தில்  இவை அனைத்திலும்  சைகைகள் - செய்கைகள்  பேச்சுக்கள்.. தாலாட்டு ஆய்  ஒப்பு ஆறுதலாய்  சங்கீத சடங்காய் பல விதம் - ஒவ் வொன்றும்  நகை மிகுதியாக போனாலும்  ஆச்சரியங்கள்  அறிமுகம் ஆவது தான்  அதிகம்! குன்று அது மேல் எரியும்  தனி தீபமாய் தெரியும்! சில விடயங்கள்.. தேவா.

இலையா - நீரா - நான்!

தாமரை இலை  தண்ணீர் போல.. ஒட்டாது ஒன்றாய்! இதில் - நான்  இலையா - நீரா?! மீனும் தவளையும் அறியா நீ! சொல் குளமே! மீளா துயரம் அறியும்  நீ!  சொல் என் குருவே! தேவா.

என்ன சொல்லி..

என்ன சொல்லி என்ன.. சொல்லிப் புரியாது  சொல்லிலும் புரியாது  அனைத்து அர்த்தமும்  அனர்த்த மாய்! போனால் போகட்டும் - அது தானே  அது தானே முடிவு - புது வடிவு!? சாஷ்டாங்கமாக விழுந்தால்  அது - சரணாகதி அல்ல.. சந்நிதியை விட்டு வெளியேற - என் நினைத்தால்..! மருந்துண்டோ இதற்கோர்  மாத்திரை உண்டோ!? சொல்லடி சகியே! சொல்லேண்டா நண்பா!

எனதருமை தோழா!

யாரிடம் செல்வேன்.. தோழா! இன்று - உனக்கான தினம்! ஆனா- நீ இல்லை  உன்னை காணாத தினம்  அதனால் - எனக்கானதும் அல்ல.. வேதனைகள் வேறு படும்  இது- வேறுபட்ட வேதனை  என்னுள்! நினைக்காது இருக்க - இன்னும்  மறக்க வில்லை.. மறந்து போக - நீ ஒன்றும்  என் மறதி அல்ல! பிரதி என்றெண்ணி  உனை நினைத்தேன்! பிய்த்து கொண்டு -  என்னை விட்டு பிரிந்தாய்! பிறந்த வருடம் காணும் முன்னே நீ மரித்தாய்! என்ன அவசரம் உனக்கு. நீ!  தான் என்னை விட்டு  மறைந்தாய்  ஆனா - நான் என்னவோ  உன்னை விட்டு மரித்த தாய்  தவிக்கிறேன்..! இன்று - உனக்கு ஒரு அகவை கூட்டச் சொல்லும் தினம்! உன் பிறவித் திருநாள்! எப்படி கூட்டுவது?! என்னை விட்டு பிரிந்தாய்  பிரிந்த தால்  ஒரு ஆண்டை கழிக்கலாம்  என் ஆயுளில் இருந்து.. அது தான் சரியாக இருக்கும்! மாறா நட்பு  மறவா நட்பு - நம் நட்பு  நீ! மட்டும் அதை மறந்தது  ஏன் நண்பா!? உனக்கு வாழ்த்துக்கள்.. கூட என் மனதிற் குள்ளேயே.. மிச்சம் - கிறுக்கல் களாய்  இத் தாளில்  உன் நாளில்! வாழ்த்துக்கள்..டா - நண்பா! என் மோகா! உன் தேவா...

விருப்பு இல்லா..

உன் தெரிவிப்பு இல்லாத  இருப்பு.. வேண்டா யென - சொல்லாத  அறிவிப்பு தானே! அதன் பின்னும்  அற்பமாய் ஓர் ஆசை  அது - நான்  அறியாது இருக்கவே ஆவா! தேவா.

எனக்கான ஒன்று!

எனக் கான அது ஒன்றாய் - உனக்கும்! பாரம் என்று எதையும் எதையும் என்றும் - பாரமாய்.. சுமக்காதீர் கள்! இறக்கி வையுங்கள்  அல்லது - கலட்டி விடுங்கள்.. கனவில் கரைத்து விடுங்கள் - இல்லை  உறைந்து விடும்! சுமந்து கொண்டே  சுகம் காணாதீர் சொல்லி காட்டி..! தேவா.

எதையும் கடவோம்!

நடந்தவை கடவோம்  நடப்பவை நினைவோம்! சுகமில்லா பயிர்  பதறாகும்! சுகமில்லா உயிர்  தவறாகும்.. வர்த்தக மா வாழ்க்கை  வர்த்தம் ஆக்கு மா!? கொடுத்து - வாங்குவதை குறைத்து  மனம் நிறைத்து  வாழ்வோம்! தாழ் வோம் - என் றென்னம் தவறே.. வீழ்வோம் -  என் பதில் இல்லை  நகர்வு! நகர்வோம் - தடை  தகர்வோம்! இறுதி  விடை பெறுவோம்..! தேவா.