Posts

Showing posts from August, 2018

மெல்ல... யோசனை!

வட்டில் சோறும் வறுத்த கருவாடும் நல்ல வாசனை தான்! இருந்தும் மெல்ல-யோசனை தான்... மழை நீர் பயிர் அழிக்க திட்டம் வகுத்தது என்ன  இதை தடுக்க! பரிசுத்த ஆவியை பார்க்கப் போன பாதிப் பேர் மூஞ்சி யிலே முகத்த கானோம்! சேராத கூட்டுக்கு சேர்த்து வைச்ச ஓட்டு எதற்கு! சேத்தோட நாத்து நட சேர்ந்து வாழ பார்த்து நட... பழகி பார் கொஞ்சம் விழகிப் பார்-அஞ்சும்! பாதை மாறி பழகுது பார்த்து பார்த்து அழுகுது போனத்தான் வருமா இது- புறம்போக்கு நிலமா! நாளும் கெடுக்கவில்லை நல்லதும் நடக்கவில்லை நாட்டாமை பண்ண தெரிஞ்சவருக்கு நாடாள தெரியல...! அடைக்கு வைத்த முட்டை அத்தனை யும் கூமுட்டையா போனதென்ன... அரசியலுக்கு வந்வரெல்லாம்-அதை ரகம் ஆனதென்ன! மாநிலத்தின் மாட்சி மறந்து ஆளும் ஆட்சி! மத்தியிலே ஆட்சி நம்மை மதிக்காம போச்சு! சேர்த்து வச்ச வளமெல்லாம் சேம நல நிதி போல போன யிடந் தெரியலை இனி புலபடுமா - அது புரியலை! மனுச முயற்சி-மனசு வச்சா தெரியும் பாரு... ஒத்தையாய் இருக்கையில மத்ததை நினைக்கல மொத்தமா மோசமுனு மனசு யது வெறுக்கல! யோசனை சுருங்குது வாசனை இழுக்குது... வட்டிச் சோறும் வறு...

தண்டனை காலம்!

கையிருப்பு கரையும் முன்னே கடன் கேட்க... கடன் வருமுன்னே- கையிருப்பும் கரைந்து போனது! கிரையச் செலவிற்கே கடன் வாங்கினால் கிரகப்பிரவேசத்திற்கு என்ன செய்வது! வருமானத்திற்கு வழி வகுக்காமல் வரிபாக்கி... நாட ஆதாரம் பல இருந்தும் சேதாராமாய் போனது வழி வுண்டு வகுக்க ஆனால்- விழி இல்லை செதுக்க! கடன் உயர்ந்தது கஷ்டம் வளர்ந்தது நில்லாதது உல்லாசமும் இலவசமும்... வட்டி கட்ட வட்டிக்கு வாங்கிய அதிபுத்திசாலி முன்எச்சரிக்கை முட்டாள்...தனம்! தினம் கஷ்டந்தான் நடப்பது இனி-தொடர்ந்தால்... கஷ்டமே கடப்பது! இது- தமிழகத்தின்(ல்) தண்டனை காலம்!

வகை செய்யுங்கள்...!

வாழ்க்கை தத்துவம் வாஸ்து வில் இல்லை! வானத்திலிருந்து சொல்லப்பட்டது... மழை-நீர் இல்லாது போனாலும் நில்லாது பெய்தாலும் அழியும்... அழிக்கும்! பேர் எடுக்க பெருமிதம் கொள்ள இது-நேரமில்லை! கேர் எடுத்து காத்திடுங்கள் எங்களை மைய அரசே!

இன்னும்...

இருப்பதை அழிப்பாயோ கொடுத்ததை எடுப்பாயோ கிடைத்ததை தடுப்பாயோ... பெய்யாது கெடுத்தாய் இத்தனை ஆண்டும் இப்ப- பெய்து கெடுத்தாய்! பயிரினம் அழித்தாய் படிப்பினை கொடுத்தாய் பண்பினை வளர்தாய் மழையினம் மண்ணில் கேரளம் தண்ணீரில்... கடல் உப்பிப் போகட்டும் நாம் தப்பி போக...!

மழையே!

ஓ வென கொட்டும் மழையே! உன்னை- பார்க்கும் போதெல்லாம் பரவசமாக இருக்கும் முன்னே! ஆனால்-இப்ப பயமாக இருக்கிறது... கேரளத்தை பார்த்தப் பின்னே!

விதையும்... நானே!

நம் வெகுதூரப் பயணத்தில் என் குட்டி தூக்கம் இதமானது... இயல்பானது! உன் வேகத்திற்கு எட்டி வாராத போதும்... இடை நிற்றல் இல்லை! இலக்கு என்று நீ -  வைத்து தொட்ட எல்லையை எட்ட(தூரம்) நின்று தொடப் பார்த்தேன்... தொடாது நின்று-வந்த வழி பார்த்தேன்! வெற்றி என்னமோ உன்னோடு தான் எது-வெற்றி என்பதுதான் என்னோடு... நான்- தயங்கி இருந்த காலத்தில் நீ தாங்கி இருக்கலாம்... ஆனால்- என் தயக்கம் எனது தாயகம் அல்ல! களிப்பில் நீ இருந்தாலும் வியப்பில் நான்! இன்னுமா நான்... எனக்குள்! உன் உயர்வு க்கு(ம்) வேர் வைத்தேன் தினம் நீர் வைத்தேன்! யதார்த்தம் மடிந்து வியாக்கியானம் விடியலை தொட்டது! ஆம்! உனக்குள் வெற்றி சேர்த்த விலையில்லா விதையும்... விதைத்தவனும் நானே!
மன்னிக்க வேண்டுகிறேன்! என்னையே எண்ணி-  எண்ணி உன்னை எண்ணாது போனேன்! குத்து விளக்கின் ஒளி வெண்குழல் வெளிச்சத்தில்  தெரியாது போனது! என்னிடம் குறை யிராது என்றென்னி -  உனை நிறை செய்யாது போனேன்! ஆற்று வெள்ளத்தில்-அடி மண் அறியாதது போல்- உன் ஆழ் மனம் அறியாப் போனேன்! விலகாது இருப்பதாகவே எண்ணி இத்தனை விலகி இருக்கிறேன்! உன் வெகு நேர காத்திருப்பின்... விலை அறியா போனேன்! நின் மதியின் வெகுமதி உயர்(கூர்) தெரியாது போனேன்! விரல் தொடும் தூரத்தில் இருந்தும் உன் விரக்தி யை சந்திக்க வில்லை! சிரமம் கூடாது என எண்ணி-சினப் படுத்திருக்கிறேன்... சுதந்திர பறவை(யாய்) என நினைத்து இத்தனை நாட்கள் என் சிறைக்குள்! முத்தாய்பாய் புருஷர்களுக்கு முன் மாதரி யென நினைத்து நானும் புறமுதுகிட்டு ஓடித் தான் இருக்கிறேன்! இருந்திருக்கிறேன்...

தொடர்வோம் அன்பே(பை)!

அன்பே! உனை சந்திக்கும் வேளை சிந்திக்க எவ்வளவோ இருந்தும்... நீ! நிந்தித்த வார்த்தைகள் நினைவுகளாய் நித்தம் நெருங்காது போகவே நிறைமாத வெறுப்பாய் என் கற்ப பை குப்பைகளை-அகற்ற(றி) சுத்தம் செய் ஒரு-சின்ன சிரிப்பில் இன்சொல் பேசி(சு) கொடு -  முன்பல் தெறிய! என் நெடுநாள் வாழ்விற்கு அந்த கொடும் மனத் தாழ்விற்கு கெடும் என் பயண நகர்விற்கு... சுடும் வார்த்தை தவிர் சுபம் வளர்க்கும் பயிர்! என் நீண்ட பெருமூச்சை(சே) எனை நிதானமாக்கு! இங்கு- உருகுவது நெஞ்சமல்ல எனை- முடக்குவது கொஞ்சமல்ல... கடந்த கால கசப்பிற்கு நிகழ்கால நித்திரை இழப்பு ஏன்! எதிர்காலம் வினா எழுப்ப விடையறியா வேதனையில்... வேண்டாமே-,இது! விக்கலா சிக்கலா விக்கி தவித்தது போதும் சிக்கி தவிர்த்தது போதும் - இனி விலாகாது இருக்க வேண்டுவோம்-அதை தாண்டுவோம் மனங்கூட... மரணம் வரை தொடர்வோம்-என் அன்பே - நம் அன்பை!