Posts

Showing posts from August, 2019

ஒரு போதும் நெருங்காது!

தெரியவில்லை புரிய வில்லை... ஆம் - மறந்து விட்டேன் மறந்தே போச் சு! இப்படியும் கூட காலத்தை ஒட்டலாம்... கஷ்ட படாது! அவர்களை  கஷ்டமும் நெருங்காது...

நட்பே...!

நட்பிற்கு இணை - ஏது! நட்பிற்கு நிகர் துணை யேது!? அதை தடுக்கும் அணை ஏது!! மனை மறந்தோம் தனை மறந்தோம் நட்புடன் இருக்கும் வேளை... உரசாது ஒன்றானோம் உசுராய் என்று ஆனோம்! விலாசம் தெரியாத போதும் மனம் - விலகாது இருந்தோம்... உயர்வுக்கு உவமை உண்மைக்கு உவமை... நட்பாய் தான் ஆனது! நட்பால் தான் ஆனது!! நாட்டு பண் போல நாம் அறிந்தோம் நட்பை... உலக சிறந்த மொழி - அது நட்பின் வழி! வாழிய நட்பே தூய நட்பே துயரம் கண்டாலும் தூரக் கண்டாலும் விடாது நட்பே... வீழாது என்னுள் மாளாது என்றும்! நட்புடன்.

என்றும் நமதே!

எப்படியோ!? சேர்த்தாச்சு... கொஞ்ச நாளைக்கு மெல்லுவதருக்கு அவலாய்... ஆவலாய் - எதிர்பார்த்த ஒன்று! இந்திய ஜோதியில் இந்த தேதியில் ஐக்கியமாக போகுது... இது வரை - அதன் நாற்றமோ , மனமோ... நமக்கு அதிகம் தெரியவில்லை! இனி - இரண்டற கலந்த பின் தான் தெரியும்! ஜம்மு -  காஷ்மீர் சந்தனமா அல்ல சாக்கடையா !?  என... இருந்தும் வரவேற்போம்... பலரும் பயந்து மணி கட்ட தயங்கி ஒதுங்கியவர்கள்ளுக்கு மத்தியில்... மத்தியில் ஓர் ஆட்சி!  நல்லது நினைப்போம்... நல்லதை எதிர்பார்ப்போம்! வாழ்க பாரதம்!!

இராணி மங்கம்மாள்!

இராணி மங்கம்மாள்! மதுரையின் பெருமையே எமது குல அருமையே !! பெண் இனத்து பேர் உண்மையே... வாழி நீயே! வீரத்தின் வழிகாட்டி யே அறம் காத்த சிம்மாட்டி யே அன்பு காத்து உரமூட்டி விதவை என்ற சொல்  வீரத்திற்கு பொருந்தாது... என பறை சாற்றியே இராணி மங்கம்மாள் பெருமை எம் - மாமதுரை பெருமையே!! என்றும் மாறாது மறையாது உன் புகழ்! சுடர் விடும் அகலாய் எங்கள் அகலிகையாய்... நீ! 370- ஆம் ஆண்டு போற்ற தக்க வகையில் சிறப்பு அந்தஸ்து எண்ணாய் ஆற்றல் மிகு பெண்ணாய் எம் நெஞ்சில் என்றும் நீங்கா இடம்... அதை பறைச் சாற்றும் உம் - சத்திரம் , சாலை அன்னதானம் கூடம்... திகழும் உம் மகுடமாய் எம் மண்ணில் அதை காணும் போது கவ்ரவம்  எம் கண்ணில்... இன்று மட்டும் அல்ல என்றும் வீர வணக்கம் சொல்வோம்... அரசர் வீர தீர சொக்கநாதர் திருமதிக்கு வீரமாய் வணக்கம் சொல்வோம்! அரங்க கிருஷ்ண முத்து வீரப்பன் தாய்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் சொல்வோம்... வாழ்க வாழ்க வணக்கங்கள் பல!!

சுதந்திர தின வாழ்த்துக்கள்!

சுதந்திர தின வாழ்த்துக்கள் வேண்டிப் பெற்ற பல போராட்டங்கள்  தாண்டிப் பெற்ற... விடுதலை திரு நாள். வாழ்த்துக்கள்! சுதந்திரம் பேணுவோம் இனி - இந்தியாவில் எங்கும் அடிமை இல்லை என கானுவோம்... இதுவும் சுதந்திரத்திற்கு மரியாதை! அகிம்சை வழி நின்றவர்களுக்கும் வீர தீர வழி சென்றவர்களுக்கு வணக்கம் செய்வோம்... அவர் தம் நினைத்து  வந்தனம்  சொல்வோம்!! சுதந்திரம் என்ற பெயரில் நாகரீகம் இழக்க வேண்டாம் ஒழுக்கம் மீற வேண்டாம் சுயம் இழக்க வேண்டாம்... சுதந்திரம் என்ற  பெயரில் சரித்திரம் மறக்க  வேண்டாம் பண்பாடு துறக்க வேண்டாம் பாரம்பரியம் வெறுக்க  வேண்டாம்! சாதிக்க தக்க பயன்பா டு கொள்ளத்க்க சுதந்திரம் பேணுவோம் சுகந்தனை காணுவோம்! சுகம் என்ற பெயரில் சோம்பல் காக்க  வேண்டாம்... உபரி எப்போதும் உபயோகம் மில்லை விரயம் எப்போதும் வீனே... தரையில் அமரும் வரை  உடலுக்கு சுதந்திரம்! தானம் தரும் வரை மனதிற்கு சுதந்திரம்! விவசாயம்  பேணும் வரை மண்ணிற்கு சுதந்திரம்!! யாருக்கும் அடிமை யாகத வரை யாரையும் அடிமை படுத்தாத வரை......

வருத்தம் வேண்டாம்...!

ஆலைகளில் ஆள்  குறைப்பு... வேலை இல்லாத பெரும் காழ்ப்பு! விற்பனை குறைவு உற்பத்தி குறைவால் வேலை இழப்பு! வேண்டாத செய்தியா - நம் காதில் ஒலிப்பு! விரக்தி வேண்டாம் சுயசக்தி உண்டு நம்மிடம்... புன் ஆகிபோன மண்ணை மனம் ஆக்குவோம்... பணம் பண்ணும் பொன் ஆக்குவோம்! களைத்து போன களைப்பைகளை கலகலப்பாக ஆக்குவோம்! கரிசல் மண்ணில் கர்சினை காட்டுவோம்... செம்மண்ணில் செழுமை காணுவோம் வேலை இல்லாதவர்களுக்கும் வேலை இழந்த வர்களுக்கும் விருந்தாய் உண்ண நல் - மருந்தாய் ஒன்று சேருவோம்... உன்னத தொழில் ஒன்று - உண்டென்று உணர்வோம்! உணவாய் - அது போக உற்பத்தி யாய் விலை காட்டுவோம்! சுய தொழில் சுகம் கொடுக்கும்! கைத் தொழில் நமக்கு - அது கை கொடுக்கும்! என்ன அதுவென கேட்டால்... உன்னதம் அதுவென சொல்லுவோம்! உழவுக்கு திரும்புவோம் அதை உலகிற்கு உணர்த்துவோம் !

சிறு சங்கடம் கூட...

சிறு சருகும் நீரோட்டம் தடுக்கும்... சிறு சங்கடம் மன ஓட்டம் கெடுக்கும்! வில் அம்பு பழகாது... பழகியவன் வித்தை காட்டும்  போது கை தட்டும்! நல் அன்பு பழகாது ப ழ கியவன் வார்த்தை (வாழ்க்கை) காட்டும் போது மனம் கொட்டும்! சிறு சொற் கூட சில நேரம் சிலையாய், வடுவாய் நெஞ்சினிலே... மேடை அமைத்து விவாதம் பண்ணக் கூடும்! விடிந்துங் கூட விடை காணாது  போகும்... மொழிக்கு இல்கணம்  முக்கியம்... சொல்லி தந்தார்கள் சொல்லியதை எழுதி வைத்தார்கள்! வாழ் வியலுக்கு எது முக்கியம்.. சொல்லாது சென்றார்கள் எழுதாது போனார்கள்! அவர்களுக்கு தெரியக் கூடும் இலக்கணம் மாறாது வாழ்வியல் ஏற்காது... நிலை உயரும் வரை நினைவு உள்ள வரை நித்திரை கேடாய் நித்தம்மும் கேடாய் நிரந்தர கேடாய்... புரியாது(தே) போகும்... சிலது - புரிந்தும் போகும்... இப்படிதான் என! வையத்துள் வாழ்வு நிலைக்க பெற அது - செல்வத் துள்  செல்வமாய்... நினைக்கப்படும்!

கறை போகாது...!

கை கொட்டி காசு பறிக்கும் ரெண்டு கெட்டான் சிக்னல் லில்... வேர்வை மீறி வேதனை படும் மனம் சம்மணம் மிட்டு சங்கடப் படும்! அவர் நிலை கண்டு.. அது - பசியின் கொடுமை இதை - என்ன சொல்வது... கை கொட்டாது கையுட்டும் ஊழலும்  புரிய நீதி நேர்மை இரண்டையும்  கெடுத்தான்... சிக்கிய பதவியில்! வேட்டி கட்டிய தமிழா! ஆளும் பதவியில்... நேற்று - ஆணவ பேச்சு பெருமை கொண்டோம்! பரிசாய் இன்று பெரும் ஆமை அதை கண்டோம் இது ப. சி.யின் கொடுமை! உயர் பதவியில் உச்சம் தொட்ட தமிழர்களுக்கு இது - அவ மரியாதை தமிழகத்தின் தமிழ் இனத்தின் தலை குனிய காரைக்குடி சிங்கமென நினைத்து கரையானது அசிங்கமா... இது செய்தியாகும் ஊடகங்களுக்கு சோறு போடும்! விரக்தியாக நம் மனம் சோர்வு படும்! ஊழலும் கையூட்டும் என்றுமே - கறை சேராது எனத் தெரிந்தும்... அவரை போட்டால் துவரையா முளைக்கும்... காத்து இருங்கள் கார்த்திக் - சி(ஜி) இனி எத்தனை சி(c) கரைத்தாலும் காலத்தால் மறையாது மாறாது - இக் கறை போகாது...

வாழ்க நீதி!

வாழ்க நீதி! வளர்க மன்றங்கள்... இனி - எத்தனை மாமாங்கமோ தெரியவில்லை! அமலாக்க பிரிவின் ப.சி.யின் இவ்வழக்கு! சீரியலாய் மெல்ல வளர்க்கூடும்! அல்லது சீரியசயாய் மெல்ல தளர்க்கூடும்! பேரத்தின் பெயரில்... ஊட கங்களின் பசி போக்கும் ஆடை கசங்காது ப.சி.யின் காலத்தை போக்கும்... அது வரை மதுவருந்தி வாகனம் ஒட்டு பவர்களுக்கும் தலை கவசம் அணியாத நபர்களுக்கும் தண்டனை வழங்கு வோம் உடன் அபராதம்  செலுத்த - நிர்பந்தம்,  நிபந்தனை யாய் வழங்குவோம்! இந்திய தண்டனை சட்டத்தை மதிப்போம்! என உறுதி கொள்வோம்... வாழ்க நீதி வளர்க மன்றங்கள்.

கிருஷ்ண ஜெயந்தி!

கோகுல கண்ணா வா! வா! குழல் ஊதும் மன்னா வா வா! ஆவணித் திங்களில் அஷ்டமி திதி யில் பிறப்பு அதுவே உன் சிறப்பு! குட்டி ஆண்டவரே வா வா! வெண்ணெய் உண்ட கண்ணா என்னை ஆண்ட மன்னா... வெறுப்பு அறியா உன் - சிரிப்பில் சிகரம் கூட சிறிதாய் தெரியும்! கருமை கொண்ட  மேனி நீ! பொறுமை கண்ட ஞானி அரும் பெருமை கொண்ட உன் அருமை உணர்ந்தவருக்கு மறுமை இல்லாத செய்வாய்! செவ் வாய் கொண்ட கேசவா நீ! வாய் பிளக்க  தேசம் கண்டோம் உன் மீது நேசம் கொண்டோம்! மண்ணாய்  இருக்குமென - கண் தேடிப் போனது முன் அகிலம் தெரிய... அண்டமெல்லாம் ஆடிப் போனது! திசை தெரியாத எங்களுக்கு விசை காட்டிய முதல் சாட்டிலைட் நீ! - தான் மலை தூக்கி ஆவினம் காத்த மாதவனும் நீ! தான் கவலை போக்கி மானுடம் காத்த ஆதவனும் நீ! தான் கம்சனை கொன்று யாதவ வம்சத்தை காத்தவனும்... காங்யேன் நீ! தான் ராதை காதலா கோதை காவலா யசோதை பாலகா உன் - பாதம் பதிக்க வா... எம் இல்லங்களில் நல் எண்ணங்களில் கீ தை தந்தவனே நல் பாதை சொன்னவனே தர்மம் காக்க அன்று - பாரத போர் ஊழல் ஒழிய நேர்மை காக்க இன்று ஒன்ஸ் ம...