Posts

Showing posts from February, 2020

வேண்டுதல்! வேண்டி...

குருவழி வேண்டிப் பெற்ற அருளால் வேண்டுகிறேன் முருகா! உன் திருக்கோயில் குடமுழுக்கு தமிழில் நிகழ வேண்டி நிகழ்த்த வேண்டி அது - நிலைக்க வேண்டி எல்லோர் மனதிலும் அதை நினைக்க வேண்டி தமிழுக்கு முதலிடம் வேண்டி தரணியிலே தமிழ் மந்திரங்கள் ஒலிக்க வேண்டி... தாராளமனங் கொண்ட தயாவே! என் தமிழ் வேந்தே தமிழ் கடவுளே! அழகனே, அமுதனே சிவமைந்தனே முருகனே உன்பாதம் பணிந்து வேண்டுகிறேன்... உன் தயவு வேண்டி தடையில்லாது இது நடக்க வேண்டி எம் வேண்டுதலால் உம்முன் வேண்டி நினை வூண்டுகிறேன்! வேல் கொண்டவனே வேலவா கந்தா கடம்பா கதிர்வேலா தண்டபாணி சாமியே உன் திருக்கோயில் குடமுழுக்கு தமிழில் நடந்திட வேண்டுகிறேன் இது நடக்க வேண்டுகிறேன் நீயே முன்னின்று நடத்திட வேண்டுகிறேன் என் ஆசை நிறைவேற உன் ஆசி வேண்டுகிறேன்! பிறர் மனமும் இதை தீவரமாய் யோசிக்க வேண்டுகிறேன் தமிழால் தமிழுக்காக உம்மிடம் யாசித்து வேண்டுகிறேன்! இறையே என் நிறையே! எம் நெஞ்சம் குளிரச் செய்வாய் தமிழே!  எங்கும் எதிலுமாய் உலகமெங்கும் மிளிரச் செய்வாய்! செவ்வாய் முகத்தோனே என் தேச சுகத்தோனே இதை நீ செய்வாய் சேவர் கொடியோனே சேவகர் படையோனே உம் அருளின்றி ஆசியின்றி ஏதும் நடா... ஆ...

தமிழ் ஆள...!

,அன்பர்களே! நண்பர்களே பேரன்பு மிக்க பெரியோர் களே தமிழ்மொழி காவலர் களே ஆர்வலர்களே பற்றாளர்களே... சித்தர் நெறி தமிழ் நெறி நெறியாளர் களே! தமிழ் போற்றும் பண்பாளர்களே பெண் களே இளையவர்களே! மூத்தோர்களே பத்திரிகை ஊடகத்தவர்களே... மொழி பற்று மிக்க அனைவருக்கும் ஓர் அன்பு வேண்டுகோள்! பழனி முருகன் திருக்கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெற தமிழில் மட்டுமே நடைபெற உடல் பொருள் ஆவி யெல்லாம் நம்- சிந்தை  எல்லாம் அந்த எண்ணம் ஓங்கி ஒலிக்கட்டும்! அதற்கு முதற் கட்டமாய் நம் ஒற்றுமை காக்க ஒற்றுமையை காட்ட தினம் மாலை ஆறுமணிக்கு நம் இல்லங்களில் தெரு கோயில் களில் மற்றும பிற இடங்களிலும் இரண்டு நிமிடம் பூசை மணி அடித்து மணியோசை ஒலிக்கட்டும்! அல்லது அகல் விளக்கு ஒளிரட்டும்! ஒவ்வொரு வீட்டிலும் வீதியிலும் ஊரிலும் கிராம த்திலும் மாநகர த்திலும் பெருகி மொத்த தமிழகத்திலும் இம் மணியோசை ஒலிக்கட்டும்... இது பிற மொழி க்கு எதிராக அல்ல! நம் தமிழ் மொழி க்கு ஆதரவாக... மணி சத்தம் பெருக பெருக தமிழகம் உணர தமிழில் குடமுழுக்கு  நிகழ நம் ஒற்றுமை (யை) காணலாம்! நாளை முதல் இல்லை வேண்டாம் இன்று முதல் மணியோசை கேட்கட்டும் தொடங்கட்டும் ப...

சிந்தனைச் சிற்பி!

சிந்தனை சிற்பி! தோழர் சிங்கார வேலர் அவரது- நினைவு போற்றுவோம்! மொழி பற்றாளர் சமத்துவ சமுதாய சிந்தனை உடைய வர்... அந்நிய எதிர்ப்பை ஆவேசமாக உறுதியாக எதிர்த்தவர்... தொழிலாளர் களுக்கு ஒரு தினம் வேண்டி செங்கொடி ஏந்தி (ஏற்றி) மே தின(ம்) உருவாக காரணமானவர் சென்னை மாநகராட்சி யின் முன்னாள் உறுப்பினர்! தமிழில்  உறுதிமொழி கூறி பதவியேற்ற வர்! இந்திய கம்னியூஸ்டு கட்சி தொடங்க உருவாக காரணமாக இருந்தவர் - அதன் முதற் தலைவர்! நெஞ்சு உரமிக்க நேர்மை திறன்மிக்க... பெரியார்  அண்ணா பாரதிதாசன் ஆகியோர் போற்றிய ஒப்பற்ற தன்மான தலைவர் செம்மலர் செல்வர் திருமிகு சிங்காரவேலர் மெல்ல மறந்து நிற்கும் தேசம் இன்று-(18/2) நேசம் போற்றும் அவரது  பிறந்த தினம்! வாழ்க அவரது புகழ் வாழியவே! அன்புடன்

வேண்டும் தமிழில்!

தஞ்சை யில் தயங்கினோம் தாமதமாய் குரல் உயர்த்தினோம்! உரிமை கேட்டோம் நீதி கேட்டோம் தனித்தனி பயணத்தில் பலன் பெரிதில்லை... புரிந்து கொண்டோம்! சாமர்த்திய அரசு சமன் செய்ய முயற்சித்தது! நீதி துறையும் சாய்ந்து (சார்ந்து) சென்றது... சமம் தான் இரண்டும் அங்கீகாரம் வுண்டு இரண்டாவதற்கும்! நம் மொழி வெல்ல நம்மில் ஒற்றுமை இல்லை பெரிதாய் சொல்ல... பார்த்தோம் வேர்த்தோம் பலனில்லை மனம் நொந்தோம்! சொந்த நாட்டில் சொந்த மொழி க்கு இந்நிலை யா? இனியும் வேண்டாம் இதுபோல் ஒரு நிகழ்வு பக்கத்தில் வரவிற்கிறது பழனி முருகன் திருக்கோயில் குடமுழுக்கு விழா!? பயங் கொள்ள வேண்டாம் பிற மண்ணீயர் பிற மொழி பின் பதுங்கி நிற்க வேண்டா மாயை நீக்கி வெளி வருவோம் நம் மொழி முத்தமிழ், செந்தமிழ் செம்மொழி சிறந்தது மூத்தது என மொழி உணர்வோம் இனம் காக்க மொழி காக்க ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து... இனி தமிழக த்தில் தமிழ் கோயில் களில் தமிழில் தான் குடமுழுக்கு! - என குரல் உயர்த்துவோம் நம்மொழி சிறப்பு உணர்த்துவோம்! ஒன்று படுவோம் வென்றெடுப்போம்! எங்கும் தமிழ் எதிலும் தமிழாய் குடமுழுக்கு ம் நன்னீர் தெளித்தலும் தமிழ் மந்திரங்களால் புதிர் சொற்களால் அல்ல அழகா...

பிப்.14 ஒர் தினம்!

காதலர்களுக்கு ஓர் தினம்! காதலுக்கு அது நித்தம் சாதலுக்கு முன் தத்தம் நிறைவு செய்ய நிறைய செய்ய... ஆக காரியங்கள் அனைத்து ம் அவசியமான தாய் அர்த்தமுள்ள தாய் அன்பான தாய் ஆக்கிட மாற்றிட... மாறா நிலை காண நீ!  நீயாகவே இருக்க வாழ்வு இனிக்க... அநேகம் உணர்ந்து கொள்வோம் அதில் உண்மை கொள்வோம் மனக் காதல் கொள்வோம்! அது- வசிய மருந்தல்ல மசிய வைக்கும் மருந்தல்ல... மறவாது நினைக்க வைக்கும் தவறாது மறக்க வைக்கும் மா மருந்து! ஆகையால் காதல் செய்வீர்!

அரவிந் கெஜ்ரிவால்!

வாய்த்த வாய்ப்பை வகையா(ய்) பயன்படுத்தி வழித்தடமாய் வழி மாறா நிலையா நிறுத்த முயற்சி... தட்டிப் பறிக்காது தவறவிடாது வெற்றிக்கான வெற்றி காண வழியாய்! இலவசங்களோ ஓட்டுக்கு பணமோ அதிகார பயமோ இல்லாது கொஞ்சம் அரசியல் மாற்றி வசதி ஏற்றி ஓரளவு சேவைகள் சலுகைகள் நேர்மை என நேர்பட பேசி  சிறு தவறுகள் சிறு பிழைகள் பொருட்படுத்தாது... பொத்தாம் பொதுவாய் வழங்காது பொறுப்பு ணர்ந்து பொறுப்பு நிறைந்து நினைந்(த்)து வாக்களித்த அந்த தலைநகர் வாசிகளுக்கும் வாக்களித்த மேதைகளுக்கும் வாக்களிக்காத மா மேதாவிகளுக்கும் மரியாதை கலந்த வணக்கங்கள் பல! மூறாம் முறையாய் முறையாக துடப்பம் முன்னெடுத்து இன்னும்  பாக்கி உள்ளது சுத்தம் பண்ண வாய்ப்பு கேட்டு வாய்த்த வாய்ப்பை வகையாய் பயன்படுத்தி மீண்டும் முதல்வராக ஆம் ஆத்மியின் தலைவராக தலை நிமிர் தோழா! தலைநகரின் தன்மான தலைவா! வழங்கிடு நல்லாட்சி மக்களுக்கு உதவ நல்லதாய் ஒரு ஆட்சி! ஆணவமில்லாது அசிங்கமில்லாது அவசியமுள்ளதாய்... அர்த்தம் கொள்ளட்டும் முதல்வரின் இன்று- முதல் அவரின் பதவியும் பலமும்! ஆக தலைவராக கெஜ்ரிவால்! இனி ஆகட்டும் தலைநகர் டெல்லியில் கெத்து அவரால்! வாழ்த்துகள்! வாழ்க வள...

வேதனையின் வெளிப்பாடு...

வீழ்ந்தாலும் எழுந்தாலும்... எம் தமிழோடு எம் தமிழுக்காக! மாளாது வீழாது மீட்டெடுப்போம் தமிழராய் தஞ்சையில்! வெஞ்சினம் நெஞ்சினிலே வஞ்சினம் ஏதுமில்லை... தயங்காது தளராது பங்கெடுப்போம்! உயிராய் மெய்யாய் உயிர்மெய் யாய் வென்றெடுப்போம்! தாய் மொழியாம் தமிழ் மொழி யில் மந்திரங்கள் (ளை) ஓதிடுவோம் குடமுழுக்கு வேளையிலே... இயந்திரங்களாய் மோதிடுவோம் வாதிடுவோம் அது வரும் வேலையிலே! எம் பாட்டனும் பூட்டனும் கட்டிய கோவி லது... கோவில் அது! எம் மொழி செம்மொழி யாம் தமிழ் மொழி யில் குடமுழுக்கு! காத்திடுவோம் காத்து தந்திடுவோம்... நம் பேரன்  பேர்த்திகளுக்கு! உடை நீக்கினாலும் உடையாய் உயிர் நீங்கினாலும் பெருமை கொள்வோம்... பெருவுடையார் க்காக! உறுதியாக போராடுவோம் இறுதிவரை... உடல் குருதி குன்றும்வரை! தாத்தா கட்டிய கோவிலை தந்தை காட்டிய வழியிலே தாயாய் போற்றும் மொழி யினை தமிழால் தமிழராய் ஒன்றுபடுவோம் வென்றெடுப்போம்! உணர்வு சுருங்காது உரிமை கேட்போம்! உரிமை க்காக உணர்ந்து உண்மையாய் பகிர சொல்வோம்... பங்கு கொள்வோம்! சொல்லாது கொள்ளாது செயலிலே... வெல்லாது போகாது தமிழினம் தமிழ் இயக்கம்! பிறமொழி காழ்ப்பு எமக்கில்லை... எம்மொழி ...

ஆதரீப்பீர்...!

அன்பர்களே! ஆதரீப்பீர்... ஆதாயம்பாராது! இன்பத்தமிழ், இசைத்தமிழ் ஈடுஇணனயற்ற மொழி உன்னதமான உலகம் போற்றும் மொழி ஊன்று கோலாம்   தமிழர்களுக்கு எண்ணத்தில் கொள்க ஏமாறாது இருப்போம்-     இனியும் ஐம்பெருங் காப்பியங்கள் தந்த மொழி யில் குடமுழுக்கு!  தஞ்சை யில் தயங்காது ஓன்றுபடுவோம்... ஓருங்கிணைவோம்! ஒற்றுமை காப்போம்! தமிழர்களாய் ஓங்குக வெல்க அறப்போர்... ஒளவை சொன்ன மொழி யில் அ.்.து நமது வழியில் தஞ்சை யில் குடமுழுக்கு தமிழில்  நடந்திட நடத்திட... அனுமதி  அங்கீகாரம் பெற நாளை! தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்டெடுப்பு மாநாடு நெஞ்சை! ஆதரிப்போம் வருக வருக வருகை பதிவு செய்து ஆதரவு கரம் நீட்டுவோம்... வர இயலாது போதும் வருகை பதிவு இல்லாது போனாலும் மனம் ஒன்று கூடிப் பிராத்திப்போம் வெற்றி பெற மெல்ல தமிழ் வெல்ல! வென்றெடுப்போம்... தமிழில் குடமுழுக்கு பெருவுடையார் மனங்குளிர... தமிழர்கள் அகங்குளிர மொழி காப்போம் தமிழர் மானம் காக்க! தமிழ் மறை தமிழர்களின் முறை ஆகமவிதிப்படி தமிழில் மந்திரங்கள் உலகம் போற்ற உண்மை ஆற்ற வாருங்கள் வருகை தாருங்கள!! வாழ்க தமிழ் வளர்க தமிழினம்!! நன்றியுடன் தேவா.

இழக்கு!

இழுக்கு...! அரசே! வெட்கம் வேதனை உமது செயல்... தமிழிலும் குடமுழுக்கு இரண்டாம் தர நிலை எம் மொழி க்கு வேண்டாம் உமது பிச்சை! தமிழில் மட்டுந்தான் குடமுழுக்கு! இதில் மாற்றமில்லை எங்களது நிலை மாறவு மில்லை! தைரிய மிருந்தால் அரசானை... அரசே ஆனை வெளி யிட்டுப்பார் சமசுகிருதத்தில்! தமிழ் இனமே! தலை நிமிர் உணர்வு கொள் உணர்ந்து சொல்... தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தமிழில் மட்டுமே! தமிழர்களே! இன உணர்வு கொள் இங்கு மீண்டும் ஒருமுறை ஒத்துலாமை இயக்கம் தொடங்க வைக்காதே! இந்நிலை தொடர வைக்காதே... அரசே! நன்றி கொள் அரசு இருப்பதும் ஆட்சி நீடிப்பதும் தமிழர்களின் வாக்கு! இனியும்  சொல் லாதே சாக்கு! இது தமிழகம்! உமது ஆட்சி நடப்பது நீதி கிடைப்பது எல்லாம் - தமிழர்களின் வரிப் பணம்! இது உமக்கு இயலாது போனால் அடுத்து  தாங்கள்  முயலாது போவோம் இது- வலியின் பலம்! இன்னும் பாராமுகம் தொடர் ந்தால் போராட தயங்காது தமிழினத்தின் தனி குணம்! வெற்றி கொள்வோம்! போற்றி சொல்வோம் தமிழே! வாழ்க! வளர்க!!

ஆளை(ள) வுடு!

நாளை வேளையில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் புதன் நாளில் புரிந்து சொல்ல... வழக்கறிஞர் தோழர்கள் உறுதுணை யோடு... உரைத்துச் சொல் வோம் உணர்ந்து சொல்வோம் இனம் காக்க - நம் மொழி காக்க மனம் இணைந்து செல் வோம் கரம் இணைத்துக் கொள்வோம்! உரிமைகாக்க  போராடுவோம் தமிழ் உயர்வுக்காக போராடுவோம்... தமிழ் நாட்டில் தமிழுக்கு முன்னுரிமை தஞ்சை யில் குடமுழுக்கு நம்முரிமை! அரசே! நீ- ஆணை இடு அல்லது சமசுகிருதம் தான் ஆட்சி மொழி யென எங்களை  ஆளை விடு!

நீண்ட வருத்தம்...

ஆனந்தம் கொண்டோம் ஆதாயம் கண்டவரைப் பார்த்து... ஆதங்கம் கொண்டோம் தஞ்சை யில் தமிழன் நிலை கண்டு தமிழின் மொழி கண்டு! ஆகாய கலசமும் ஆதாய விலாசமும் கிடைத்தது அந்நிய மொழி க்கு! எம் மொழிக்கு என்ன பெருமை! விட்டு கொடுத்த தை தவிர... விண் நின்று பார்க்கும் எம் முன்னோருக்கு மண் நின்று பார்த்து நான் - என் சொல்ல? மன்னிப்பை தவிர பெரிய கோவில் குடமுழுக்கு இல்லை இல்லை பிரகதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் இனிதே சிறப்புற நடைபெற்றது! இதில் தமிழனுக்கு என்ன சிறப்பு எம் - தமிழுக்கு என்ன சிறப்பு! அதிகாரம் வென்றது ஆன்மீகம் வென்றது சரி ஆகமம்! என் ஆசை மொழியில் இல்லையே தமிழ் வழியில் இல்லையே! வேகம் கொண்ட இனம் வெட்கம் கெட்டுப் போனதே - இது என்ன குணம்! பொறுமை மிகு பெருவுடையார் இதை  பொறுத்துக் கொள்ளலாம்! பெருமை மிகு -எம் மொழி பற்று வுடையார் இதை பொறுத்தாள மாட்டான்! இதில் வெட்க  மொன்றுமில்லை யாவருக்கும்... இதுவும் ஒரு நாளாய் கடந்து போகும்! ஆனால் வெகு காலம் நம்மில் காயமாகும்! தமிழன் தமிழ், என்ற உணர் வெல்லாம் தேர்தல் நேர பேச்சாகி விட்டது! அது சரி- அவரவருக்கு ஆயிரம் வேலை கள்... ந(எ)மக்கு இதுவும் ஒன்றாய்! அண்டி பிழைப்பதை பழக...