Posts

Showing posts from July, 2024

ஒன்றாத - ஒற்றுமைகள்!

பல வேடிக்கை களும் வினோதங் களும் விவாதங் களும்.. ரசிக்கலாம் - காணலாம்  கேட்கலாம்..   எங்கே? மகப்பேறு இல்லத்தில்  வீடு பேறு துக்கத்தில்  மனம் சேரும் சுக அகத்தில்  இவை அனைத்திலும்  சைகைகள் - செய்கைகள்  பேச்சுக்கள்.. தாலாட்டு ஆய்  ஒப்பு ஆறுதலாய்  சங்கீத சடங்காய் பல விதம் - ஒவ் வொன்றும்  நகை மிகுதியாக போனாலும்  ஆச்சரியங்கள்  அறிமுகம் ஆவது தான்  அதிகம்! குன்று அது மேல் எரியும்  தனி தீபமாய் தெரியும்! சில விடயங்கள்.. தேவா.

இலையா - நீரா - நான்!

தாமரை இலை  தண்ணீர் போல.. ஒட்டாது ஒன்றாய்! இதில் - நான்  இலையா - நீரா?! மீனும் தவளையும் அறியா நீ! சொல் குளமே! மீளா துயரம் அறியும்  நீ!  சொல் என் குருவே! தேவா.

என்ன சொல்லி..

என்ன சொல்லி என்ன.. சொல்லிப் புரியாது  சொல்லிலும் புரியாது  அனைத்து அர்த்தமும்  அனர்த்த மாய்! போனால் போகட்டும் - அது தானே  அது தானே முடிவு - புது வடிவு!? சாஷ்டாங்கமாக விழுந்தால்  அது - சரணாகதி அல்ல.. சந்நிதியை விட்டு வெளியேற - என் நினைத்தால்..! மருந்துண்டோ இதற்கோர்  மாத்திரை உண்டோ!? சொல்லடி சகியே! சொல்லேண்டா நண்பா!

எனதருமை தோழா!

யாரிடம் செல்வேன்.. தோழா! இன்று - உனக்கான தினம்! ஆனா- நீ இல்லை  உன்னை காணாத தினம்  அதனால் - எனக்கானதும் அல்ல.. வேதனைகள் வேறு படும்  இது- வேறுபட்ட வேதனை  என்னுள்! நினைக்காது இருக்க - இன்னும்  மறக்க வில்லை.. மறந்து போக - நீ ஒன்றும்  என் மறதி அல்ல! பிரதி என்றெண்ணி  உனை நினைத்தேன்! பிய்த்து கொண்டு -  என்னை விட்டு பிரிந்தாய்! பிறந்த வருடம் காணும் முன்னே நீ மரித்தாய்! என்ன அவசரம் உனக்கு. நீ!  தான் என்னை விட்டு  மறைந்தாய்  ஆனா - நான் என்னவோ  உன்னை விட்டு மரித்த தாய்  தவிக்கிறேன்..! இன்று - உனக்கு ஒரு அகவை கூட்டச் சொல்லும் தினம்! உன் பிறவித் திருநாள்! எப்படி கூட்டுவது?! என்னை விட்டு பிரிந்தாய்  பிரிந்த தால்  ஒரு ஆண்டை கழிக்கலாம்  என் ஆயுளில் இருந்து.. அது தான் சரியாக இருக்கும்! மாறா நட்பு  மறவா நட்பு - நம் நட்பு  நீ! மட்டும் அதை மறந்தது  ஏன் நண்பா!? உனக்கு வாழ்த்துக்கள்.. கூட என் மனதிற் குள்ளேயே.. மிச்சம் - கிறுக்கல் களாய்  இத் தாளில்  உன் நாளில்! வாழ்த்துக்கள்..டா - நண்பா! என் மோகா! உன் தேவா...

விருப்பு இல்லா..

உன் தெரிவிப்பு இல்லாத  இருப்பு.. வேண்டா யென - சொல்லாத  அறிவிப்பு தானே! அதன் பின்னும்  அற்பமாய் ஓர் ஆசை  அது - நான்  அறியாது இருக்கவே ஆவா! தேவா.

எனக்கான ஒன்று!

எனக் கான அது ஒன்றாய் - உனக்கும்! பாரம் என்று எதையும் எதையும் என்றும் - பாரமாய்.. சுமக்காதீர் கள்! இறக்கி வையுங்கள்  அல்லது - கலட்டி விடுங்கள்.. கனவில் கரைத்து விடுங்கள் - இல்லை  உறைந்து விடும்! சுமந்து கொண்டே  சுகம் காணாதீர் சொல்லி காட்டி..! தேவா.

எதையும் கடவோம்!

நடந்தவை கடவோம்  நடப்பவை நினைவோம்! சுகமில்லா பயிர்  பதறாகும்! சுகமில்லா உயிர்  தவறாகும்.. வர்த்தக மா வாழ்க்கை  வர்த்தம் ஆக்கு மா!? கொடுத்து - வாங்குவதை குறைத்து  மனம் நிறைத்து  வாழ்வோம்! தாழ் வோம் - என் றென்னம் தவறே.. வீழ்வோம் -  என் பதில் இல்லை  நகர்வு! நகர்வோம் - தடை  தகர்வோம்! இறுதி  விடை பெறுவோம்..! தேவா.

ஜெர்மன் நினைவில் இன்று..

ஒரு திங்களும்  முப்பது தங்களும்  கழிந்தன வே..  ஊர் சுற்றி பார்ப்பது  குறைந்தன!  மறந்தன நினைத்தன.. மனம்! நான் பெத்தது பிறக்கும் போதும்  எங்களுக்கு பிறந்தது பெத்த போதும்.. கதறிய ஒலி அழுகையின் மொழி  வலி மிகுதியாக வே எனக்கு(ம்)! அன்று - அவள்  சிரம்மப் பட்டாள் இன்று - சிறைப்பட்டாள் சிறைப்பட்ட ஆள்! அன்பின் ஆழ் உள்நுழைந்தால்.. அதுவும் சிறை தானே! இதை சொன்னாலும்  புரியாது  சொல்லியும் புரியாது! பட்டு வரும் - அல்லது  பட்டதும் வரும்! துணைக்கு வந்தவனுக்கு தான்  துயர் யெல்லாம்.. அத் துணையின் நிலை!? மலரும் - பூவின் விரிவில்  விரிசலின் ஒலி  யார் அறிவார்?! யாம் அறியோம்.. வாய் உறிஞ்சி  பால் அருந்தி ஊன் வருத்தி - உயிர்  உயர்த்தி.. பயின்ற தோர்  பழகிய பாடம்  வழி வழியாக  பெரும் வலியாக.. வலிமையாக! இங்கு - என் பெயரோடு ம் பெயரன் ஒடும்  நேரங்கள்.. சிலதை மறக்க செய்கின்றன.. பலதை நினைக்க செய்கின்றன! இங்கு - முதல் பெயரே சொல்லி அழைப்பது இல்லை! இரண்டாம் பெயராக  ஒட்டி வருவதை உடன் வருவதை சொல்லி தான் - அழைக்கிறார்கள்!...

புது நகரத்தில்..நகர்ந்த நாள்கள்!

ஜெர்மன் நகரத்தில்..! நாள்கள் நகர்ந்தான் - செய்கிறது.. நன்றாகவே! மூன்று திங்கள் (மாதம்) விசா இருப்பு காலம்! வந்து- மூன்றாவது திங்கள் (கிழமை) கடந்து விட்டது! வெற்றிகரமாக இருபத்து  நாள்கள் கடந்தோடி.. புது வாழ்வு முறை  புது நடைமுறைகள்  புது தட்ப வெப்ப நிலை  மனித மனம் போல்  அடிக்கடி மாறுகின்றன! வீடுகள் எல்லாம் அழகாக  இருப்பதாய் சொன்னேன்.. எதுவும் வாஸ்து படி இல்லை  ஆனா - வசதியாக  வசதிக்கேற்ப இருக்கிறது! போக்குவரத்தில் - இங்கு  எல்லாமே - கீப் ரைட் தான்! எல்லாம் வலது புறம் தான்  வலது பழக்கம் தான்.. நடப்பது சைக்கிள் போவது  எல்லாம் வலது புறமே! இதை பார்த்து சொல்வது  சாலை யோர மரமே! வாகனத்தின் ஒலிப்பான்  அதிகம் ஒலித்து கேட்கவில்லை.. நடை யெல்லாம்  துணை யோடு - அல்லது  துணைக்கு நாயோடு! முதன் முதலில் - தனியாக  சிறப் பங்காடியில் - நான்  வாங்கிய அது பாலும் (தக்காளி)பழமும்! அப்புறம் - அது உங்களுக்கே தெரியுந் தானே! ஆடைகள் மேல் அக்கறை இல்லை  ஏய்! - இதை முதலிலே  சொல்லி விட்டாய்.. அது வேறு - நீட்டாக  இருப்பது பற...