Posts

Showing posts from April, 2024

இரண்டாவது காதல்..!

விடாது கருப்பாய்.. இரண்டாவது காதல்!  அதென்ன- இரண்டாவது  அப்ப முதலாவது..!? அது வந்து.. சரி வர தெரிய வில்லை  இல்லை  - ஞாபக மில்லை எது  முதலென்று.. அதன் பின் எல்லாமே இரண்டாவது தானே! விடாது கருப்பாய்..

சின்ன குட்டி வுடன்.. ஒரு லூட்டி!

காலையில் சிறு உரை நடை.. ஒரு கடையில்!  சிறு குட்டி  படு சுட்டி யுடன்! ஒட்ட வெட்டிய கிராப்பு  வெளிர் பச்சையில் பிராக்  பளிச் சென்னு  பல்- காட்டிச் சிரிப்பு!  தலை சாய்த்து  பதில் சொல்லா பார்வை.. உன் பெயர் என்ன பாப்பா? பாட்டி- இவர்  என் பெயர் கேட்கிறார்.. சொல்லு தங்கம்!  ம் ஹூம்..  தலை ஆட்டி மறுக்க.. அழகு! - சரி  என்னா ஊர் நீங்க  சென்னை!  - குட்  சென்னை யில் எங்கே இருக்கீங்க!?  வீட்டில தான்.. அய்யோ!   என்ன படிக்கிறீங்க.. A B C D அட ங்க .. எந்த ஸ்கூலில்!  கையில் விசில் வச்சுட்டு  ஒரு  PT வாத்தியார்  இருப்பாரே.. அந்த ஸ்கூல்! சூப்பர்!  அசத்தல்  குட்டிம்மா!  இன்று- ஒரு வேளை மாத்திரை  மிச்சம்! 

நடவு செய்வோம்..!

ஓட்டுறவன் திறமை விழுகிற வரைக்கும்.. ஆணவத்தின் தலைமை  தோல்வி காணும் வரை!  ஓடுறவன் சாதிப்பான்  சாதித்த அவன் - நில்லாது  ஓடுவான்!  வழி நின்றவர்  நின்று தங்கியவர்  சந்திப்பர்.. பிரச்சினை கள்!  நமக்கு எதிரே அல்ல  எதிரியு மல்ல.. அது- நமக்கு எதிருக்கு  எதிராக- நமக்குள்ளே!  சொக்க தங்கம்  உருபடி ஆகாது!  எதிலும்  -  சொக்கி தங்கினால்  உருப்படி யாகா!  வெற்றி  எளிது தோல்வி காணாது வரை ! தோல்வி பயம்  வெற்றி காணாது வரை!  எதுவும் நம் கையில் இல்லை  அது பிறரிடமும் இல்லை!  இலக்கு நோக்கினால்  பயணம் எளிது.. தேக்கினால் - பயணம் வலிது!  சுக வாசல் - எல்லோருக்கும்  திறந் திருக்காது!  சிலரை தட்டச் சொல்லும்  பலரை முட்டச் சொல்லும்.. பயனும் - நலனும்  விலகாது பயணப்பதிலே! எளிதில் பழக்கம்  எதிலும் வழுக்கும்.. வழுவாத தடம்  நழுவாத திடம் உடன் இருப்பின்  உயர்வு கொள்ளும்- உன்னை  உயர்த்தி சொல்லும்!  வெற்றி யின் வாசல் ஒன்றே அதன் வழி மட்டும்  வெவ் வேராய்.. தீர்...

செய்யாதே.. தானம்!

நீ!  தானம் செய்யாதே.. அது- நிதானம்!  அதை இழந்தால் நித்தமிழக்கும்  பெரு மகிழ்வு.. வலுத்தால் - நித்தம் மகிழ்வு  அது நிகழ்வு!  தவறினால்.. மாறிடும் சூழ்!  தவிர்த்தால் மாறுபடும்  மேல்.. அது- நழுவினால் தடுமாறும்.. உன்னை தழுவினால்  தடம் மாறும்!  எதையும் இழக்காது இருக்க.. எதுவும் நிலைக்க- நீ! செய்யாதே தானம்  அது- நிதானம்! 

வரட்டும் முடிவு.. தரட்டும் விடிவு!

வணக்கம் அன்பரே!  வணக்கம். ஓட்டு போட்டீங்களா.. ஆமாம்!  எதுக்கு போட்டீங்க..? இது என்ன கேள்வி  எனக்கு ஓட்டு இருக்கு  அதுதான்  - போட்டேன்!  அய்யோ- அது இல்லை  எந்த கட்சிக்கு..ன்னு  கேட்டேன்!? இது- இது நல்லா இல்ல.. நல்லது மில்லை!  சொன்னால் சுயம் கெடும்!  இருந்தா- ஆளும்  நீங்க! - கேட்டதற்காக  சொல்றேன்.. மாற்றம் வேண்டி (எனக்கு) மாத்திப் போட்டேன்.. ஆனா! - நீங்க நினைக்கிற  கட்சிக்கு  அல்ல.. இந்த தடவை  எது வேண்டு மென  முடிவெடுக்க வில்லை.. எது வேண்டா மென முடிவெடுத் தேன்!  அதுதான்- போன முறை போட்ட  கட்சிக்கு  - இந்த முறை  போடவில்லை!  இந்த முறை போடாத கட்சிக்கு- போன முறையும்  போடவில்லை!  போன முறையும்  இந்த முறை யும்  போடாத கட்சியும்  ஒன்று தான்.. ஆனா- போன முறை - ஓட்டு  வே ரொன்றுக்கு.. இந்த முறை  வேர் ஒன்றுக்கு!  பழகிய சின்னத்திற்கு  கை போனது.. ஆனா மூளை - கட்டளை மாற்றிய அது!  என்ன செய்றது சார் இந்த அரசியல் கட்சிகள்  நம்மை அப்படி  ஆக்கி விட்ட...

விவாதம் போதும் - விடை தேடு..!

விமர்சனங்களும்  விவாதங்களும்  - வீணாகி போய் விடக் கூடாது!  அரசியல் வேண்டுந்தான்.. அதிகம் நோண்டக் கூடாது!  அப்புறம்  - அது குரங்கு கையில் கருவாடாய் போகும்!  அவசரப்பட்டு முழுதும்  உரித்தாலும்.. பொறுமையா மெதுவா காய வைத்து உரித்தாலும்  பின்பு- வெறுங் கைதான்!  தேர்தல் நேரத்து - அவலாய்  மென்று விட்டு போவோம்.. முலைச் சூடு - நிரந்தரமும்  இல்லை!  அதை நிராகரிக்கவு மில்லை.. பொழுதும் முகம் புதைக்க  முடியாது!  போர்வைக்குள் பேசி  பயன் என்ன?! வெறும் மரத்தை சுற்றி வந்தால் பிள்ளை வருமா.. ஆயுதம் ஏந்த வழியில்லை  அதற்கு- தயாரில்லை!  ஆனா- போர் விமர்சனம்  போதும் அளவிற்கு..! நலன் வேண்டிக் கொள்வோம்  பலன் குன்றாது!  ஜெயிக்கும் கட்சி  பெரும் பான்மை பெறட்டும்!  தொங்கு  மக்கள் அவை அவை- மக்களுக்கு  தீங்கு  ஆகும் ! பின்- ஆட்சி வேண்டி  மா(கா)ட்சி மாறும் ! தொங்கினால்  துவளும் கட்சியு முண்டு  துள்ளும் கட்சியு முண்டு.. காணகூடாதது  காண வேண்டி வரும்!  நடக்க கூடாத அது  ந...

கடமையை செய்வோம்..!

அன்பர் அவர்களுக்கு!  இன்று- ஆறு மணி ஓட.. ஓய்கிறது பிரச்சாரம்!  அதன் பின் பரப்புரை  அபச் சாரம்!! சிறப்பு  - உரைக்காது இருப்பது!  மணி- ஆறுக்கு அப்புறம்  ஆறாய்  ஓடும்  மனி.. மனி-தன்  வேலையை  செய்யும்!  யாருக்கு ஓட்டு போட  தேவா!  எதுக்கு போட.. யாருக்கு என்பதில் கருத்து  வேறுபாடுகள் உண்டு!  அது - சுதந்திரம்  எதுக்கு என்பது- அது தவறு  கடமையை செய்.. பலனை- அனுபவி!  அதுக்கு  ஓட்டு போடவா  இதுக்கு போட வா! அது சரி வராது  இது பயன் அளிக்காது!  அப்ப - அ(டுத்த) அதுக்கு..? ம் ஹூம் ம்.. அது வீண்!  இவர்கள் இதுவரை  பிடுங்கிய ஆனிகள் எல்லாம் வேண்டாத அவை! ஏணியாக சிலருக்கு.. சொல்வதுண்டு!  பின் மாற்றம்.. எப்படி?! சரியில்லாத இரண்டில்  சாய்ஸ்  - எங்கே? எப்படி!  தேர்ந் தெடுப்பது.. மாற்றம் மனதில் இருந்தால் - போதுமா!? சமுதாயத்தில் வேண்டா மா வளரும்  சந்ததியினருக்கு  சொல் வோம்!  வெறும் சன கூட்டம்  சனநாயகம் ஆகாது!  பிழைக்க வழிச் சொல்லட்டும்  உழைப்பு அத...

அதுவும் இதுவும்- ஒன்னா..!

நண்பா!  அன்பும் அரசியலும்  ஒன்னா..! ஆதங்கப் படுவது  அவசரப் படுவது  அமைதியாக கடப்பது.. அடிமை யாய் இருப்பது! ஆரம்ப அரவனைப்பு  பின்- அந்தரங்க ஆராய்ச்சி.. சமர்ப்பணம் அப்புறம்  விமர்சனம்!  ஆனந்தமாய் பார்த்த-அதை அசிங்கமாக பார்ப்ப அது! தேன் ஒழுக பேசுவதும்  பின்- தேவை இல்லா  கூந்தலாய்.. கொடுக்கப் பட்ட வாக்குறுதி  மறக்கப்படும் வசதியா  இறுதியில்!  வீதியில் விசாரிப்பு  விழாவில் சந்திப்பு.. உயர்ந்த பிறகு உதாசீனம்!  உயரும் வரை உடுத்திக்  கொள்ளும் உறவு முறை - உடைகளாய்.. மனசாட்சி மட்கும் தன்மை!  வெளிப்புற வெண்மை  சாதித்த தும் - இதில்  சாதிப்ப தும்  என்ன?! மனச் சிறையில் - அல்லது மரணச் சிறையில்.. சொத்துக்களே சொந்தங்களாய்.. நிலை மாறாது  - ஆனா  அதன் விலை மாறும் ! பாதிக்கப்பட்டவன் எப்போதும்  பாவப்பட்டவன்! பரிதாப சூழல்  - அதிலும்  ஆதாயம் தேடும்!  வென்றால் உச்சி முகரும்  விட்டுச் சென்றால்  எச்சில் உமிழும்! பாக்கியம் உண்டு  பத்திரமாய் இருந்தால்.. அளவிற்கு மீறினால்  உ...

மிகுதியா எங்கு..?

காதல்!  கொள்வோரிடம் மிகுதியா கொண்வரிடம்.. மிகுதியா!? காதல்- கொண்டேன்  முழுமை- அது கண்டேன் இல்லை..

பார்-பதில் இல்லை..!

அழகு!  பார்க்கும் - ஆப்ஜெக்ட்டில்  இல்லை.. ஆன் சைட்டில்- உள்ளது!  அரசியல்!  பார்க்கும்- ஆன் சைட்டில்  இல்லை.. ஆளுமை- ஆப்ஜெக்ட்டில்  உள்ளது!  உள்ளது  உள்ள படியே இருந்தால்.. நன்றாக இருக்கும்!  நன்றாக வா!  இருக்கும்..

அசிங்கத்தின் வேர்..!

இங்கு- மணல்  கயிறாகும்.. அது மலையும் இழுக்கும்!  இது இரண்ட -ஆல் முடியும்.. ஒன்று காதற் கொண்ட மனம்!  மற்று ஒன்று  அரசியல் செய்யும் பணம்!  இரண்டும் வாக்கு கொடுக்கும்!  பின் வழங்க மற(று)க்கும்.. மன கலப்பும்  தேர்தல் களமும்  வேறு ஆனது- அசிங்கத்திற்கு வேர் ஆனது..!