ஜெர்மன் - கடை ஞாயிறு!
ஒரு ஞாயிறும் - இன்னும் ஒரு திங்களும்.. ஒரு டசன் தினங்களும் பாக்கி உள்ளன! உனை ப்ரிய .. மனமில்லாது என்று சொல்வதற்கு இல்லை! இனி மறக்காது என்று சொல்ல.. இனிய ஜெர்மனியின் - ஜென்டில் கண்டதும் அலோ! சொன்ன வயோதிக பெருமக்களும்! பாராது போன புது ஜென்றிக் மறுமக்களும் கால் சராய் கன்னிகளும்.. என்றும் நெஞ்சில்! மறக்காது - மறவாது.. பலதரப்பட்ட நாய்களும் வகை வகையான.. பக்குவமா பிடித்த அந்த பாங்கு - கரங்களும் கடக்க - நடக்க கண் கொண்டு - கூட பார்த்தே ரசித் திருந்தேன்! பார்வையில் - வெளிப் பாதையில்! சொல்வதற்கு நிறைய உண்டு அதில் - சொன்னது கொஞ்சமுண்டு! நிறைய கற்றுத் தந்தது.. கற்க சொன்னது! விரை நடையும் - சிறு ஒட்டமும்.. நீங்கா இடம் பெறச் செய்தன! விட்டு சென்ற என் வீட்டின் நினைவுகளை - எழு பத்து நாள்களாக - எனை மறக்கச் செய்தன - இங்கு என்னையும் நகரச் செய்தன! அந்த பறியாத செம்பருத்தி ஒடியாத முருங்கை சிரிக்கும் கொய்யா இலை பசும் வேப்பந்தலை எப்போதும் உன்னாத சப்போட்டா பழம்! அருகில் அருகம் புல் அதனருகே சிறியா...