Posts

Showing posts from March, 2024

காமத்தின் கதவுகள்..!

காமத்தின் கதவுகள்.. கண்கள்!  மூடித் திறக்கும்.. திறக்க மூடும்!  பார்த்து பசியாறும்.. சில நேரம்- பார்த்தே.. பசிவூறும்!  வாயிற் தாண்டி  வேடிக்கையாய் போனாலும்  வாடிக்கை மாறாது வந்து விடும்!  அது- மனதில்(ன்) இருக்கை போட்டு அமரவில்லை.. நார் கட்டில் போட்டு உறங்குகிறது! பேசிப் பழகும்.. பேசாதும் பழகும்!  எதிரில் பேசுவதை விட.. எண்ணத்தில் பேசுவது  அதிகம்!  காவல் தாண்டும்  காதல்- அதையும் தாண்டும்  இது- காமம்!  கால் விலக்காது - அதன்  நெற்றியில் புள்ளி வைத்து.. தலையில் அடித்து கொண்ட நாளுமுண்டு! முழுதும்- வெளி சொல்லாது  என் - புத்தி தாண்டாது! இம் மொழிக்கு  எழுத்தில்லை.. மெய் காண - உயிருண்டு!  ஆறாய் ஓடும்.. அருவியா கொட்டும்!  அள்ளி அருந் தீயும்  முழ்கி குளித்து எம்- அதன்  ஆசை தீரவில்லை.. ஆர் வம் குறைய வில்லை!  கலையா  நெஞ் யோரத்தில்  அலை அலையாய்.. கிட்டங்கியா கிடங்கா தேங்கிய அது  குறையவில்லை.. ஆவல் தூண்டும்  நூலகமாய்.. அத்தனையும் படிக்க  முடியவில்லை  எல்லோரும்  வேறு வேற...

காதல் - ஒரு..

காதல்!  ஓர் வார்த்தை வாழ்க்கை அல்ல.. காதல்!  ஓர்  ஆதாயச் சொல் அதை - அர்த்தமாக்கி நில்! காதல்!  ஒரு பகுதி.. அது- மற்றவைகளின் மிகுதி!  காதல்!  சாகா வரம்  அது- சாதாரண மாய் வரும்!  காதல்  எல்லோருக்கும் வரும்.. எவருக்கும் வர மல்ல!  காதல்  வாழ் வியல்  முறை அல்ல! சாகும் வரை..

தேர்தல் காட்சி - நாமே சாட்சி!

இந்த- பொது தேர்தலை பொதுப் பிரச்சினையாக  அனுகுங்கள்.! பொதுவாய்- பிரச்சினையா பார்க்காதீர்கள்.. நாட்டின் வளர்ச்சிக்கு  உதவும் நப(ரை)ராய்  தேர்ந் தெடுங்கள்.. நபருக்கு உதவும்  வளர்ச்சியாக தேர்வு  செய்யா தீர்கள்!  பலன் என்ன  பயன் என்ன  - சொல்லும்  நய மென்ன.. யோசித்து  - பயமில்லா  தேர் வாகட்டும்  - புது தேர்த லாகட்டும்!  இங்கு- முழு நல்லவரும்  அதிக கெட்டவரும்  எவரு மில்லை.. இருப்பதில்  தேர்வு செய்வோம்!  நிறை இல்லாது போனாலும்  குறையில்லா ஒருவரை  குறை இல்லாதவர்  இல்லை என்றாலும்  குறைந்த- குறை  உள்ளவர் எவரோ?! - அவரே.. வேறு வழி யில்லை! அரசின் செயல்களை ஆட்சி ஆள்பவர்களை  விமர்சனம் செய்யுங்கள் தவறில்லை.. அவர்களது அந்தரங்கம்  நமக் கெதற்கு ! நாலு பேர் இருக்கும்  ஒரு வீட்டில்  நால்வரும் வேறு வேறு மாதிரி! நாற்பது பேர் இருக்கும்  அரசின்  சபையில்  கொஞ்சம் நாரத் தானே  செய்யும்!  தெரிந்த அதை சொல்லுங்க  தேவை இல்லா அதை  சொல்லாதீர்கள்!  ஒரு கட்...

சொல்லிக் காட்டா தீர்..!

அன்பை சொல்லில் காட்டுங்கள்.. சொல்லிக் காட்டாதீர்கள்! பாசம்  பார்த்து அளிக்காதீர்.. பகிர்ந் தளியுங்கள்!  காதல்  சொல்லால் வேண்டாம்.. செயலில் வேண்டும்!  அறிவு  ஆர்வங் கொள்.. ஆணவம் கொள்ளாதே! ஆசை அளவோடு.. போதுமெனும் உளமோடு!  வாழ்க்கை  வாசிக்க பழகு யோசித்து விலகு.. நேசித்தல் அழகு! 

கவி தைக்கும்..

புது கவி தைக்க.. இந்த- கழு தைக்கும்  தெரியும்!  சில பல - அது தொட்டு  நகர் வல தேராய்.. நகர்ந்து வரும்  தேவா!  ஒரு கால்- முட்ட நின்று  நிலை மாறாது நகரா - போகாது இருக்க எனை உரு மாற்றும்  உற்சாகம்  எனக்குள்.. சொல் லெடுத்து  எண்ண மடித்து  வெளி வரும்.. வெண் பேப்பர் - அதை கருப்பாக அல்லது  நீலமாக வோ நிறப்பி  வெளி காட்டும் உள் முகம்  அதில் எப்பவாது  என் முகம்! 

உணர்ந்து..போவோம்!..!

ஆண் பெண்  சேர்க்கை ஆலாதி ஆனது! அசாதாரணம் கூடா தென அசௌகரிய கூட்டு! இங்கு எல்லா முண்டு  ஆனா- ஏதுமில்லை!  எல்லாந் தெரியும்  ஆனா - ஒன்றும் தெரியாது.. விரிவான விவாதங்கள்  வித்தியாசமாக இருக்கும்!  வித்தியாசமானவை  தான்  வினோத மாக இருக்கும்.. எல்லா  இருக்கு ம்  - இதில்  இருக்கும்!  ஆனா  - ஏதும் உருப்படியாக இராது!  சொல்லில்  - செயலில்  சொலொ ன்றாய்  செயலொ ன்றாய் இன்னும் பிற.. காலை பல் துலக்குவது போல்  எல்லாம்  பழக்கமாகி விடும்  இல்ல- பழக்கப்பட்டு விடும்! அன்பு பாசம்  காதல் காமம்.. கலவை யாய்  விகிதாச்சாரம் மட்டும்  வேறு படும்!  சில நேர வேறுபாடுகள்  வேறு படுத்தும்!  இரு பாலர் இல்லாத  தனி உலகம் எப்படி இருக்கும்!  ஆகா! - அது தனி ரகம்  தனி சுகம்.. ஆனா  தொடர முடியாது  தொடர்திடவும் முடியாது!  ஏன்?! அது அப்படித்தான்  தனி ஆவர்த்தனம்  சபை நிறைக்காது.. ஒரு பாலினம்  உலகை வளர்க்காது!  பெண் இல்லா உலகம்  எப்படி இருக்கும்!? சபரி ம...

சிட்டு குருவி தினம்!

சிட்டு எனும் உயிரி அவ்வினம் குருவி! உருவத்தில் சிறியது  இப்ப- உயிரினத்தில் குறையுது!  மிக உயரே பறக்காது  மிக அருகே சிறகை  விரிக்காது!  வீடு சுற்றித் திரியும்  சிட்டாய்.. பழுப்பு சாம்பல் நிறத்தில்  பட்டாய்!  பார்த்தோமே  சன்னல் ஓரத்தில்.. உள் விட்டத்தில்  வெளி முற்றத்தில்!  கீச்சு.. மொழி  பேசும்  அதன் சிறு கூடும்  எழில்(அழகு) பேசும்!  வளர்ப்பதற்கு வசதியில்லை  வந்து அமருமே  அசதியில்லை!  பார்க்கவே பரவசமாய்  பறக்குமே நவசரமாய்!  அழகு சிறகுகள்.. சிரிக்கும் அலகு! பார்க்கும் முன் பறக்குமே  பழகும் முன் விலகுமே!  சிறிது நீரைக் கண்டாலும்  சிலிர்த்து குளிக்கும்.. சிரித்து குரலெடுக்குமே! இதை தான்  பாரதி கண்டானோ.. தனது பாட்டாக்கி  கொண்டானோ!  அறிய வகை பறவையாய்  அநியாயமாய் போச்சே..! அதன் அழிவை குறைத்து  அழகை ரசிப்போம்!  அதற்கு- வாழ வழி யில்லை  சுற்று சூழல் சரியில்லை!  பாதுகாக்காது  போன பல விடயங்ககளில்  இதுவும் ஒன்று!  சிட்டு குருவி ஒரு...

தீரா(து).. இது!

ஆயிரம் ஆசைகள்  மனதில் - ஆயிரம் ஓசைகள்!  அலை அலையாய்  மலை மலையாய்.. குறை வதில்லை!  ஆயிரம் முறை  போகித்தும்.. அலுப்ப தில்லை!  அடுத்த முறைக்கு  ஆவா.. ஆ(சை)! வா யென  அழைக்கிறது!  பாலின வாக்கியம்  பால்- இனம்  அவ்வளவு பாக்கிய மா! உணர்வுகளின்  உணர்ச்சி களின்  பாக்கி இயமா.. இயக்க மா! அது- இயல் பான தா இல்லை  இயற்கை யான தா! மென்றவர்கள் அனேகம்  வென்றவர்கள் இல்லை!  பின் - ஏன்  யாரும் கொன்று விட்டு  போ வதில்லை.. அதை!

திரை அல்லாது தரை..

திரை உலகத்தார்  இல்லாது - அல்லாது  தரை உலகத்தோர்.. யாரு மில்லை யா! தமிழகம் காக்க..

நிகர் - சமம் அல்ல..!

பெண் ஆணுக்கு எதிர் பதம் அன்று!  எதிரான- பதம்.. ஆணுக்கு பெண்  அடிமை அல்ல!  மூடி மறைக்கும் மை.. ஆண் பெண்  - நிகர்!  சமம் அல்ல.. ஒன்று  ஓங்கும்  மற்றொன்று தாங்கும்!  இரண்டும் ஓங்கும் போது  விரிசல்.. இரண்டும்  தாங்கும் போது உரசல்..! அது தானே.. தேவா. 

எழுதா - துணை!

எண்ண மே எழுத்தாகின்றன.. கற்பனை ஆசை  காதல் ஆகின்றன! எண்ணம் எழுத்தாக்கி காதல் எழுத்-ஆகி.. ஏன்?! எவரும்- தன் துணையைப் பற்றி  எழுதுவ தில்லை.. அதிகம்! 

அசலாக - இருந்தால்..!

ஒரே மாதிரி  இருந்தால்.. வாழக்கை ஒரு மாதிரி ஆகி விடும்!  ஒரு மாதரியாக.. வே இருந்து விட்டால்.. வாழ் வியல்  ஒரே மாதிரி ஆகி விடும்!  ஏன்!? - மாதரியாக  இருக்க வேண்டும்!  அசலாக இருந்தால்.. அவ்வளவு ஆபத் தா.. இல்லை- அவ்வளவும்  ஆபத்து..ஆ!

நடந்த - அது!

நேற்று   ஒன்று நடந்த - அது!  என்ன? சண்டை..! அப்புறம்.. ஏதுமே நடக்க வில்லை  இப்ப வரை..! தேவா.

கனவில்- ஒரு தூக்கம்!

நண்பா!  நேற்று- கனாவில் ஓர்  தூக்கம்!  ம்ம்.. அருமை!  நல்லா இருக்கு.. சொல்லு! அது தான்  சொன்னே-னே! நேற்று- நல்ல தூக்கம்  தூக்கத்தில் கனவு! கனவிலும் தூங்கறது போல்.. போட்..டா - .... கர்மம் புடுச்ச வனே! 

ஆல்- யோசனை.. கூரும்!

அநேக- நல்லோர் களும்.. பெருத்த மனம்  உள்ளோர் களும்!  பொறுத்துக் கேளீர்.. செவி மடித்து  சேமம் வடித்து .. வினாவினேன்  தங்களை- தாரீர்!  பதிலறிந்து.. நானும்  காங்(கி)சிரசு  குடும்பம் தான்!  அப்படி தானே  எல்லோரும் சொல்வர் அப்ப.. ஆரம்பத்தில்  அது மட்டுந் தானே ! அய்ம்பது ஆண்டு காலமாக  ஆட்சியில் பார்க்க வில்லை  தமிழ் அகத்தில்!  வெவ்வரம் தெரியும் போது  அல்லது  தெரிந்த போது.. மூன்றெழுத்து  மந்திரச் சொல்லின் செவந்த கரம்  ஆட்சியில்!  கல்லூரியில் அடியெடுத்து  அரசியல் நோக்கும் போது.. தீவிர சிவப்பு சட்டை! கையில் அறுவா சுத்தி  வைத் தில்லாத குறை.. கருப்பு சட்டைகளின்  கருத்து தாக்கம் இழுக்கு.. முழுதும் போகாது  கருப்பு சிவப்பா ஆகி போனேன்!  இரு இலையால்  தரு தலை ஆனதோ  தமிழகம்!  என்றெண்ணி.. நன்றென  - சூரியன்  உதிக்கட்டும் இனி - என பணி செய்து பயணிக்க!  புரட்சி தலை  இருக்கும் வரை  நடவாது போக அவரது மறைவிற்கு பின்  இரு இலை - நிலை தடுமாற  கோட்டையில் சூ...

காதல்- ன்னா...!

சட்டென கேட்டேன்  பட்டென.. பதில் சொல்! தேவா!  காதல்-ன்னா  என்ன?! மனதில் பட்டதை  கவியில் தொட்டதை.. காலங் காலமாக.. அலசப்பட்டும், பேசப்பட்டும் செய்யப்பட்டு வரும்  ஒரு  வினோத - விந்தை ஆன செயற் கூற்றை.. எப்படி? எங்ஙனம் சட்டென சொல்வது!  பவ்யமா - என் பதிலை இப் பதிவில்.. நண்பா!  பலரும் தொட்ட விடயம்  முடியாது விட்ட விடயம்!  நான் மட்டும்  தொட்டு - விட முடியுமா!? முயற்சி க்கிறேன்.. சட்டியில் வைத்து - மாவை அவித் தெடுத்தால்  இட்லி!  கல்லில் ஊற்றி  வார்த் தெடுத்தால்  தோசை!  அதை யே- குழிச் சட்டியில்  ஊற்றி  திருப் பெடுத்தால்  பணியாரம்!  அது போலத் தான்  காதல்..! பெயர் ஒன்று - அதன்  பொருளும் வகைகளும்  வெவ் வேர்  ஆனவை!  செப்புகிறேன்.. செவி மடி! காலைக் காதல்   இரவுக் காதல்  உறவுக் காதல்  உண்மை காதல்  உணர்வு காதல்  புணரும் காதல்  புரியாக் காதல்  புதிராக் காதல்  கட்டாய காதல்  காத்திருப்பு காதல்  காரியக் காதல்  காரண காதல் ...

ஆழ்வார் பேட்டை அரிமா!

ஆழ்வார் பேட்டை ஆண்டவா ! வேட்டியை போட்டு தாண்டவா! ஊரில்  - நூறில் நீயும்.. ஒன்று தான்! ஆரம்ப அரசியல்  ஆணவப் பேச்சு  டி வி உடைப்பு  அசிங்கமா போனதா.. கமல் சார்!  மானசீகமாக அவரது  மொழி யில்.. தனித் தன்மை இழந்தாலும்  தன் நிலை இழக்காது  தற்காப்பு கூட்டணி!  இல்லை- தற்சமயக் கூட்டணி.. இடி விழுந்ததா தடி விழுந்ததா  அடி விழாத  மடி விளையாட்டு!  ஆழ்வார் பேட்டை அரிமா!  அறிவாலயம் சொன்னது  சாரிம்மா! கட்சி யை முன்னெடுத்துச் செல்ல.. சற்றே  - என்னை  பின் நிறுத்திக் கொண்டேன்!  இங்கு எதுவும் மாறவில்லை  மாறாது.. ஆகவே தான்  இம்முடிவு! இது நிலை அல்ல.. நிரந்தரமும் அல்ல!  நிறம் தரும்  - எனது  தற்போதைய நிலை! இலை இல்லாச் சோறு.. சூரியன் போட்டது பாரு! தா மலர் வெறுக்க.. கை கொடுத்தேன்  அவ்வளவே!  ஐந்தாண்டு கட்டிக் காத்த கட்சி  - சின்னம்  கை மாறாதிருக்க  இத் தேர்தலில் போட்டியிட வில்லை!  நல்ல பெருந்தலைவர்களை கூட தோற் கடித்தீர்களே ! என்னை யும் சேர்த்து  அதனால்  - போட்டியில்லை...

வெட்கங் கெட்ட.. நான்!

நான்! நானாக நான் இருந்த வரை.. இருக்கும் வரை இந்த  - நானாகிய  எனக்கு  எந்த  பிரச்சினை யும்  பிரிவினை யும்  இல்லை!  நான் இப்படித்தா னென  என்னை வேறொரு  நானாக பார்க்கும் போது.. நான் நானாக இல்லை  நான்  நல்லவனாகவும் தெரியவில்லை  அவர்களுக்கு!  அது  சரி - நான்  எப்படி  உங்களுக்கு பிடித்த  நானாக இருப்ப தென கேட்டால்.. எந்த நானும்  இந்த நானுக்கு  பதில்  - சொல்ல வே இல்லை!  சரி - எப்பவும்  நான்  நானாக வே இருந்து விட்டு போகலாம்.. பிறர் எதிர் பார்க்கும்  நானாக  - நாம்(ன்) இருப்பது கடினம்!  நான்  - நானாக  ஏன்  இன்னும்  நானாக- நான் இருக்கேன்.. நொந்த நான்!  வருத்தம் மிகுந்த  சொந்த நான்!  பிறகு  -  எந்த நானாக  - நான்  இருக்க ஆசைப் பட்டேனோ  அந்த  நானாக  - நான்  ஆக முடியவில்லை  என்பதை  - இந்த  உண்மையான  நான்!  மாறாது இருக்க.. மாற்றமில்லா  நான்  மாறியதாக  மாறிவிட்டதாக...

சொல்லாதே..

முந்தானை முகம்  மறைக்க.. மூச்சே- பேச் ஆக! சிந்தை மறந்து  விந்தை காண... ஏய்!  நிறுத்து. என்ன சொல்ல வர்ற.. இல்லை  - நேற்று  மனசு ஒன்றைக் கேட்டது! என்ன?! முதற் காதல் கூட மறந்து போகும்.. முழுமையான காதல்  மறக்குமா?! - யென.. வேண்டாம்   தேவா!  வில்லங்கமான கேள்வி  விபரீதம்.. வெளியில் கேட்காதே !

உடல் வளர்த்தேன்..!

உடல் வளர்த்தேன்  உயிர் வளர்த்தேன்.. உண்மையில்- வளர்ந்தேனா!? உன்னதம் மறந்தேனா- மறைத்தேனா..?! அரை நூற்றாண்டு அறியாதே  அவதியுலும்  அவசரத்திலும்.. வேடிக்கை யாய்  விநோதமாய்  ஒரு வளர்ச்சி..! அதன் பின்  உண்மை யறிய உன்னத மறிய  உலக மறிய.. அது - முடியாது  அப் பெரிய அறிவு  நமகில்லை! நானும்  - அவனும்  வேறல்ல.. மனம் சொன்னது!  வேடிக்கை யே வாடிக்கையாய்.. விபரீதங்களும்  வினோதங்களும்.. சந்திப்பில்  - வீங்கித் தெரிய சிந்திப்பில் .. நிதானம்!  நகை இழப்பு  பேச்சு  குறைப்பு.. ஆமா! பேசிக்கலி நான்  அப்படி இல்லை யே என்பதை தவிர.. வேறு ஒன்றும்  சொல்வதற்கு இல்லை!  உறவு சொன்னது  நட்பு சொன்னது  அங்கொன்றும்  இங்கொன்றுமாக  நிகழ்வு செய்தது! புதுப்பிக்காத உரிமப்  படிவமாய்.. உரிமை இல்லாதது  எதுவும்  - என்னது இல்லை  அவை எனக்குச்  சொந்த மும் இல்லை!  மனதுக்குள்  -  குயில்  காகம் கிளிகள் கத்த.. சுத்தமாய் அறுந்து  போனது  உலகம்!  அவசரக் கோளாறா  ...