வைகரை வருத்தம்!
வைகரை வருத்தம்...! வைகரையோரம் வயதான நாணல் ஒன்று வருத்தமாய் நின்றது! கண் யழுது கலை யிழந்து... தலை குனிந்து! தலை குனியும் நாணலே கண்ணில் ஏன் வீக்கம் கரையில் என்ன தாக்கம் தாழ்ந்து வினாவினேன் தாமதமாய் பதில் வ(த)ந்தது! நண்பா- தாகத்தில் நா இருக்கேன் தர்க்கத்தில் நீ இருக்க... மோகத்தில் உம் பேச்சு சோகத்தில் எம்மூச்சு பாவம் செஞ்சது நீ சாபம் பெற்றது நா! நன்றி மறந்தவன் நீ அன்றி செய்யாதவன் நான்! நாணல்தான் நா நானுவேன் சில நேரம் இப்ப-கூனிக் குன்னுகிறேன் பல காலம்... கரையோரம் என் இனம் காணாமல் பன்னியது உன் இனம்! வேகுது என் மனம் வெப்பத்தில் உன் இனம்! என் வேதனைகள் வேறு மாதரி... இங்கிருந்த அழகும் அரணும் எங்கே?! வரும் வழியில் பாலம் பார்த்திருப்பாய்- அதன் மேல் நின்றால் இருகரையெல்லாம் என் முகம்! இங்கிருந்த ஆறு எங்கே அதன் வளமெங்கே-என் நலஞ் சொன்ன பேர் எங்கே? கழிவு நீர் கால்வாயா-இது! கஷ்டகாலம் என் முன்னோர்கள் கொடுத்து வைத்தவர்கள்-அதை நீங்கள் கெடுத்து வைத்தீர்கள்! கனுக்கால் தண்ணீ ஆனாலும் கானக்கிடைக்காத அழகு இந்த ஆறு! கட்டை வண்டி பாதை யாக்கி...